மியூச்சுவல் ஃபண்டு SIP முதலீடுகள் நம்பகமான, அதேசமயம் அனைவராலும் முதலீடு செய்யக்கூடிய விருப்பமாக திகழ்கின்றன. இது தனி நபர்கள் தங்கள் செல்வத்தை அதிகரிக்க உதவும் ஒரு திட்டமாகும். முதலீட்டாளர்களுக்கு தங்கள் நிதி இலக்குகளை எளிதில் அடைய SIP-கள் உறுதுணையாக இருக்கும். அதோடு இதற்கு கூட்டு வட்டி வழங்கப்படுகிறது. கூட்டு வட்டியின் மூலம் காலப்போக்கில் உங்களுடைய முதலீடு நீங்கள் நினைத்துப் பார்த்ததைவிட அதிகமாக உயர்ந்திருக்கும். இந்த கட்டுரையில் 30 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.999 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம்? கிடைக்கும் என்பது குறித்து பார்ப்போம்.
SIP முதலீடுகளைப் பொருத்தவரையில் இவற்றுக்கு நீங்கள் மொத்தமாக முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மாதம் ஒரு முறை, காலாண்டுக்கு ஒரு முறை, அரையாண்டுக்கு ஒரு முறை என உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து முதலீடு செய்யலாம். இதற்கு கூட்டு வட்டி வழங்கப்படுகிறது என்று முன்பே பார்த்தோம். கூட்டு வட்டி என்பது முதலில் நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு வட்டி வழங்கப்படும். அந்த வட்டி அதன் பிறகு உங்களுடைய அசலுடன் சேர்க்கப்பட்டு, இரண்டுக்கும் சேர்த்து மீண்டும் வட்டி கணக்கிடப்படும். அதாவது வட்டிக்கும் வட்டி வழங்கப்படும். இப்படி வழங்கப்படுவதால் தொடர்ந்து உங்களுடைய வருமானம் அதிகரிக்கும்.

மாதம் ரூ.999 SIP முதலீடு செய்தால் எவ்வளவு லாபம்?: ஒரு முதலீட்டாளர் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மாதம் மாதம் ரூ.999 முதலீடு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தமாக ரூ.3,59,640 முதலீடு செய்திருப்பார். இதற்கு வருமானமாக 12 சதவீதம் வழங்கப்பட்டால், முதலீட்டாளரின் கார்பஸ் ரூ.35,26,384 லட்சத்தை எட்டும். இதன் மூலம் உங்களுக்கு வட்டி வருமானமாக மட்டும் ரூ. 31,66,744 கிடைக்கும்.
இதை வைத்து உங்களுக்கே தெரியும் வருமானம் எந்த அளவுக்கு அதிகரித்துள்ளது என்று.. சரி மாதம் ரூ.9,999 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம்? என்று பார்ப்போம்.
மாதம் ரூ.9999 SIP முதலீடு செய்தால் எவ்வளவு லாபம்?: ஒரு முதலீட்டாளர் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு ரூ.9999 முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். தொடர்ந்து 10 ஆண்டுகள் இதேபோல முதலீடு செய்தால் மொத்தமாக 10,91,880 ரூபாயை முதலீடு செய்திருப்பார். இதற்கு வட்டி வருமானமாக 12 சதவீதம் வழங்கப்பட்டால், இதன் மூலம் மொத்த வருமானம் ரூ.21,14,053 ஆக அதிகரிக்கும். இன்னும் தெளிவாக சொல்லப் போனால் உங்களுடைய முதலீடு அப்படியே இரட்டிப்பாகும்.
SIP முதலீடுகளுக்கு கூட்டு வட்டி வழங்கப்படுவதால், உங்களுடைய வருமானம் காலப்போக்கில் அதிகரிக்கிறது, மேலே ஒரு உதாரணத்திற்காக ரூ.999 மற்றும் ரூ.9999-ஐ எடுத்துக் கொண்டோம். நீங்கள் உங்களுக்கு ஏற்ற தொகையை முதலீடு செய்யலாம். அதற்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை ஆன்லைன் கால்குலேட்டர்களைப் பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.
இந்தப் பதிவில் கூறப்பட்டுள்ள விவரங்கள் SIP முதலீடுகளின் மூலம் உங்களுடைய வருமானம் எப்படி அதிகரிக்கிறது என்பதை எடுத்துக்காட்டவே. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. மேலே கூறப்பட்டுள்ள விவரங்களை வைத்து நாங்கள் உங்களை முதலீடு முடிவுகள் எடுக்கச் சொல்லவில்லை. எனவே எந்த ஒரு திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்பும் உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.


Click it and Unblock the Notifications