பணத்தை நம் வங்கியின் சேமிப்பு கணக்கிலேயே வைத்திருந்தால் அது எந்த வளர்ச்சியும் அடையாது. சரியான திட்டங்களில் அதனை முதலீடு செய்ய வேண்டும். அந்த வகையில் பணத்தை முதலீடு செய்யும் போது அதற்கென இலக்கு நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.
ஓய்வுகாலம், குழந்தையின் எதிர்காலம், சொந்தமாக வீடு வாங்குவது என பல இலக்குகளைக் கொண்டுதான் முதலீட்டையே திட்டமிட வேண்டும். இவ்வாறு திட்டமிட்டு நாம் முதலீடு செய்யும் போது, அந்த முதலீடு எப்போது இரட்டிப்பாகும் என்பதையும் கணக்கிட்டு வைப்பது அவசியம். அந்த வகையில் நம் முதலீடுகள் எத்தனை ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என்பதை அறிய ஒரு எளிய விதிமுறை உள்ளது. உலகம் முழுவதுமே இந்த பொதுவான ஃபார்முலாவை கொண்டு தான் முதலீட்டு நிபுணர்கள் இதனை கணக்கிடுகிறார்கள்.

ஆங்கிலத்தில் இதனை Rule of 72 என அழைக்கிறார்கள். எந்த ஒரு திட்டத்திலும் நீங்கள் முதலீடு செய்யும் தொகை எத்தனை ஆண்டுகளில் இரண்டு மடங்காக மாறும் என்பதை இது துல்லியமாக காட்டும். அதாவது நீங்கள் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்து இருக்கிறீர்கள் என்றால் அது எப்பொழுது 2 லட்சமாக மாறும் என்பதை கணக்கிட உதவுவது தான் Rule of 72.
மணி என்பவர் தன் கையில் இருக்கும் 5 லட்சம் ரூபாய் பணத்தை ஒரு நிலையான வைப்பு தொகையில் முதலீடு செய்கிறார் என வைத்து கொள்வோம். அந்த பணத்திற்கு ஆண்டுக்கு 8 சதவீத வட்டி கிடைக்கிறது எனும் போது 72/8 என வகுக்க வேண்டும். அப்பொழுது நமக்கு கிடைக்கும் விடை 9. எனவே மணியின் 5 லட்சம் முதலீடு 9 ஆண்டுகளில் 10 லட்சமாக மாறும்.
உங்களின் முதலீடு எவ்வளவு வட்டியை எனக்கு தருகிறது என தெரிகிறது எனும்போது மிக எளிதாக இந்த விதியை பயன்படுத்தி உங்களின் பணம் எப்போது இரட்டிப்பாகும் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
உங்கள் பணம் வங்கி சேமிப்பு கணக்கில் உள்ளது அதற்கு ஆண்டுக்கு 4% வட்டி கிடைத்தால் 72/4 = 18. அடுத்த 18 ஆண்டுகளில் அந்த பணம் இரட்டிப்பாகும் என அர்த்தம். இதுவே மியூச்சுவல் ஃபண்டு 13% லாபம் தருகிறது என்றால் 5.5 ஆண்டுகளில் உங்களின் பணம் இரட்டிப்பாகும். ஆனால் மியூச்சுவல் ஃபண்டு, பங்குச்சந்தை லாபங்கள் அப்போதைய சந்தை நிலவரத்தை பொறுத்தது. ஆனால் எஃப்டி, பத்திரங்கள் ஆகியவற்றில் இதனை துல்லியமாக கணக்கிடலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

