EMI-இல் மொபைல் வாங்கப் போறீங்களா.. தப்பி தவறியும் இந்த 5 தவறை செஞ்சிடாதீங்க!

சென்னை: இன்று ஸ்மார்ட்போன்கள் இல்லாத ஆட்களை பார்ப்பதற்கு அரிதாக உள்ளது. அந்த அளவு ஸ்மார்ட்போனின் ஆதிக்கம் மக்களிடையே இருக்கிறது. அதுவும் மொபைல் பிரியராக இருந்தால், ஏதேனும் பிராண்ட் புதிதாக ஒரு மொபைலை அறிமுகம் செய்துவிட்டால் போதும், அடித்த பிடித்துக் கொண்டு அந்த மொபைலை வாங்கி விட வேண்டும் என்று எண்ணுவர். இதுபோன்ற நபர்கள் EMI மூலம் ஃபோன்களை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் அப்படி போன் வாங்கும் போது சில விஷயங்களை செய்யக்கூடாது. அவை என்ன என்பது குறித்து விரிவாக இந்தப் பதிவில் பார்ப்போம்.

EMI என்றால் ஆங்கிலத்தில் "Equated Monthly Instalment" என்று கூறுவர். இது ஒவ்வொரு மாதத்திலும் ஒரு குறிப்பிட்ட தேதியில் கடன் வாங்குபவர் செலுத்தும் கட்டணத் தொகையாகும். ஒவ்வொரு மாதமும் வட்டி மற்றும் அசல் இரண்டையும் செலுத்த EMI-கள் உதவுகின்றன.

 EMI-இல் மொபைல் வாங்கப் போறீங்களா.. தப்பி தவறியும் இந்த 5 தவறை செஞ்சிடாதீங்க!

முழு பணத்தையும் கட்டி மொபைல் வாங்க முடியாதவர்கள், இந்த EMI ஆப்ஷனை பயன்படுத்திக் கொள்ளலாம். EMI மொபைல்களுக்கு மட்டுமல்ல. உங்களுக்கு தேவையான எலக்ட்ரானிக் சாமான்கள், வீடு, கார், பைக் என எது வாங்க வேண்டுமானாலும் சரி.. இந்த ஆப்ஷனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தியாவில் EMI-இல் மொபைல் ஃபோனை வாங்கும்போது தவிர்க்க வேண்டிய 5 தவறுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சிறந்த டீலுக்காக பிற விவரங்களைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பது: பல்வேறு கடைகள் மற்றும் நிதி நிறுவனங்கள் செல்போன்களுக்கு EMI கடன்களை வழங்குகின்றன. கடனைத் தேர்வு செய்வதற்கு முன்பு, வட்டி விகிதங்கள், கட்டணங்கள் மற்றும் பிற நிபந்தனைகளை ஒப்பிட்டு பார்க்க வேண்டியது அவசியம்.

உங்கள் பட்ஜெட்டை கருத்தில் கொள்ளாமல் இருப்பது: EMI திட்டத்தில் செல்போனை வாங்க முடியும் என்பதற்காக, பட்ஜெட்டை கருத்தில் கொள்ளாமல் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிலர் EMI இருப்பதால் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்து வாங்கி விடுவார்கள். அதன் பின் கட்டும் போது தான் அருமை தெரியும்.

புதிய செல்போனுக்கான பட்ஜெட்டை திட்டமிடும் போது, வட்டி மற்றும் கட்டணங்கள் உட்பட கடனின் மொத்த செலவையும் கணக்கிடுவது அவசியம்.

விதிமுறைகளை படிக்காமல் இருப்பது: எந்த கடன் ஒப்பந்தத்திலும் கையெழுத்து போடுவதற்கு முன், விதிமுறைகளை கவனமாக படிக்க வேண்டியது அவசியம். வட்டி விகிதம், கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்களை புரிந்து கொள்ளுங்கள். EMI திட்டத்தின் கால அளவு, அபராதம் அனைத்தையும் தெரிந்து கொண்டு கடன் வாங்குங்கள்.

குறைந்த மாத தவணைக்காக கடன் காலத்தை நீட்டிப்பது: குறைந்த மாத தவணை பெற கடன் காலத்தை நீட்டிப்பது எளிதானதாகத் தோன்றலாம். ஆனால், இதன் காரணமாக நீங்கள் அதிக வட்டி செலுத்த வேண்டி இருக்கும்.

இன்சூரன்ஸ் பெறாமல் இருப்பது: நீங்கள் EMI செலுத்தும் போது உங்கள் ஃபோன் சேதமடைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ, கடனைச் செலுத்துவதற்கு நீங்கள் பொறுப்பாவீர்கள். இந்த எதிர்பாராத செலவுகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஃபோன் இன்ஷூரன்ஸ் பெறுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+