ரூ50 கோடி வீடு,ஆடி கார் என பல..கே.எல்.ராகுல் அதியா ஷெட்டிக்கு குவிந்த பரிசுகளுக்கு வரி செலுத்தணுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் ஆன கே எல் ராகுல், அவரின் காதலி அதியா ஷெட்டியை சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

 

கோலகலமாக நடந்த திருமணம் என்பது மிக ஆடம்பரமாக மகாராஷ்டிராவில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் நடைபெற்றதாக கூறப்படுகின்றது.

நீண்டகாலமாகவே காதலித்து வந்த இந்த நட்சத்திர ஜோடிகள், தற்போது காதலுடன் மண வாழ்க்கையும் இணைந்துள்ளார். அதியா ஷெட்டி, பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியாவும் திரைபடங்களில் நடித்துள்ளார்.

எல் ஐ சி-யின் புதிய ஜீவன் ஆசாத் திட்டம்.. ரூ.5 லட்சம் பெற என்ன செய்யணும்? எல் ஐ சி-யின் புதிய ஜீவன் ஆசாத் திட்டம்.. ரூ.5 லட்சம் பெற என்ன செய்யணும்?

நட்சத்திர தம்பதிகள்

நட்சத்திர தம்பதிகள்

இந்த நட்சத்திர தம்பதிகளின் காதல் குறித்து தகவல்கள் கசிந்து வந்த நிலையில், இவர்கள் இருவரும் அது குறித்து வெளிப்படையாக கருத்து ஏதும் சொல்லவும் இல்லை.

மேலும் தற்போது திருமணத்தில் இரு வீட்டினரின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ள நிலையில், மற்றொரு நாள் வரவேற்பு நிகழ்ச்சி இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

விலையுயர்ந்த பரிசுகள்

விலையுயர்ந்த பரிசுகள்

இவர்களின் திருமணம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகின்றது. இந்த திருமணத்தின் மத்தியில் பல ஆடம்பர பொருட்கள் உள்பட பலவற்றை, இந்த நட்சத்திர தம்பதிகளின் உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும் விலையுயர்ந்த பல பரிசுகளை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

என்னென்ன பரிசுகள்?
 

என்னென்ன பரிசுகள்?

இந்த பரிசு பட்டியலில் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடு, சொகுசு வாகனங்கள் மற்றும் நகைகளை பெற்றுள்ளனராம்.

குறிப்பாக சுனில் ஷெட்டி தனது அன்பு மகளுக்காக 50 கோடி ரூபாய் மதிப்பிலான பிளாட்டையும், அவரது நெருங்கிய நண்பர் சல்மான் கான் 1.64 கோடி ரூபாய் மதிப்பிலாக சொகுசு காரினையும் பரிசாக வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

ரூ.1.5 கோடியில் வைர வளையல்

ரூ.1.5 கோடியில் வைர வளையல்

இதே நடிகர் ஜாக்கி ஷெராப் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஷோபார்ட் வாட்சினையும் பரிசாக கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதே அர்ஜீன் கபூர் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான வைர வளையலை பரிசாக கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோலியும் தோனியும் என்ன பரிசு?

கோலியும் தோனியும் என்ன பரிசு?

கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி மற்றும் எம் எஸ் தோனி ஆகியோர் விலையுயர்ந்த பரிசுகளை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ராகுலுக்கு முறையே 2.17 கோடி ரூபாய் மதிப்பிலான BMW காரையும், 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான கவாஸாகி நிஞ்சா பைக்கையும் பரிசாக அளித்துள்ளதாக தெரிகிறது.

வரி விதிக்கப்படுமா?

வரி விதிக்கப்படுமா?

இந்தியாவில் இந்த பரிசுகளுக்கு வரி விதிக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மற்ற ஆதாரங்கள் மூலம் 50,000 ரூபாய்க்கு மேலாக வரும் வருமானத்திற்கு வரி விதிக்கப்படுகின்றது. எனினும் இது திருமணத்திற்கு பொருந்தாது. திருமணத்திற்கு என சில வரி விலக்கு அளிக்கப்படுகின்றது.

வரி செலுத்த வேண்டுமா?

வரி செலுத்த வேண்டுமா?

பொதுவாக 50,000 ரூபாய்க்கு மேல், ஒரு நபரிடம் இருந்து ஒருவர், பொருளாகவோ அல்லது ரொக்கமாகவோ பரிசு பெற்றிருந்தால், அந்த அன்பளிப்பு வருமானமாக கருதப்பட்டு, அதற்கு வரி செலுத்த வேண்டும். ஆனால், ரத்த சொந்தங்களிடமிருந்து பெற்ற பணத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படும். அது, அசையும் அல்லது அசையா சொத்தாகவோ இருக்கலாம்.

வருமான வரி சட்டம்

வருமான வரி சட்டம்

இதே மற்றவர்களிடம் இருந்து பெரும் பரிசுகளுக்கு அதன் மதிப்பு, 50,000 ரூபாய்க்கு அதிகமாக இருந்தால், வருமான வரிச்சட்டத்தின் படி, அதற்கு வரி செலுத்த வேண்டும். தவிர சொத்தின் மார்க்கெட் விலையை விட குறைவாக விற்றால், அதற்கிடையே உள்ள வித்தியாசம் வருமானமாக கருதப்படும். உதாரணமாக, 40 லட்சம் ரூபாய் ஸ்டாம்ப் டூட்டி மதிப்புள்ள சொத்தை, ரூ.20 லட்சத்துக்கு விற்றால், மீதமுள்ள, 20 லட்சம் வெகுமதியாக கணக்கிடப்பட்டு வரி செலுத்த நேரிடும்.

யார் யாருக்கு பரிசுக்கு வரி விலக்கு?

யார் யாருக்கு பரிசுக்கு வரி விலக்கு?

உங்களுடைய மனைவி, உங்களுடைய சகோதர, சகோதரிகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை துணை. உங்கள் பெற்றோரின் சகோதர, சகோதரிகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை துணை, உங்களின் அல்லது உங்கள் வாழ்க்கைத் துணையின் நேரடியான உறவுமுறை (பெற்றோர், தாத்தா, பாட்டி, குழந்தைகள், பேரப்பிள்ளைகள்) அல்லது வழித்தோன்றல்கள் (குழந்தைகள், பேரப்பிள்ளைகள்) என அனைவரின் மூலம் கிடைக்கும் பரிசுக்கு வரி விலக்கு கிடைக்கும்.

என்னென்ன அன்பளிப்புகளுக்கு வரியில்லை?

என்னென்ன அன்பளிப்புகளுக்கு வரியில்லை?

திருமணத்தின்போது பெறும் அன்பளிப்புகள். வரையறுக்கப்பட்ட உறவினர்களிடமிருந்து பெறும் அன்பளிப்புகள். உயில் வாயிலாக பெறப்படும் பூர்வீக சொத்துகள். NRI கணக்கு வாயிலாக, வெளிநாடு வாழ் இந்தியர்கள், தங்கள் பெற்றோருக்கு அளிக்கும் அன்பளிப்பு. அன்பின் அடிப்படையில் எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் தரப்படும் வெகுமதிக்கு வரி விதிக்கப்படாது. எனினும் வருமான வரிச்சட்டத்தில் வரையறுக்கப்பட்ட உறவுகளாக இருக்க வேண்டும்.

வரி  யாருக்கு?

வரி யாருக்கு?

திருமண பரிசுகளுக்கு வரி விதிப்பதில் இருந்து விலக்கு அளிக்கும். எனினும் அது குடும்பம், உறவினர்களாக இருக்க வேண்டும். பிரிவு 56ன் கீழ் எந்த ஒரு பரிசும், வீடு, சொத்து, ரொக்கம், பங்கு அல்லது நகை போன்ற அசையாச் சொத்துகளுக்கு வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rs.50 crore house, Audi car and diamond bangle, costly car: KL rahul & Athiya shetty's wedding gifts are taxable?

Rs.50 crore house, Audi car and diamond bangle, costly car: KL rahul & Athiya shetty's wedding gifts are taxable?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X