இந்தியாவில் பெரிய தொகையை உருவாக்குவது என்றால் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டும் அல்லது சிக்கலான சந்தை உத்திகளை கொண்டு முதலீடு செய்ய வேண்டும், இதற்காக தனியாக நேரம் ஒதுக்கி தலையை உடைத்துக்கொண்டு முதலீடு செய்ய வேண்டும் என்று பலர் நினைக்கின்றனர்.
ஆனால் சில சமயங்களில் சிறப்பான முதலீட்டு திட்டத்தை கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலையுற கதையாகிவிடுகிறது. ஆம் மிக எளிய விதிகளுடன், நிலையான முதலீட்டு பழக்கம் மற்றும் முற்றிலும் பாதுகாப்பான திட்டங்கள் மிகப்பெரிய செல்வத்தை உருவாக்குகின்றன.

உதாரணமார மாதம் ரூ.12,500 மட்டும் இந்த திட்டத்தில் முதலீடு செய்தால், உங்களுக்கு சுமார் 70 லட்சம் ரூபாய் அளவிலான கார்பஸ் உருவாக்க முடியும். இதுவும் நீங்கள் முதலீடு செய்யும் தொகையை காட்டிலும் 3.5 மடங்கு அதிக தொகை கிடைக்கும் என்றால் உங்களால் நம்ப முடியுமா..?
இதைவிட முக்கியமாக இந்த திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டு தொகைக்கு பங்குச்சந்தை சரியும் என்ற அச்சம் தேவையில்லை, சென்செக்ஸ் ஏற்ற இறக்கம் தொடர்பான பதற்றம் இருக்காது.முதலீடு இழப்பு பற்றி எந்த கவலையும் இல்லை.
அப்படிப்பட்ட திட்டம் தான் மத்திய அரசின் சுகன்யா சம்ரித்தி யோஜனா (Sukanya Samriddhi Yojana - SSY) திட்டம். இது பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க உருவாக்கப்பட்டது. குறிப்பாக நடுத்தர குடும்பங்களுக்கு இது மிகவும் உதவியாக உள்ளது. எப்படி வீட்டில் இருக்கும் மூத்த குடிமக்களை பயன்படுத்தி வங்கி வைப்பு நிதி போன்றவற்றில் கூடுதல் வருமானத்தை வாங்குகிறோமோ, அதேபோல தான் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தையும் பயன்படுத்த முதலீட்டு வல்லுனர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
இந்த திட்டத்தில் பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் குழந்தை பிறந்த நாள் முதல் 10 வயது வரையில் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் முதலீடு செய்யய கணக்கு தொடங்க மத்திய அரசு அனுமதிக்கிறது. ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.
இத்திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். முதலீடு 15 ஆண்டுகள் வரை தொடர வேண்டும். ஆனால் கணக்கு முதிர்ச்சி என்னவோ குழந்தையின் 21 வயதில் தான். இந்த நீண்ட இடைப்பட்ட கால அவகாசம் தான் வட்டி குட்டி போடுவதற்கும், குட்டிப்போட்ட வட்டி மீண்டும் குட்டிப்போடவும் மிகப்பெரிய வாய்ப்பை அளிக்கிறது.
மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் தொகை இதில் முதலீடு செய்ய முடியும். 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சமாக இருக்கும். தற்போதைய வட்டி விகிதம் 8.2% ஆக இருப்பதால், இந்த தொகை முதிர்ச்சி அடையும் போது சுமார் ரூ.69-70 லட்சமாக வளரும்.இது பெண் குழந்தையின் உயர்கல்வி அல்லது திருமணத்துக்கு வலுவான நிதி ஆதரவை அளிக்கும். இல்லையெனில் பெண் குழந்தை சொந்தமாக தொழில் துவங்கமும் இந்த தொகை பிற்காலத்தில் பயன்படும்.
இத்திட்டத்தின் மிகப்பெரிய சிறப்பே வரி சலுகைகள் தான், 80C பிரிவின் கீழ் முதலீட்டுக்கு வரி விலக்கு கிடைக்கும். வட்டி மற்றும் முதிர்ச்சி தொகை இரண்டும் வரி விலக்கு பெறும். மூன்று வகையிலும் வரி இல்லாத (triple tax-free) இந்த திட்டம் நடுத்தர குடும்பங்களுக்கு மிகவும் பாதுகாப்பானது.
அரசு ஆதரவுடன் இருப்பதால் முதலீட்டுக்கு எந்த ரிஸ்க்கும் இல்லை. சந்தை ஏற்ற இறக்கம், பணவீக்கம், பொருளாதார நெருக்கடி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் நிலையான வளர்ச்சி கிடைக்கும்.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் மகளின் எதிர்காலத்தை பாதுகாக்க இத்திட்டத்தை பயன்படுத்தலாம். மாதம் சிறிய தொகை முதலீடு செய்து நீண்டகாலத்தில் பெரிய தொகையை உருவாக்குவது எளிதான மற்றும் நம்பகமான வழி. சுகன்யா சம்ரித்தி யோஜனா இன்று இந்தியாவில் உள்ள மிகவும் பாதுகாப்பான மற்றும் லாபகரமான அரசு முதலீட்டு திட்டங்களில் ஒன்றாக திகழ்கிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்



Click it and Unblock the Notifications