இந்திய ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக வரலாறு காணாத அளவுக்கு சரிந்து வரும் நிலையில், இந்திய முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை வெளிநாட்டு சொத்துகளில் முதலீடு செய்து Diversify செய்வது தற்போது மிகவும் அவசியமாகியுள்ளது.
ஏற்கனவே பணவீக்கத்தால் நாம் செய்யும் முதலீடுகள் மதிப்பை இழந்து வரும் வேளையில், ரூபாய் மதிப்பு குறையும்போது ஏற்படும் இழப்பை எளிதாக டாலர் அடிப்படையிலான சொத்துக்களில் முதலீடு செய்வதன் மூலம் ஈடுகட்ட முடியும். அதோடு வெளிநாட்டில் படிப்பு, பயணம், மருத்துவம் போன்ற செலவுகளையும் எளிதாக சமாளிக்கலாம். இதைத்தான் சர்வதேச பல்வகைமைப்படுத்தல் (international diversification) என்கிறோம்.

ஏன் வெளிநாட்டு முதலீடு அவசியம்?
பல ஆண்டுகளாக இந்திய ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக தொடர்ந்து மதிப்பிழந்து வருகிறது. இதனால் இந்திய சந்தையில் மட்டும் நீங்கள் முதலீடு செய்திருந்தால் உங்கள் பணத்தின் வாங்கும் திறன் குறைந்திருக்கும். இதேவேளையில் நீங்கள் டாலர் சொத்துகளை சேர்த்திருந்தால் ரூபாய் மதிப்பு சரியும்போது டாலர் மதிப்பு ஏறுவதால் இழப்பை எளிதாக ஈடு செய்ய திருக்க முடியும். இது உங்கள் போர்ட்போலியோவிற்கு கவசமாகவும் செயல்படுகிறது.
காலம் கடந்தாலும், இப்போது இத்தகைய முதலீட்டு முயற்சிகளை நீங்கள் தேர்வு செய்யலாம். ஆம் முதலீட்டாளர்கள் உள்நாட்டில் தனது முதலீட்டை பல்வகைப்படுத்துவதை தாண்டி அதை வெளிநாட்டிலும் குறிப்பாக இந்திய ரூபாய் விட பலமாக இருக்கும் நாணயத்தில் முதலீடு செய்வது மூலம் அதிக லாபம் கிடைக்கும், இதேபோல் ரூபாய் மதிப்பு சரிவால் ஏற்படும் பாதிப்பை எளிதாக ஈடு செய்ய முடியும்.
வெளிநாட்டில் முதலீடு செய்ய எந்தெந்த வழிகள் உள்ளன?
- இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் ஃபீடர் ஃபண்டுகள் (Feeder funds) மூலம் வெளிநாட்டு ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.
- வெஸ்டெட், இண்ட்மணி போன்ற ஆப் மூலம் அமெரிக்கா, ஐரோப்பா பங்குகளையும் ETF கூட நேரடியாக வாங்கலாம்.
- கிஃப்ட் சிட்டியில் ரூ.4.2 லட்சம் (5,000 டாலர்) முதல் தொடங்கும் ரீடைல் அவுட்பவுண்ட் ஃபண்டுகள் உள்ளன, தற்போது டிஎஸ்பி மட்டுமே இத்தகைய சேவையை தொடங்கியுள்ளது.
- அதேபோல் ETFகள் மூலம் S&P 500, நாஸ்டாக் போன்ற உலக பிரபல குறியீடுகளில் முதலீடு செய்யலாம். இவை குறிப்பிட்ட ஃபண்ட் மேலாளரை பொறுத்து செயல்படாமல் குறியீட்டை பின்பற்றுவதால் ரிஸ்க் அளவும் குறைவு.
வருமான வரி விதிகள் என்ன சொல்கின்றன?
வெளிநாட்டு சொத்துகளை வருமான வரி ரிட்டர்னில் பிரிவு FA-இல் காட்ட வேண்டும், ஆனால் இது கிஃப்ட் சிட்டி வாயிலான முதலீடுகளுக்கு இது தேவையில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வெளிநாட்டு சொத்துக்களை வைத்திருந்தால் 12.5 சதவீத நீண்டகால மூலதன வரி செலுத்த வேண்டும்.
10 லட்சத்துக்கு மேல் அனுப்பினால் 20 சதவீத TCS பிடிக்கப்படும் - இதை வரி க்ளெய்ம் செய்து திரும்பப் பெறலாம். ரிசர்வ் வங்கியின் LRS திட்டப்படி ஒரு ஆண்டுக்கு 2.5 லட்சம் டாலர் (சுமார் ரூ.2.1 கோடி) வரை அனுப்பலாம்.
முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
பாதுகாப்பாக முதலீடு செய்ய வேண்டுமாயின் முக்கிய பங்குச்சந்தை குறியீடுகளை பின்பற்றும் ETF அல்லது இன்டெக்ஸ் ஃபண்டுகளை முதலில் தேர்ந்தெடுங்கள் - இவை நிலையான வருமானம் தரும். ஆக்டிவ் ஃபண்டுகள் சில சமயம் குறைவாகவே வருமானம் தரலாம்.
ஒரே ஃபண்ட் மேலாளரை அல்லது நேரடி வெளிநாட்டு பங்குகளை தவிர்ப்பது நல்லது. உங்கள் மொத்த முதலீட்டில் 10 முதல் 30 சதவீதம் வரை படிப்படியாக வெளிநாட்டில் சந்தையில் முதலீடு செய்யுங்கள். அடிக்கடி வாங்கி விற்றால் வரி அதிகமாகும் என்பதால் நீண்டகாலம் வைத்திருப்பதே சிறந்ததாக இருக்கும்.
ரூபாய் தொடர்ந்து பலவீனமாகும் போக்கை கருத்தில் கொண்டு, இன்றைய முதலீட்டு சூழலில் வெளிநாட்டு முதலீடு இல்லையெனில் போர்ட்ஃபோலியோ பாதுகாப்பு குறைவாகவே இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சிறிய தொகை தொடங்கி, படிப்படியாக கட்டமைப்பது உத்தமம். ஆரம்பத்திலேயே பெரும் தொகையை முதலீடு செய்ய வேண்டாம்.
More From GoodReturns

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

50 பைசா சரிவு.. ஆடிப்போன இந்தியா.. ஈரான் போரால் இனி என்னவெல்லாம் நடக்குமோ..?!



Click it and Unblock the Notifications