உலக அளவில் தங்கத்தை பின்னுக்கு தள்ளி வெள்ளியின் விலை நாளுக்கு நாள் வேகமாக உயர்ந்து வருகிறது. தொழில்துறை ரீதியாக அதற்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது ஆனால் போதிய சப்ளை இல்லை என்பது தான் வெள்ளியின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம். ஆனால் இந்த வெள்ளியின் விலை உயர்வுக்குப் பின்னால் மற்றொரு விஷயம் இருக்கிறது என்கிறார் பிரபல முதலீட்டு நிபுணரான ராபர்ட் கியோசாகி.
Rich Dad Poor Dad புத்தகத்தின் ஆசிரியரான ராபர்ட் கியோசாகி தன்னுடைய சமூக வலைதள பக்கங்கள் வாயிலாக தொடர்ச்சியாக முதலீடு சம்பந்தப்பட்ட அறிவுரைகளை வழங்கி வருகிறார். அவர் பல காலமாக கூறுவது உண்மையான சொத்துக்களில் முதலீடு செய்யுங்கள். அதாவது வெறுமனே பணமாகவே வைத்திருக்காமல் தங்கம் ,வெள்ளி போன்ற உலோகங்களாக வாங்கி வையுங்கள் எதிர்காலத்தில் அது உங்களை பெரிய செல்வந்தனாக மாற்றும் என தொடர்ச்சியாக கூறி வருகிறார்.

இந்த நிலையில் வெள்ளி சந்தையில் தற்போது நடக்கும் மிக முக்கியமான ஒரு நாடகத்தை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். உலக அளவில் வெள்ளி என்ற உலோகத்தின் மீதான வர்த்தகம் இரண்டு முறைகளில் நடக்கிறது. ஒன்று வெள்ளியை வெள்ளி கட்டிகளாகவும், நகைகளாகவும், நாணய வடிவிலும் physical வடிவில் வாங்குவது. மற்றொன்று டிஜிட்டல் வடிவில் அதாவது ஃபியூச்சர்ஸ் எனப்படும் காதித ஒப்பந்த வடிவில் வெள்ளியை வாங்குவது.
இதில் நிஜமாக நிஜமான வெள்ளியை வாங்குவதற்கான விலைக்கும் காகித வடிவத்தில் அதாவது ஃபியூச்சர்ஸ் வடிவில் வெள்ளியை வாங்கும் விலைக்கு இடையே பெரிய வித்தியாசம் உருவாகி இருப்பதாக ராபர்ட் கியோசாகி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வெள்ளியை காகித ஒப்பந்தங்கள் ஆகவோ அல்லது டிஜிட்டல் முறையிலோ தான் விற்பனை செய்கின்றன. முதலீட்டாளர்களும் சரி மக்களும் சரி காகித ஒப்பந்தங்கள் முறையில் தான் வெள்ளியில் முதலீடு செய்கிறார்கள். இது ஒரு வாக்குறுதி மட்டுமே இது உங்களுக்கு நிஜமான வெள்ளியை கொடுக்காது என்கிறார்.
அதாவது வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தங்களிடம் இல்லாத வெள்ளிக்கு ஃபியூச்சர்ஸ் ஒப்பந்தம் போட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்குகின்றன. நீங்கள் எனக்கு வெள்ளி கட்டியாக வேண்டும் என கேட்டால் இவற்றால் கொடுக்க முடியாது என்கிறார். ஃபியூச்சர்ஸ் போன்ற முறைகளில் வெள்ளி வாங்கும் போது அந்த ஒப்பந்த காலம் முடியும் போது உங்களுக்கு பணமாக தான் திரும்ப கிடைக்கும் தவிர வெள்ளியாக அது கிடைக்காது என்கிறார்.
மேற்கத்திய நாடுகளில் காகித வெள்ளியின் வர்த்தகம் அதிகரித்து இருக்கும் அதே வேளையில் சீனாவில் உண்மையான வெள்ளி உலோகத்தை வாங்குவதற்கு மக்கள் போட்டி போடுகிறார்கள் என கூறுகிறார். அதாவது சீனாவை சேர்ந்த மக்கள் வெள்ளியை கட்டிகளாக வாங்கி சேமிக்கிறார்கள் என தெரிவிக்கிறார். மேற்கத்திய சந்தைகளில் காகித முறையில் கிடைக்கும் விலையை விட ஒரு அவுன்ஸ் வெள்ளிக்கு கூடுதலாக 10 டாலர்கள் வரை அதிகமாக கொடுத்து வாங்க தொடங்கி இருக்கிறார்கள் என தெரிவிக்கிறார்.
ஒரு பொருளின் விலை அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரி தான் இருக்க வேண்டும். ஆனால் வெள்ளியை நிஜ உலோகமாக கையில் வாங்கும் போது ஒரு விலைக்கும் டிஜிட்டல் முறையில் பேப்பர் ஒப்பந்தங்களாக வாங்கும் போது ஒரு விலைக்கும். விற்கப்படுகிறது. இது செயற்கையாக உருவாக்கப்படும் ஒரு விலை என குறிப்பிடுகிறார்.
சீனா நிஜமான வெள்ளியை வாங்கி வைத்திருக்கிறது காகிதத்தில் இருக்கும் வெள்ளிக்கு மதிப்பு இல்லை, கையில் இருக்கும் வெள்ளியே உண்மையான சொத்து என கூறும் ராபர்ட் கியோசாகி சீனா விழித்து கொண்டது மேற்கத்திய மக்களும் விழித்து கொள்ள வேண்டும் என்கிறார். காகித வடிவ வெள்ளி விலை எப்போது வேண்டுமானாலும் சரியும் ஆனால் உண்மையாக உங்கள் கையில் இருக்கும் வெள்ளியின் விலை ஒருபோதும் சரியாது என்கிறார்.
More From GoodReturns

கோவை மக்களே இன்று தங்க நகை வாங்கும் பிளான் இருக்கா? இது தான் உங்க ஊர் கோல்டு ரேட்!!

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

கோவையில் இன்று தங்கம் விலை உயர்வு: இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

தொடர்ந்து உயரும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களிலும் விலை உயருமா?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

தங்கத்தை ஓரம் கட்டும் வெள்ளி! உலக நாடுகளின் பார்வை இப்போது இந்தியா பக்கம்..ஏன் இந்த மாற்றம்?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?



Click it and Unblock the Notifications