பொதுவாக மூத்த குடிமக்கள் முதலீடு என வரும் போது ரிஸ்க் எடுக்க விரும்ப மாட்டார்கள். ஏனெனில் அதற்கான வயது இது இல்லை. கையில் இருக்கும் பணத்தை வைத்து கொண்டு சிறப்பாக வாழ்வது தான் அவர்களின் விருப்பமாக இருக்கும். அவர்களுக்கான ஒரு அட்டகாசமான முதலீடு திட்டம் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்: மணி என்பவர் அண்மையில் தனது வேலையில் இருந்து ஓய்வுபெற்றார். வயது 61. ஓய்வு பலன்களின் ஒரு பகுதியாக அவருக்கு ரூ. 20 லட்சம் கிடைத்திருக்கிறது. இதனை கொண்டு பாதுகாப்பான முறையில் முதலீடு செய்ய வேண்டும் என நினைக்கிறார். அவருக்கு வழிகாட்டலாம் வாங்க..

8.2% வட்டி அளிக்கக் கூடிய திட்டம்: மத்திய அரசு மூத்த குடிமக்களுக்காக வழங்க கூடிய ஒரு பிரத்யேக சேமிப்பு திட்டமான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தையே மணி அவர்களுக்கு நாம் பரிந்துரைக்கிறோம். ஏனெனில் இது மத்திய அரசின் திட்டம் என்பதால் பணம் பாதுகாப்பாக இருக்கும்.
அஞ்சல் அலுவலகம் அல்லது வங்கிகளில் எளிதாக இதற்கான கணக்கை தொடங்கலாம். ஆண்டுக்கு 8.2% வட்டி கிடைக்கும் என்பதால் லாபகரமானது. ஒவ்வொரு காலாண்டிற்கும்( ஏப்ரல், ஜூலை, அக்டோபர், ஜனவரி ) வட்டி தொகையானது மணியின் கணக்கில் வந்துவிடும்.
மணி இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியுமா?: 60 வயது பூர்த்தி அடைந்த இந்தியர்கள் மட்டுமே திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். மேலும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், பாதுகாப்பு துறை ஊழியர்கள் 55 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓய்வுபலன்கள் பெற்ற 1 மாதத்தில் விண்ணப்பிக்க முடியும். மணி 61 வயதுடையவர் என்பதால் இதில் முதலீடு செய்யலாம்.
இந்த திட்டத்தால் என்ன லாபம்?: மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தில் மணி தனது 20 லட்சம் ரூபாயை முதலீடு செய்கிறார் என வைத்துக் கொள்வோம்.
முதலீட்டு தொகை = ரூ.20,00,000
முதலீட்டு காலம் = 5 ஆண்டுகள்
வட்டி = ரூ.1,64,000/ ஆண்டுக்கு (8.2%)
காலாண்டுக்கு ஒரு முறை கிடைக்கும் தொகை=ரூ.41,000
ரூ.20 லட்சத்துக்கு கிடைக்கும் மொத்த வட்டி = ரூ. 8,20,000
இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மணி ஒவ்வொரு காலாண்டிற்கும் ரூ.41,000ஐ வட்டியாக தனது கணக்கில் பெறுகிறார். இதன் மூலம் ஓய்வு கால பணத்தை முதலீடு செய்து வருமானமும் பெறுகிறார்.
கணக்கு தொடங்க என்ன ஆவணங்கள் தேவை?
மணி அருகில் உள்ள அஞ்சல் அலுவலகம் சென்று இதற்கு விண்ணப்பம் செய்யலாம்.
பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் இரண்டு
அடையாள சான்று (பான் கார்டு, வாக்காளர் அட்டை, ஆதார் கார்டு அல்லது பாஸ்போர்ட்)
முகவரி சான்று ( ஆதார் கார்டு)
வயது சான்று ( பான் கார்டு, பிறப்பு சான்றிதழ் அல்லது மூத்த குடிமக்கள் அட்டை, வாக்காளர் அட்டை)
வரிச் சலுகை கிடைக்குமா?
இந்த முதலீட்டை வருமான வரி சட்டத்தின் கீழ் 80சி பிரிவில் சுட்டிக்காட்டி ரூ.1.5 லட்சம் வரை மணியால் வருமான வரி சலுகை கோர முடியும். இந்த திட்டத்தில் குறைந்த பட்சம் ரூ.1000 தொடங்கி அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications