மாசம் ரூ.30,000 கோடி.. எங்க போகிறது SIP முதலீடுகள்.. பாதியிலேயே ஓட்டம் பிடிக்கும் முதலீட்டாளர்கள்!

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு அமெரிக்க தேர்தல் முடிவுகளுக்கு பின்பு அதிரடியாக உயர்ந்துள்ளது, இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 2008 புள்ளிகள் உயர்ந்து 79,310 புள்ளிகளை எட்டியுள்ளது.

புதன்கிழமை வர்த்தகத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு அதிகமாக இருக்கும் கணிக்கப்படும் வேளையில், முதலீட்டு சந்தையில் மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயரும் என கணிக்கப்படுகிறது.

மாசம் ரூ.30,000 கோடி.. எங்க போகிறது SIP முதலீடுகள்.. பாதியிலேயே ஓட்டம் பிடிக்கும் முதலீட்டாளர்கள்!

இந்த நிலையில் மியூச்சவல் பண்ட் சந்தை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதை தெரியாமல் முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறார்கள் என சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இந்திய ஈக்விட்டி மியூச்சுவல் பண்ட்-ல் ஒவ்வொரு மாதமும் தலா 30000 கோடி ரூராய் அளவிலான முதலீடு செய்யப்படும் இதேவேளையில், பெரும் பகுதி தொகை இதே காலக்கட்டத்தில் வெளியேறுகிறது என்பதால் சந்தைக்கு வரும் முதலீடுகள் எங்கே செல்கிறது என்பதை கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

தோராயமாக ஒவ்வொரு மாதமும் 60 லட்சம் எஸ்பிஐ-கள் ரிஜிஸ்டர் செய்யப்படுகிறது, ஆனால் இதே காலக்கட்டத்தில் 50 லட்சம் எஸ்பிஐ-க்கள் கேன்சல் செய்யப்படுகிறது. இதேபோல் பெரும்பாலான மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் ஒவ்வொரு 12 முதல் 18 மாதங்களுக்கு பிறகு தங்களது மியூச்சுவல் ஃபண்டுகளை மாற்றுகின்றனர்.

இது மியூச்சுவல் பண்ட் சந்தையில் ஏற்படும் தொடர் தடுமாற்றத்தை காட்டுகிறது. குறிப்பாக, முதலீட்டாளர்கள் முந்தைய ஆண்டில் அதிக லாபம் கொடுத்த பண்டுகளைத் தேடி தேடி முதலீடு செய்வது வழக்கமாக கொண்டு உள்ளனர்.

Also Read

இப்படி மாற்றும் போது துறை சார்ந்த பண்டுகள், திமாட்டிக் பண்டுகள், ஸ்மால் கேப் - மிட் கேப் பண்டுகள் அதிகளவிலான முதலீட்டை பெறுகிறது. இதோடு ஃப்ளெக்ஸி கேப் மற்றும் மல்டி கேப் அதிகப்படியான கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படி மொத்த மியூச்சுவல் பண்ட் சந்தையும் சிறு வட்டத்திற்குள்ளேயே சுற்றிக்கொண்டு இருக்கிறது.

மாதம் 30000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது என்பது தலைப்பு செய்தியாக இருந்தாலும், எவ்வளவு முதலீடுகள் வெளியேறுகிறது, எவ்வளவு மறு முதலீடு செய்யப்படுகிறது என்பது குறித்த உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

இன்றைய மியூச்சவல் பண்ட் சந்தையில் பெரும்பாலான மக்கள் நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்வதற்குப் பதிலாக, குறுகிய காலத்தில் அதிக லாபத்தை பெறும் வண்ணம் அடிக்கடி ஃபண்டுகளை மாற்றுவதும், அதிக எண்ணிக்கையிலான பண்டுகளில் முதலீடு செய்வதும், முந்தைய ஆண்டில் அதிக வருமானம் கொடுத்த ஃபண்டுகளைத் தேடி முதலீடு செய்வது தான் அடிப்படை தேர்வு முறையாக வைத்துள்ளனர். இதனால் மியூச்சவல் பண்ட் முதலீட்டில் கிடைக்கும் காம்பவுண்டிங் லாபத்தை பெரும்பாலான முதலீட்டாளர்கள் தவரவிடுகிறார்கள்.

எனவே இந்திய முதலீட்டு சந்தையில் இகுக்கும் பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு 2-3 மல்டி கேப் பண்ட் - ப்ளெக்ஸி கேப் பண்ட்களில் தொடர்ந்து முதலீடு செய்வதும், அதை நீண்ட கால அடிப்படையில் பாலோ செய்தாலே அதிக லாபம் ஈட்டி தரக்கூடியதாக இருக்கும்.

இதேபோல் சந்தையில் பெரிய சரிவு ஏற்படும் போது முதலீட்டை வெளியேற்றும் பழக்கத்தை விடுத்து மோசமான காலக்கட்டத்திலும் தொடர்ந்து முதலீடு செய்வது மூலம் நீண்ட கால அடிப்படையில் பெரும் லாபத்தை தரும் என சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+