பணத்தை வெறுமனே வங்கி கணக்கிலேயே வைத்திருக்க கூடாது, அதனை சரியான திட்டங்களில் முதலீடு செய்தால் தான் அந்த பணம் நமக்கு பணத்தை சம்பாதித்து தரும் என்ற விழிப்புணர்வு தற்போது மக்களிடையே அதிகரித்திருக்கிறது.
சிலர் மாதந்தோறும் ஒரு கணிசமான தொகையை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்வார்கள், சிலர் கையில் வரக்கூடிய ரொக்க பணத்தை அப்படியே லம்ப்சம் முறையில் முதலீடு செய்து விடுவார்கள் . அந்த வகையில் ஓர் ஆண்டுக்கு ஒரு நபர் மாதம் 10,000 ரூபாயை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்கிறார் என்றால் ஓராண்டுக்கு மொத்தமாக அவர் 1.2 லட்சத்தை முதலீடு செய்திருப்பார்.

இதுவே மாதம் தோறும் முதலீடு செய்யாமல் அந்த 1.2 லட்சத்தை முதல் மாதமே மொத்தமாக முதலீடு செய்யலாம். அந்த வகையில் எஸ் ஐபி முதலீடு லாபம் தருமா அல்லது ஒரே முறை முதலீடு லாபம் தருமா என்பதை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
லம்ப்சம் முறையில் ஒரே முறையாக நாம் முதலீடு செய்யும் போது அந்த மொத்த பணமும் தொடக்கத்தில் இருந்தே காம்பவுண்டிங் முறையில் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்பு நமக்கு கிடைக்கிறது . அந்த வகையில் பார்த்தால் நீங்கள் மாதந்தோறும் 10,000 போடுவதை விட இந்த 1.2 லட்சம் ரூபாய் அடுத்த பதினோரு மாத காலத்திற்கும் உங்களுக்கு காம்பவுண்டிங் முறையில் வளர்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.
ஆனால் முதலீடு செய்யும் காலத்தை பொறுத்துதான் இது தீர்மானிக்கப்படுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர். நீங்கள் 1.2 லட்சம் ரூபாய் முதலீடு செய்யும் போது பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்து விட்டது என்றால் உடனடியாக உங்களுடைய யூனிட்டுகளின் வேல்யூ குறைந்துவிடும் . அந்த வகையில் லம்ப்சம் முதலீடு பங்குச்சந்தை ஏற்றத்தில் இருக்கும் போது லாபம் தருபவையாகவும் சரிந்து விட்டால் இழப்பை தருபவையாகவும் இருக்கும் என முதலீட்டு துறை நிபுணர்கள் கூறுகின்றனர் .

இதுவே பத்தாயிரம் ரூபாய் என பிரித்து பிரித்து முதலீடு செய்யும்போது ஒரு மாதம் சந்தை ஏறினாலும் அடுத்த மாதம் குறைந்தாலும் அதற்கு அடுத்த மாதம் ஏறினாலும் ஏற்ற இறக்கங்களை அந்த எஸ்ஐபி பேலன்ஸ் செய்து விடும் எனக் கூறுகின்றனர் . எனவே பங்குச்சந்தை ஏற்ற இறக்கமாக இருக்கிறது என்ற காலகட்டத்தில் லம்சம்ப் முதலீட்டை தவிர்க்க வேண்டும் எஸ்ஐபி முதலீடுகளுக்கு செல்லலாம்.
பங்குச்சந்தை நிச்சயம் இனி ஏற்றதில் தான் இருக்கப் போகிறது என்பது உறுதியாக தெரிந்து விடும் பட்சத்தில் லம்ப்சம் முறையில் முதலீடு செய்யலாம் என முதலீட்டு துறை நிபுணர்கள் அறிவுரை வழங்குகின்றனர். இந்தியாவின் பெரும்பாலான மக்கள் தொகைக்கு ஏற்ற முதலீடு எஸ்ஐபி முதலீடு தான். ஏனெனில் எஸ்ஐபி முறையில் நாம் முதலீடு செய்யும் போது மாதந்தோறும் நம் பட்ஜெட்டில் ஒரு தொகை அதற்கு ஒதுக்குவோம். மாதந்தோறும் நம் பணத்தை முதலீடு செய்வோம்.
அடுத்த 10 ஆண்டுகளுக்கு மேல் இலக்கு வைத்து முதலீடு செய்கிறீர்கள் என்றால் லம்ப்சம் மற்றும் எஸ்ஐபி இரண்டுமே லாபம் தரும். இதில் லம்ப்சம் முதலீடு சற்றே அதிக லாபத்தை வழங்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications