இன்றைய காலக்கட்டத்தில் சேமிப்பு என்பது அனைவருக்குமே முக்கியமானது. ஏனெனில் ஏதேனும் அவசரத் தேவைகள் ஏற்படும் போது நிதி நெருக்கடியில் சிக்காமல் இருக்க சிறு தொகையை சேமிக்க வேண்டும். ஆனால் பலராலும் மொத்தமாக சேமிக்க முடியாது. இதன் காரணமாக பலர் தேர்ந்தெடுப்பது ரெக்கரிங் டெபாசிட் (RD) திட்டங்களைத் தான். RD திட்டம் பல்வேறு வங்கிகளிலும் வழங்கப்படுகிறது. அப்படி SBI வங்கியில் வழங்கப்படும் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் மாதம் மாதம் 1,000 ரூபாய் டெபாசிட் செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்? என்பதைப் பார்ப்போம்.
குறைந்தபட்ச முதலீடு: SBI RD திட்டத்தில் குறைந்தபட்சமாக மாத மாதம் 100 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். உங்கள் வசதிக்கு ஏற்ப ரூ.1000, ரூ.5000 அல்லது அதற்கு மேலான தொகையையும் டெபாசிட் செய்யலாம்.

முதிர்வுக் காலம்: SBI வழங்கும் RD திட்டத்தின் முதிர்வுக் காலம் 12 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை இருக்கும்.
வட்டி விகிதம்: வட்டி விகிதங்கள் பொதுவாக 6.5 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரை வெவ்வேறு காலகட்டங்களைப் பொறுத்து வழங்கப்படுகிறது. மாதம் மாதம் முதலீடு செய்வதால் 100 ரூபாயிலிருந்து எளிதில் முதலீடு செய்யலாம். இதன் மூலம் சாமானியர்களும் தங்களுடைய வருமானத்தை காலப்போக்கில் அதிகரிக்க முடியும். அரசாங்கத்தால் வழங்கப்படும் வங்கி திட்டமாக இருப்பதால் உங்களுடைய முதலீடுகளுக்கு முற்றிலும் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
SBI வழங்கும் RD திட்டத்தில் மாதம் மாதம் 1000 ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம்?: மாத மாதம் 1,000 ரூபாய் என்ற வீதத்தில் RD திட்டத்தில் டெபாசிட் செய்து வர 7 சதவீத வட்டு விகிதத்தில் 10 ஆண்டுகள் கழித்து 1,20,000 ரூபாயை முதலீடு செய்திருப்பீர்கள். இதற்கு வட்டி வருமானமாக ரூ.53,699 கிடைக்கும். இதன் மூலம் மொத்த முதிர்வுத் தொகை ரூ.1,73,699 ரூபாய் கிடைக்கும்.
RD திட்டத்தின் முக்கிய நன்மைகளில் ஒன்று கூட்டு வட்டி. கூட்டு வட்டியின் மூலம் நீங்கள் பலன்களைப் பெறலாம். அதோடு உங்கள் RD கணக்கில் திரட்டப்பட்ட தொகைக்கு எதிராக கடனும் பெறலாம்.

எஸ்பிஐ-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று முதலீடு செய்யலாம். அப்படி இல்லை என்னும் பட்சத்தில் நேரடியாக உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளைக்குச் சென்று முதலீடு செய்யலாம்.


Click it and Unblock the Notifications