பெரும்பாலான மிடில் கிளாஸ் இந்தியருக்கு ரூ. 51 கோடி ரூபாயுடன் ஓய்வு பெறுவது என்பது கனவு போல தோன்றலாம். ஆனால் 23 வயதில் மாத வருமானமாக ரூ.60,000 பெரும் ஒருவர் 22,000 சேமித்தாலே இந்த இலக்கை எளிதில் எட்டி விடலாம். அதாவது சம்பளத்தில் 37 சதவீதம் சேமித்தால் போதுமானது. இதற்கு குறுகிய கால தியாகங்கள் தேவைப்படலாம். உதாரணமாக தங்களுடைய தேவையை சற்று ஒதுக்கி வைப்பது அல்லது பிடித்த விஷயங்களுக்கு செலவு செய்யாமல் சேமிப்பது போன்ற சிறு சிறு விஷயங்களை தியாகம் செய்தால் கண்டிப்பாக இந்த தொகை சாத்தியமே.
இதற்கு எப்படி சேமிக்க வேண்டும்? என்ற விவரங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம். மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி முதலீடுகள் என்பது தற்போதுள்ள இளைஞர்கள் பலரால் முதலீடு செய்யப்படும் ஒரு திட்டமாகும். இதற்கு கூட்டு வட்டி வழங்கப்படுகிறது. இதன் காரணமாக உங்களுடைய வருமானம் காலப்போக்கில் அதிகரிக்கும்.

முதலீட்டை பொருத்தவரையில் ஒரே ஒரு மந்திரத்தை தான் கடைபிடிக்க வேண்டும். அது நீண்டகால முதலீடு. நீண்டகால முதலீடு செய்யும் போது உங்களுடைய வருமானம் அதற்கு தகுந்தார் போல் வளரும். ரூ.51 கோடி ரிட்டயர்மென்ட் கார்பசை உருவாக்க நீங்கள் தொடர்ந்து 37 ஆண்டுகள் சேமிக்க வேண்டும்.
முதல் வருடம்: ஒருவர் மாதம் மாதம் ரூ.22,000 ரூபாயை சேமிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இதற்கு வருடாந்திர வட்டி விகிதமாக 12 சதவீதம் வழங்கப்படுகிறது என்றால், அந்த வருடம் முழுவதும் 2,64,000 ரூபாயை முதலீடு செய்திருப்பார். இதற்கு வட்டி வருமானமாக 17,805 கிடைத்திருக்கும். இதன் மூலம் மொத்த முதிர்வு தொகை 2,81,805-ஆக இருக்கும்.
10 வருடங்கள்: SIP முதலீடுகளைப் பொறுத்தவரையில் நீங்கள் மாதம் மாதம் நிலையான தொகையையும் முதலீடு செய்யலாம். அதற்கு மேல் உங்களுடைய சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க உங்கள் முதலீட்டையும் குறிப்பிட்ட சதவீதம் அதிகரித்து முதலீடு செய்யலாம். இப்படி செய்தால் உங்களுடைய வருமானம் இன்னும் அதிகமாக வளரும். உதாரணமாக ஒவ்வொரு வருடமும் உங்களுடைய முதலீட்டைப் 10 சதவீதம் அதிகரிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் 10 வருடங்கள் கழித்து மாதத்திற்கு ரூ.51,875 செலுத்த வேண்டும். இதற்கு வட்டி வருமானம் வழங்கப்பட்டு 12 சதவீதம் வழங்கப்பட்டால், உங்களுடைய வருமானம் ரூ.74,23,518-ஆக உயரும்.
20 வருடங்கள்: தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் 10% முதலீட்டை அதிகரித்து முதலீடு செய்தால் உங்களுடைய எஸ்ஐபி முதலீடு 20-வது ஆண்டில் ரூ.1,34,550-ஆக உயரும். இதற்கும் 12 சதவீத வட்டி வருமானம் வழங்கப்பட்டால் உங்களுடைய வருமானம் ரூ.4,37,55,174-ஆக இருக்கும்.
30 வருடங்கள்: 30 வருடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10% முதலீட்டை அதிகரித்தால் 30-ஆவது வருடத்தில், உங்களுடைய எஸ்ஐபி முதலீடு ரூ.3,48,988-ஆக உயரும். இதற்கும் 12 சதவீத வட்டி வருமானம் வழங்கப்பட்டால் உங்களுடைய வருமானம் ரூ.19,43,50,719-ஆக இருக்கும்.
37 வருடங்கள்: 37 வருடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10% முதலீட்டை அதிகரித்தால் 37-ஆவது வருடத்தில், உங்களுடைய எஸ்ஐபி முதலீடு ரூ.6,80,079-ஆக உயரும். இதற்கும் 12 சதவீத வட்டி வருமானம் வழங்கப்பட்டால் உங்களுடைய வருமானம் ரூ.51,39,39,722-ஆக இருக்கும்.
ரூ.50 கோடி என்பது ஒரு கனவு போல தோன்றும் நபர்களுக்காகத்தான் இந்த பதிவு. இந்த முறையை பயன்படுத்தி சேமித்தால் நீங்கள் நினைக்கும் தொகையை குவிக்க முடியும். ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபிகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை என்பதை நினைவில் கொள்ளவும். எந்த ஒரு முதலீட்டு முடிவுகளையும் எடுப்பதற்கு முன்பு உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யுங்கள்.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications