ஒரே FD-ல ரூ.5 லட்சம் Vs தனித்தனி FD-ல ரூ.1 லட்சம்! எதில் லாபம் அதிகம்? தெரிஞ்சுகிட்டா பணமழை தான்!

பிக்சட் டெபாசிட் திட்டங்களை பற்றி யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தலைமுறை தலைமுறையாக FD திட்டங்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். FD திட்டங்களில் மக்கள் விரும்பி முதலீடு செய்வதற்கான முதன்மையான காரணங்களில் ஒன்று அதற்கு கிடைக்கும் உத்தரவாதமான வருமானம். இந்த பதிவில் ஒருவரிடம் மொத்தமாக குறிப்பிட்ட தொகை இருந்தால், அதை எப்படி முதலீடு செய்ய வேண்டும்? பிரித்து முதலீடு செய்தால் லாபமா? அல்லது மொத்தமாக முதலீடு செய்தால் லாபமா? என்பதை தான் பார்க்க போகிறோம் .

சிலர் கையில் மொத்தமாக பணம் சேர்ந்தால் உடனே பிக்சட் டெபாசிட் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார்கள். இதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் எப்படி முதலீடு செய்தால் லாபம் என்பதை தெரிந்து கொண்டு டெபாசிட் செய்ய வேண்டும். அப்போதுதான் நம்மிடம் இருக்கும் பணத்திற்கு தாராளமான வருமானம் கிடைக்கும். இதை ஒரு உதாரணத்தோடு பார்ப்போம்.

உங்களிடம் ரூ.5 லட்சம் பணம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இதை ஒரு ஒரு லட்சமாக பிரித்து முதலீடு செய்யலாமா? அல்லது மொத்தமாக ரூ.5 லட்சத்தை ஒரே டெபாசிட்டில் வைக்கலாமா? இந்த இரண்டுக்குமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வருமானம் தான் கிடைக்கும். அப்புறம் ஏன் பிரித்து பிரித்து முதலீடு செய்ய வேண்டும் என்று தானே கேட்கிறீர்கள்? இது ஒவ்வொரு தனி நபரையும் பொறுத்து மாறுபடும்.

ஒரே FD-ல ரூ.5 லட்சம் Vs தனித்தனி FD-ல ரூ.1 லட்சம்! எதில் லாபம் அதிகம்? தெரிஞ்சுகிட்டா பணமழை தான்!

அதாவது உங்களிடம் ரூ.5 லட்சம் பணம் இருக்கிறது. அதை 10 ஆண்டுகளுக்கு FD-இல் போடுகிறீர்கள் என்றால், அதற்கு வங்கிகள் ஒவ்வொரு ஆண்டும் 7 சதவீதம் வரையிலான வட்டியை வழங்குகிறது. அப்படி வழங்கப்படும் போது பத்து ஆண்டுகள் கழித்து நீங்கள் முதலீடு செய்த அதே தொகை வருமானமாக கிடைக்கும். கிட்டத்தட்ட ரூ.5,00,799 கிடைக்க வாய்ப்புள்ளது. அப்படியானால் உங்களுடைய முதலீட்டுக்கு அப்படியே இன்னொரு மடங்கு வருமானம் கிடைக்கிறது. இதனால் 10,00,799 ரூபாயை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். ஒரு ஆண்டுக்கு 7 சதவீத வட்டி கிடைக்கும் பட்சத்தில் 10 ஆண்டுகளில் உங்களுடைய வருமானம் அப்படியே டபுள் ஆகிறது.

அதுவே ரூ.5 லட்சத்தை ஒரு ஒரு லட்சமாக பிரித்து முதலீடு செய்தால் என்ன நடக்கும் தெரியுமா? ரூ.5 லட்சம் தொகையை ஒவ்வொரு லட்சமாக பிரித்து 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், 10 ஆண்டுகள் முடிவில் 1,00,160 ரூபாய் கிடைக்கும். இதனால் ரூ.1 லட்சத்திற்கு 2,00,160 ரூபாய் வருமானம் பெறலாம். இப்படியே 5 FD-களையும் கூட்டினால் கிட்டத்தட்ட மொத்தமாக டெபாசிட் செய்த அளவுக்கு வருமானம் கிடைக்கும்.

இப்படி மொத்த டெபாசிட் மற்றும் பிரித்து பிரித்து டெபாசிட் செய்வதற்கு ஒரே மாதிரியான வருமானம் கிடைத்தாலும், நிதி நிபுணர்கள் பிரித்து பிரித்து முதலீடு செய்வதையே பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் இதில் பிளெக்ஸிபிலிட்டி அதிகம். அவசர காலங்களில் உங்களுக்கு உடனடியாக பணம் தேவைப்படுகிறது. அந்த சூழ்நிலையில் ரூ.5 லட்சம் மொத்தமாக டெபாசிட் செய்தீர்களே.. அதில் கை வைத்தால் வங்கிகள் அபராதம் விதிக்கும்.

அதுவே பிரித்து பிரித்து முதலீடு செய்த FD-யில் ரூ.1 லட்சத்தில் ரூ.50,000 பெற்றால், அந்த ஒரு FD-க்கு மட்டும் பெனால்டி கழித்துக் கொண்டு மீதி தொகை கிடைக்கும். இதனால் பிற FD திட்டங்கள் தொடர்ந்து வருமானத்தை ஈட்டி கொண்டிருக்கும்.

இன்னும் சில நிதி நிபுணர்கள் FD லேடரிங்கை பரிந்துரைக்கின்றனர். இது வேறொன்றுமில்லை ஒரு முதலீட்டு முறை அவ்வளவுதான். உதாரணமாக நீங்கள் 1 FD-யில் 1 ஆண்டுக்கு டெபாசிட் செய்திருக்கிறீர்கள். அந்த தொகை முதிர்வு பெற்ற பிறகு மீண்டும் அந்த தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். இப்படியே முதிர்வு பெறும் FD டெபாசிட்டை திரும்பத் திரும்ப வருமானம் ஈட்ட பயன்படுத்துவதே FD லேடரிங். இதனால் உங்களுடைய பணம் அசுர வேகத்தில் வளரும்.

எது எப்படியோ ஒவ்வொருவரின் நிதி தேவையும் சற்றே மாறுபடக் கூடியவை. எனவே உங்களுடைய நிதி தேவையை ஆராய்ந்து அதற்கு ஏற்றார் போல் டெபாசிட் செய்தால் சிறந்த வருமானத்தை பெற முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+