இந்தியர்கள் பெரும்பாலும் சேமிப்பு , முதலீடு என்றால் தங்கத்தில் முதலீடு செய்வது அல்லது வங்கிகளில் டெபாசிட் செய்வது, இவ்விரண்டை மட்டுமே பாதுகாப்பான முதலீடாக கருதுகின்றனர். ஆனால் இவற்றை விட அதிக லாபம் தரும் பல்வேறு பாதுகாப்பான முதலீட்டு திட்டங்கள் இருக்கின்றன. அதில் மிகவும் பிரபலமானது பிபிஎஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி.
ஏன் பிபிஎஃப் முதலீடு சிறந்தது: பொது வருங்கால வைப்பு நிதி மத்திய அரசின் திட்டம் எனவே உங்கள் முதலீடு பாதுகாப்பாக இருக்கும் என்பது உறுதி. அதே போல வட்டியும் குறிப்பிட்ட விகிதத்திற்கு ஏற்ப உறுதியாக வந்து சேரும். எனவே ரிஸ்க் எடுக்காம முதலீடு செய்து லாபம் காண வேண்டும் என நினைப்பவர்களுக்கு உகந்தது.

ரூ.500இல் இருந்து முதலீடு செய்யலாம்: பொது வருங்கால வைப்பு நிதியில் ஓர் ஆண்டில் குறைந்தபட்சம் ரூ.500இல் இருந்து முதலீடு செய்யலாம். எனவே அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற முதலீட்டு திட்டம் இது. அதே போல அதிகபட்சமாக ஓராண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். ஒரே முறை ரொக்கமாக முதலீடு செய்யலாம் அல்லது மாதந்தோறும் பணம் செலுத்தலாம்.
முதலீட்டு காலம்: பொது வருங்கால வைப்பு நிதியில் லாக் இன் பீரியட் எனப்படும் முதலீட்டு காலம் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள். குறைந்தது 15 ஆண்டுகளுக்கு உங்கள் பணம் கைக்கு கிடைக்காது.
கூட்டு வட்டி என்பதால் லாபம் அதிகம்: பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை அரசு அவ்வப்போது மாற்றி வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஓர் ஆண்டுக்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது. இது கூட்டு வட்டி முறையில் கணக்கிடப்படுகிறது.
உதாரணத்திற்கு கௌசல்யா என்பவர் இந்த ஆண்டில் ரூ.10,000 முதலீடு செய்துள்ளார் என வைத்துக் கொள்வோம். இந்த ஆண்டு இறுதியில் வட்டியுடன் சேர்த்து அவரது தொகை 10,710ஆக கூட்டப்பட்டு அடுத்த ஆண்டில் வட்டி கணக்கிடப்படும்.
இப்படி 15 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் ரூ.10,000 முதலீடு செய்திருந்தால்
முதலீடு செய்த தொகை = ரூ.1,50,000
கிடைத்த வட்டி = ரூ.1,21,214
முதிர்வு தொகை = ரூ. 2,71,214
வரிச் சலுகை கிடைக்குமா?: ஆம், பொது வருங்கால வைப்பு நிதிக்கு வருமான சட்டப்பிரிவு 80சி-இன் கீழ் வரி விலக்கு பெற முடியும். ஓராண்டுக்கு அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை மட்டும் வரி விலக்கு கிடைக்கும்.
கிடைக்கும் வட்டிக்கு வரி உண்டா?: பொது வருங்கால வைப்பு நிதியின் மற்றொரு சிறப்பம்சம் இது. உங்களுக்கு கிடைக்கும் வட்டி தொகைக்கு வருமான வரி கிடையாது. முதிர்வடைந்த பின் உங்களுக்கு கிடைக்கும் ரொக்கத்திற்கும் வரி கிடையாது.
ஏதேனும் ஒரு வருடம் முதலீடு செய்யவில்லையெனில்?: கௌசல்யா என்பவர் 2020ஆம் ஆண்டில் இருந்து பொது வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்து வருகிறார். 2023ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு ரூ.10,000 முதலீடு செய்தார். ஆனால் 2024ஆம் ஆண்டு அவரிடம் ரூ.10,000 இல்லை. அதற்காக முதலீட்டை நிறுத்திவிட்டால், அவரது கணக்கு செயலிழந்துவிடும். குறைந்தபட்சம் ரூ.500 மட்டும் முதலீடு செய்து அவர் கணக்கை உயிர்ப்புடன் வைத்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் குறைந்தது 15 ஆண்டுகளுக்கும், ஆண்டுக்கு ஒரு முறையாவது முதலீடு செய்ய வேண்டும்.
பிபிஎஃப் பணத்தில் கடன் கிடைக்குமா?: உங்கள் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து அவசர தேவைக்கு கடன் கூட பெறலாம். கணக்கு தொடங்கி 3ஆவது மற்றும் 6ஆவது ஆண்டுகளுக்கு இடையில் கடன் வாங்கலாம். உங்கள் கணக்கில் மொத்தமுள்ள தொகையில் 25% கடன் கிடைக்கும். முதல் கடனை கட்டிய பின் 6ஆவது ஆண்டில் இரண்டாவது கடனும் வாங்கலாம். கணக்கு தொடங்கி 7 ஆண்டுகளுக்கு பின் பகுதியளவு பணத்தை எடுத்து கொள்ளும் வாய்ப்பும் அளிக்கப்படுகிறது.
எப்படி பிபிஎஃப் கணக்கு தொடங்குவது?: அஞ்சல் அலுவலகம் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் ஆக்சிஸ் , ஐசிஐசிஐ , ஹெச்டிஎஃப்சி போன்ற தனியார் வங்கிகளிலும் கணக்கு தொடங்கலாம். ஆதார், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை கொண்டு நேரடியாக வங்கிகளுக்கு சென்று கணக்கு தொடங்கலாம்.
ஆன்லைனிலும் தொடங்கலாம்: மொபைல் பேங்கிங் அல்லது இண்டர்நெட் பேங்கிங் லாகின் செய்து, Open a PPF Account என்பதை கிளிக் செய்யவும், உங்களுக்கு கணக்கு தொடங்கினால் 'Self Account' அல்லது 18 வயதுக்கு உட்பட்டவர்கள் எனில் ' Minor Account' என்பதை தேர்வு செய்து, தகவல்களை உள்ளீடு செய்து கணக்கை தொடங்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!



Click it and Unblock the Notifications