பங்குச்சந்தை, பத்திரம் வேண்டாம் , இதுல முதலீடு பண்ணுங்க - ராபர்ட் கியோசாகி அறிவுரை..

சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நிலையற்ற தன்மை முதலீட்டாளர்கள் மத்தியில் குழப்பமான மனநிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் Rich Dad Poor Dad புத்தகத்தை எழுதிய ராபர்ட் கியோசாகி முக்கியமான ஒரு அறிவுரையை வழங்கியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடிக்கடி தன்னுடைய அரசின் இறக்குமதி வரி கொள்கையை மாற்றி வருகிரார். கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருண்நு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தினார். இதனால் உலக வர்த்தகமே ஸ்தம்பித்தது. குறிப்பாக சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக மோதல் உண்டானது. பின்னர் டிரம்ப் தன்னுடைய வரி விதிப்பு நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவிப்பு வெளியிட்டார்.

பங்குச்சந்தை, பத்திரம் வேண்டாம் , இதுல முதலீடு பண்ணுங்க -ராபர்ட் கியோசாகி அறிவுரை..

டிரம்ப் இப்படி அடிக்கடி தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி வருவது, சர்வதேச பொருளாதார சூழல் உள்ளிட்டவை முதலீட்டாளர்களை குழப்பத்திலேயே வைத்திருக்கின்றன.தங்கத்தில் முதலீடு செய்வதா, பங்குச்சந்தையில் முதலீடு செய்வதா என அனைவரும் குழம்பி போயுள்ளனர். இந்த சூழலில் தான் Rich Dad Poor Dad புத்தகத்தை எழுதிய ராபர்ட் கியோசாகி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு முக்கியமான அறிவுரையை வழங்கியுள்ளார்.

வரலாற்றிலேயே இல்லாத அளவு மிகப்பெரிய சரிவை நாம் காண போகிறோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். நான் எச்சரிக்கை விடுக்கவில்லை என நீங்கள் கூற கூடாது என்பதால் முன்கூட்டியே தெரிவிக்கிறேன் என்னுடைய 2013ஆம் ஆண்டு Rich Dad Poor Dad புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதை போலவே பெரிய நிதி சார்ந்த வீழ்ச்சியை நாம் காண போகிறோம் என கூறியுள்ளார். இந்த கோடை காலம் முழுவதும் இந்த வீழ்ச்சி தொடரும் என குறிப்பிட்டுள்ள அவர் பங்குச்சந்தை, பத்திரம் , ரியல் எஸ்டேட் அனைத்துமே சரிவடைய போகிறது என கூறியுள்ளார்.

பங்குச்சந்தையும் பத்திரங்களும் வீழ்ச்சி அடையும் மில்லியன் கணக்கான மக்கள்ங்கள் பணத்தை இழப்பார்கள். குறிப்பாக பேபி பூமர் தலைமுறையை சேர்ந்த பல முதலீட்டாளர்கள் தங்களின் முதலீட்டையும் சேமிப்பையும் இழக்க போகிறார்கள் என தன்னுடைய எக்ஸ் தள பதிவில் ராபர்ட் கியோசாகி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் இந்த ஒரு விஷயத்தை செய்பவர்கள் நிச்சயம் தப்பிக்க முடியும், அதுமட்டுமில்லை அவர்களால் பணக்காரராக முடியும் என கூறியுள்ளார். சரியாக திட்டமிட்டு புத்திசாலித்தனமாக முதலீடு செய்பவர்கள் தப்பித்து கொள்வார்கள் என சுட்டிக்காட்டியுள்ள அவர், தற்போதைக்கு வெள்ளியில் செய்யும் முதலீடே உங்களை பணக்காரனாக மாற்றும் என தெரிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டு முடிவதற்குள் வெள்ளியின் விலை மூன்று மடங்கு உயரும் என அவர் கணித்துள்ளார்.

பங்குச்சந்தை, பத்திரங்கள் சரியும் போது அனைவரும் தங்கம், வெள்ளி, பிட்காயின் ஆகியவற்றில் முதலீடு செய்ய முன்வருவார்கள். இதில் தங்கமும், பிட்காயினும் ஏற்கனவே உச்சத்தில் இருக்கின்றன. எனவே பெரும்பாலானவர்கள் வெள்ளியை நோக்கி்யே வருவார்கள் என கூறியுள்ளார். இன்றைய தினத்தில் வெள்ளியில் முதலீடு செய்வதே சிறந்தது , இந்த ஆண்டு முடிவதற்குள் இதன் மதிப்பு 3 மடங்கு உயரும் என கூறியுள்ளார். வெள்ளி தன்னுடைய வரலாறு காணாத உச்சத்தை விட 60% கீழ் தான் உள்ளது 35 டாலர்கள் என்று தான் விற்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

எனவே நான் அருகில் இருக்கும் தங்கம் , வெள்ளி விற்பனை கடைக்கு சென்று வெள்ளி வாங்க போகிறேன் என கூறியுள்ளார். ETFகளில் நான் முதலீடு செய்யப்போவதில்லை அதாவது சில்வர் ETFகளில் செய்யும் முதலீடுகள் போலி பணம் என குறிப்பிட்டுள்ளார். வரும்நாட்களில் நிதி ரீதியாக நீங்கள் எடுக்கும் முடிவுகளில் கவனமாக இருங்கள் என கூறியுள்ள கியோசாகி, இப்போது வெள்ளி ஒரு அவுன்ஸ் 35 டாலருக்கே விற்கப்படுகிறது அனைவராலும் வாங்க கூடிய ஒரு விலை தான் எனவே அதில் முதலீடு செய்து செல்வத்தை பெருக்குங்கள் என கூறியுள்ளார். நீங்கள் பணக்காரர் ஆவது ஏழையாவதும் உங்கள் முடிவில் தான் இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+