ஒவ்வொரு நாளும் அறிவியல் முன்னேறி வருகின்றது. நேற்றைய உண்மை, இன்றைய கானல் நீராக மாறி விட்டது. ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டே இருக்கும் அறிவியல், அதனுடன் சார்ந்த தொழில் நுட்பத்தையும் வளர்த்தே வருகின்றது. அறிவியலும் அதனுடன் இணைந்த தொழில் நுட்பமும், மக்களின் வாழ்க்கையை எளிதாக மாற்றி வருகின்றது.
எனினும், எந்த ஒரு முன்னேற்றமும் அதனுடன் பக்க விளைவுகளுடன் இணைந்தே வருகின்றன. முன்னேறிய தொழில் நுட்பமும், அதனுடன் இணைந்த பக்க விளைவுகளும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளே.
இந்த நிலையில் இந்திய மக்கள் மத்தியில் டிஜிட்டல் பரிவர்த்தனையும், டிஜிட்டல் பணப் புழக்கமும் பெரிய அளவில் உயர்ந்தது மட்டும் அல்லாமல் காகித பணத்தின் தேவை பெரிய அளவில் குறையும் எனக் கருத்து நிலவி வரும் வேளையில்.. டிஜிட்டல் பணம் பாதுகாப்பானதா என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
டிஜிட்டல் இந்தியா
இன்றைய டிஜிட்டல் இந்தியாவில், பணப் பரிமாற்றத்தில் பெரும் பகுதி டிஜிட்டல் மயமாகி வருகின்றது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் UPI பரிவர்த்தனை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. இன்றைய தேதியில், பல்வேறு நாடுகளும், UPI பரிவர்த்தனையை நடைமுறை படுத்தி வருகின்றன. ஆகவே UPI இன் எல்லைகள் பல நாடுகளுக்கு விரிவடைந்து வருகின்றன. மிகப் பெரிய வர்த்தக நிறுவனங்களில் மட்டுமல்ல, தெரு முனைக் கடைகளிலும் இன்று சர்வ சாதாரணமாக UPI பரிவர்த்தனை நடைபெற்று வருகின்றது. இதன் பெருக்கம், பல்வேறு பிரச்சனைகளை அதனுடன் அழைத்து வருகின்றது.
விஸ்வரூபம் எடுக்கும் UPI
UPI பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதால், அதனுடன் இணைந்த மோசடி பற்றிய புகார்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள். எனினும் இத்தகைய மோசடிகளைப் பற்றித் தெரிந்து கொள்வது, நாமும் இந்த மோசடி வலையில் விழுவதைத் தடுக்கும்.
முக்கியப் பேட்டி
மிகச் சமீபமாக MuffinPay நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான திலீப் செயின்பெர்க், மற்றும் சேஃப் செக்யூரிட்டி இணை நிறுவனர் ராகுல் தியாகி ஆகியோர் பிரபல டிவி-க்கு பேட்டி அளித்திருந்தனர். இந்தப் பேட்டியில் UPI மோசடி எவ்வாறு நடைபெறுகின்றது, இந்த மோசடிகளிலில் ஈடுபடுவர்கள் எந்தெந்த வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனர், மோசடிகளில் இருந்து தப்பிக்கும் வழிகள் குறித்து விரிவாக விவரித்துள்ளனர்.
ஆசைப் படாதே
சதுரங்க வேட்டை படத்தில் வருவது போல், ஒருவரை ஏமாற்ற வேண்டுமெனில், அவருடைய ஆசையைத் தூண்ட வேண்டும். நம்முடைய ஆசை அல்லது பேராசை இந்த மோசடிகளுக்கு வழி வகுக்கின்றது. ஒருவர் உங்களூக்குப் பணத்தை UPI மூலம் பணம் அனுப்புகின்றேன் என முதலில் ஆரம்பிப்பார். நீங்களும் பணத்திற்கு ஆசைப்பட்டுத் தலையசைப்பீர்கள். அப்பொழுது, அந்த நபர், பணத்தை அனுப்ப வேண்டும் எனில், உங்களுடைய பின் நம்பரை உள்ளிட வேண்டும் எனத் தெரிவிப்பார். அங்கு ஆரம்பிக்கும் உங்களுடைய கஷ்டகாலம். UPI பணப் பரிவர்த்தனைக்குப் பின் நம்பரை உள்ளிட வேண்டிய அவசியமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கண்ணால் காண்பது பொய்
மிகச் சமீபத்தில் நடைபெற்ற மற்றொரு சுவாரஸ்சியமான UPI மோசடி இது. ஒரு புத்திசாலி, தன்னுடைய QR கோடை, ஒரு கடையில் உள்ள QR கோடின் மீது ஒட்டி விட்டார். அந்தக் கடையில் ஒவ்வொரு முறை UPI பரிவர்த்தனை நடக்கும் பொழுதும், அந்த நபரின் வங்கிக் கணக்கிற்குப் பணம் சென்று விட்டது. எனவே நீங்கள் QR கோடைப் பயன்படுத்திப் பணம் செலுத்தும் பொழுதும், அதனுடன் இணைந்த நபர்களின் பெயரை சரி பார்க்கத் தவறாதீர்கள்.
புகார் எண்ணிக்கை
இது போன்ற மோசடிகளால், 2022 ஆம் ஆண்டின் Q1 மற்றும் Q2 இல் புகார்கள் அதிக அளவில் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு UPI மோசடி தொடர்பான புகார்களின் அளவு சுமார் 34 சதவீதம் அதிகரித்துள்ளது.
தாத்தா காலத்து நடைமுறை
இதுபோன்ற UPI மோசடிகள் குறித்துப் பேசும் பொழுது, Safe Security இணை நிறுவனர் ராகுல் தியாகி, மிகவும் சாதாரண மோசடியைய் பற்றியும் தெரிவித்துள்ளார். உங்களை ஏமாற்ற ரூம் போட்டு யோசிக்கத் தேவையில்லை. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ஒரு தாத்தா கால வழி முறையே போதுமானது.
லிங்க்-ஐ தொட்ட கெட்ட
ஒரு மோசடி நபர் உங்களுடைய PayTM அல்லது PhonePe அல்லது UPI-ஆல் இயங்கும் எந்தவொரு வாலட்டிலும் குறிப்பிடத்தக்க தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது என முதலில் தெரிவிப்பார். அந்தத் தொகையைப் பெற கீழே உள்ள குறிப்பிட்ட லிங்கை பயன்படுத்தவும் என ஒரு SMS ஐ உங்களுக்கு அனுப்புவார். அந்த லிங்கை நீங்கள் தப்பித் தவறி கிளிக் செய்தால், உங்களுடைய அனைத்து தரவுகளும் அந்த மோசடி நபர்களின் கைகளுக்குச் சென்று விடும். அதன் பிறகு என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications