நீண்ட கால கடன்களான வீட்டுக் கடன்களை திரும்பி செலுத்தும்போது, நாம் வாங்கிய அசலை விட அதிகமாக வட்டியாக செலுத்தி இருப்போம். கையில் எதிர்பாராமல் கூடுதல் பணம் கிடைக்கும்போது, அதை முன்கூட்டியே செலுத்தி வட்டியைக் குறைக்கலாம். ஆனால், ஒருமுறை பிரீபேமென்ட் செய்துவிட்டால், அந்தப் பணத்தை அவசர தேவைக்கு திரும்ப எடுக்க முடியாது. இந்தச் சிக்கலுக்குத் தீர்வாகவும், உங்கள் பணத்தை நீங்கள் தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளும் வசதியுடனும், வட்டி சுமையைக் குறைக்கும் ஒரு அற்புதமான திட்டம் தான் வீட்டுக் கடன் ஓவர் டிராஃப்ட் (OD) வசதி ஆகும்.
OD கணக்கு எப்படி வேலை செய்கிறது..?: வீட்டுக் கடன் ஓவர் டிராஃப்ட் என்பது, உங்கள் வழக்கமான வீட்டுக் கடனுடன் வங்கிகள் இணைக்கும் ஒரு சிறப்புச் சேமிப்புக் கணக்கு போன்றது.

வட்டி குறையும் மந்திரம் : உங்களுக்குச் சம்பளம் அல்லது வேறு வகையில் பணம் கிடைக்கும்போது, அதை இந்த OD கணக்கில் போட்டு வைக்கலாம். நீங்கள் செலுத்தும் இந்த தொகை, உங்கள் வீட்டுக் கடனின் அசல் தொகையில் இருந்து கழிக்கப்பட்டுவிடும். இதனால், மீதி உள்ள அசல் தொகைக்கு மட்டுமே வங்கி வட்டி கணக்கிடும். இதன் விளைவாக, நீங்கள் செலுத்த வேண்டிய வட்டித் தொகை கணிசமாக குறையும், மேலும் உங்கள் கடன் காலமும் குறையும்.
உங்கள் கட்டுப்பாட்டில் பணம் இருக்கும் : இந்த OD வசதியின் மிகச் சிறந்த அம்சம் என்னவென்றால், அவசர மருத்துவ செலவு அல்லது எதிர்பாராத செலவு வரும்போது, நீங்கள் உங்கள் OD கணக்கில் போட்ட பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் எடுத்த தொகைக்கு மட்டுமே மீண்டும் வட்டி விதிக்கப்படும்.
இதுகுறித்து BankBazaar.com தலைமைச் செயல் அதிகாரி ஆதில் ஷெட்டி கூறுகையில், "நீங்கள் OD கணக்கில் பணத்தைப் போடும்போது வட்டி குறைகிறது. நீங்கள் பணத்தை எடுக்கும்போது வட்டி மீண்டும் அதிகரிக்கிறது. எனினும், நீண்ட காலத்தில் நீங்கள் தொடர்ந்து பணத்தை OD கணக்கில் வைத்திருந்தால், வட்டிச் சேமிப்பு மிகப்பெரியதாக இருக்கும்" என்கிறார்.
எவ்வளவு வட்டி குறையும்..?: வீட்டுக் கடன் ஓவர் டிராஃப்ட் (OD) வசதியை தேர்ந்தெடுப்பதன் மூலம் எவ்வளவு வட்டிச் செலவைக் குறைக்க முடியும் என்பதை ஒரு எளிய உதாரணத்துடன் நிதியியல் வல்லுநர்கள் விளக்கி கூறுகின்றனர். அதாவது, ரூ.60 லட்சம் வீட்டுக் கடனை 20 ஆண்டுகளுக்கு எடுத்துள்ள இரு கடன் வாங்கியவர்களை இந்த ஒப்பீட்டுக்காக எடுத்துக் கொள்வோம். இரண்டு நபர்களிடமும் அவசர காலத் தேவைக்காக ரூ.8 லட்சம் உபரி பணம் கையில் உள்ளது.
இதில், முதல் நபர் வழக்கமான வீட்டுக் கடனையும், இரண்டாவது நபர் OD வசதி கொண்ட வீட்டுக் கடனையும் தேர்வு செய்கிறார். வழக்கமான வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 8.5% ஆகவும், OD வசதியுடன் கூடிய வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 9% ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான வீட்டுக் கடன் வாங்கியவர், தனது ரூ.8 லட்சம் உபரிப் பணத்தை ஆண்டுக்கு 2.5% வட்டி ஈட்டும் சேமிப்புக் கணக்கில் அவசர நிதியாக போட்டு வைக்கிறார். 20 ஆண்டுகள் முடிவில், இந்தக் கடன் வாங்கியவர் சுமார் ரூ.65 லட்சம் வட்டியாகச் செலுத்துவார். சேமிப்புக் கணக்கில் இருந்து கிடைக்கும் சுமார் ரூ.5 லட்சம் வட்டியை கழித்தால், இவருடைய நிகர வட்டிச் செலவு சுமார் ரூ.60 லட்சம் ஆகும். அவசரத் தேவைக்குப் பணத்தை அணுகும் வசதி இருந்தாலும், வட்டிச் சுமையைக் குறைக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைக்கவில்லை.
இரண்டாவது நபர், OD வசதியைப் பயன்படுத்துபவர், தனது ரூ.8 லட்சம் உபரிப் பணத்தை நேரடியாக OD கணக்கில் டெபாசிட் செய்கிறார். இந்த ரூ.8 லட்சம் பணம், வட்டி கணக்கிடப்படும் அசல் தொகையான ரூ.60 லட்சத்தில் இருந்து உடனடியாகக் குறைக்கப்படுகிறது. இதனால், வட்டி ரூ.52 லட்சத்திற்கு மட்டுமே கணக்கிடப்படுகிறது. இதன் விளைவாக, அதிக வட்டி விகிதத்தைக் (9%) கொண்டிருந்த போதிலும், இந்த OD கடன் வாங்கியவர் மொத்தமாகச் செலுத்தும் வட்டி சுமார் ரூ.44 லட்சம் மட்டுமேயாகும். மேலும், இவருடைய கடனைத் திருப்பிச் செலுத்தும் காலமும் சுமார் 5 ஆண்டுகள் குறைகிறது.
யாருக்கு OD சிறந்தது..?: நிலையான உபரி வருமானம் : தொடர்ந்து உபரி வருமானம் வரும் இரட்டை வருமானம் உள்ள குடும்பங்கள் அல்லது மாதந்தோறும் உபரிப் பணம் பெறும் வியாபாரிகளுக்கு இது மிகச் சிறந்தது.
நிதி ஒழுக்கம் உள்ளவர்கள் : இதில் வட்டி விகிதம் சற்றே அதிகமாக இருப்பதால், தேவையில்லாமல் பணத்தை OD கணக்கில் இருந்து எடுக்காமல், கடும் நிதி ஒழுக்கத்துடன் செயல்படக் கூடியவர்களுக்கு மட்டுமே இது லாபகரமானதாகும்.
நிதி ஒழுக்கம் இல்லாதவர்கள் அல்லது நிலையான வருமானம் இல்லாதவர்கள், OD-யின் அதிக வட்டி விகிதத்தால் லாபத்தை இழக்க நேரிடும் என்று நிதி ஆலோசகர்கள் எச்சரிக்கின்றனர்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications