முதலீடு செய்ய பணம் இல்லை என்று சொல்வதை விட, இருக்கும் பணத்தை எங்கு போடுவது என்ற குழப்பமே பலரை ஏழையாக வைத்திருக்கிறது. உங்கள் வங்கிக் கணக்கிலோ அல்லது கையிலோ இருக்கும் அந்த 50,000 ரூபாய் தொகையானது வெறும் காகிதம் அல்ல. அது உங்கள் வியர்வை, உங்கள் சேமிப்பு மற்றும் உங்கள் குடும்பத்தின் எதிர்கால நம்பிக்கை. இன்று உங்கள் முன்னால் இரண்டு வாசல்கள் திறந்திருக்கின்றன. ஒன்று, ஒரு கடையை திறந்து முதலாளி ஆவது. மற்றொன்று புத்திசாலித்தனமாக நிதிச் சொத்துகளில் முதலீடு செய்து பணக்காரர் ஆவது.
இந்த இரண்டுமே லாபகரமானவை தான், ஆனால் இதில் உங்களுக்கான சரியான பாதை எது? சொந்தமாக ஒரு கடை வைத்தால், நீங்கள் தினமும் உழைக்க வேண்டும். வாடிக்கையாளர்களை சந்திக்க வேண்டும். ஆனால் அந்த உழைப்புக்கு நேரடி லாபம் உண்டு. அதுவே அந்த பணத்தை பங்குகள் அல்லது மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற நிதிச் சொத்துகளில் முதலீடு செய்தால், நீங்கள் தூங்கி கொண்டிருக்கும் போதும் உங்கள் பணம் உங்களுக்காக வேலை செய்யும். கூட்டு வட்டி எனும் மேஜிக், உங்கள் 50 ஆயிரத்தை எதிர்காலத்தில் பல லட்சங்களாக மாற்றும் வல்லமை கொண்டது. ஆனால் தற்போதைய சூழலில் இவ்விரண்டில் எது பெஸ்ட் என்பதே பலரின் கேள்வி.

பிழைப்புக்கும், பெருவாழ்வுக்கும் இடையிலான இந்த முக்கிய முடிவை நீங்கள் எப்படி எடுக்கப் போகிறீர்கள்? அனுபவம் இல்லாத கடையால் 50,000 நஷ்டமாகுமா? அல்லது சந்தை ஏற்ற இறக்கங்களால் உங்கள் முதலீடு கரையுமா? உங்கள் பாக்கெட்டை நிரப்ப போகும் அந்த முடிவு என்ன? எதில் ரிஸ்க் அதிகம், எதில் லாபம் அதிகம்? வாருங்கள் பார்க்கலாம்.
பணத்தை வெறுமனே முதலீடு செய்வது என்பது லாபகரமான ஒன்றாக இருக்காது. உங்கள் நேரத்தையும், திறமையையும் எங்கு முதலீடு செய்கிறீர்கள் என்பதில் தான் வெற்றி இருக்கிறது. இது குறித்து இந்தியா டுடேவில் வெளியான செய்தி ஒன்றில் நிபுணரான பிரசாந்த் மிஸ்ரா, உங்கள் பணத்தை தொழிலில் போடுவதை விட, நிதி சொத்துகளில் முதலீடு செய்யலாம் என்கிறார். அதாவது ஒரு கடையை திறந்தால் அதற்கென வாடகை, பராமரிப்பு செலவு என பல சுமைகள் இருக்கும். அதையெல்லாம் தாண்டி வருமானம் பெற்றால் தான் லாபம். ஆனால் நிதி முதலீடுகளில் அப்படி இல்லை. மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற முதலீடு செய்தால், அதன் மூலம் கூட்டு வட்டியின் பலனை பெற முடியும்.
இதே விஜய் ரவுண்டல் பாதுகாப்பான, அதேசமயம் எதிர்கால லாபம் பற்றி கூறுகிறார். ஐம்பதாயிரம் ரூபாயை வைத்து நேரடியாக நிலம் வாங்க முடியாது. ஆனால் REITs போன்ற திட்டங்கள் மூலம் முதலீடு செய்யலாம் அல்லது தங்க பத்திரங்களில் முதலீடு செய்யலாம் என்கிறார்.
சித்தார்த் மவுரியா சற்று மாறுபட்ட கோணத்தில், உங்களிடம் தனித்துவமான திறமை இருந்தால், அதில் முதலீடு செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டலாம். உதாரணமாக ஒரு டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சியோ அல்லது ஆன்லைன் விற்பனை தொழிலோ தொடங்கினால், உங்கள் உழைப்பால் அந்த 50,000 ரூபாயை மிக விரைவாக ஒரு லட்சமாக மாற்ற முடியும் என்கிறார். ஆக உங்களால் ரிஸ்க் எடுக்க முடியும் நேரமும் இருக்கிறது எனில், நிச்சயம் உங்கள் திறனில் முதலீடு செய்யலாம். இல்லை பாதுகாப்பு, நிம்மதியான உறக்கம் எனில் தங்க பத்திரங்கள் உள்ளிட்ட முதலீடுகள் கைகொடுக்கும். சற்று ரிஸ்க் இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் சிறந்த வருமானம் எனும்போது, பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.
இந்தியா போன்ற நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் உள்ள இந்தியாவில், 50,000 ரூபாய் என்பது பலரது வாழ்நாள் சேமிப்பு. அதை ஒரு கடையை திறந்து நஷ்டப்படுவதை விட, நிபுணர்கள் சொல்வது போல அதன் ஒரு பகுதியை முதலீட்டிலும், ஒரு பகுதியை சிறு தொழிலிலும் பிரித்து வைப்பதே புத்திசாலித்தனமான மாஸ்டர் பிளான் ஆக இருக்கும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!



Click it and Unblock the Notifications