வருடம் 15600 வரி சேமிப்பு, மாதம் 150000 வருமானம்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்..!

நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (NPS) கணக்கு மூலம் ஒய்வு பெற்ற பின்பு செலவுகளைச் சமாளிக்கவும், நிதி பிரச்சனைகள் இல்லாமல் ஓய்வூதியத்தின் மூலம் வாழ்வதற்கு ஏற்க திட்டம் மட்டும் அல்ல, மாத சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு வரியைச் சேமிக்கவும் முக்கியக் கருவியாக உள்ளது.

குறிப்பாக நீங்க 30 சதவீத வருமான வரிப் பிரிவில் இருந்தால் பெரும் தொகையை வருமான வரியில் இருந்து சேமிக்க முடியும்.

வருமான வரி

வருமான வரி

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80CCD (1B) இன் கீழ், NPS சந்தாதாரர்களுக்கு ஒரு பிரத்தியேக வரிச் சலுகை கிடைக்கும். இந்தப் பிரிவின் கீழ் 50,000 ரூபாய் வரையிலான முதலீட்டுக்குக் கூடுதல் வரி விலக்கு பெற முடியும்.

30 சதவீத வருமான வரிப் பிரிவு

30 சதவீத வருமான வரிப் பிரிவு

இந்த வரிச் சலுகை 80C இன் கீழ் ரூ.1.5 லட்சம் வரம்பைத் தாண்டி பெற கூடியது என்பதால் 30 சதவீத வருமான வரிப் பிரிவில் இருப்போருக்கு இதன் மூலம் கூடுதல் நன்மை கிடைக்கும். மேலும் வரிச் சலுகை Tier I NPS கணக்கில் முதலீடு செய்தால் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

15,600 வரை சேமிப்பு

15,600 வரை சேமிப்பு

இந்த நிலையில் 30% வரி வரம்பில் உள்ள ஒருவர், வருமான வரி சட்ட பிரிவு 80C இன் கீழ் ரூ. 1.5 லட்சம் வரம்பை ஏற்கனவே முடித்திருந்தால், NPS இல் ரூ. 50,000 முதலீடு செய்வதன் மூலம் ரூ. 15,600 வரை சேமிக்க முடியும்.

 ரிடையர்மென்ட் வாழ்க்கை

ரிடையர்மென்ட் வாழ்க்கை

விலைவாசி உயர்வைப் பார்த்தால் நாளுக்கு நாள் ரிடையர்மென்ட் வாழ்க்கை மீது பயம் அதிகரித்துக் கொண்டே போகிறது என்றால் மிகையில்லை. வாழ்வின் முக்கியமான காலகட்டத்தில் சரியான முதலீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்து ஓய்வுக் காலத்தைப் பாதுகாப்பானதாக மாற்றிக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

1.5 லட்சம் ரூபாய் வருமானம்

1.5 லட்சம் ரூபாய் வருமானம்

இப்படி இருக்கையில் மாதம் 1.5 லட்சம் ரூபாய் வருமானம் பெற NPS போன்ற திட்டங்கள் மிகவும் பாதுகாப்பானதாகவும், நம்பகத்தன்மை உடன் இருக்கும். மாதம் 1.5 லட்சம் ரூபாய் வருமானம் வேண்டும் என்றால் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்.

தேசிய ஓய்வூதிய திட்டம்

தேசிய ஓய்வூதிய திட்டம்

தேசிய ஓய்வூதிய திட்டம் என்பது நீண்ட கால அடிப்படையிலான திட்டம். இத்திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்தைப் பங்குச்சந்தை மற்றும் கடன் சந்தையிலும் பிரித்துப் பல அளவுகளில் முதலீடு செய்ய முடியும். இதன் மூலம் ஒருவர் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப ரிஸ்க்-ன் அளவை தீர்மானிக்க முடிவது மட்டும் அல்லாமல் திட்டமிட்டு லாபத்தை அதிகரிக்க முடியும்.

60:40 முதலீடு பிரிப்பு

60:40 முதலீடு பிரிப்பு

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் நீங்கள் செய்யும் முதலீட்டை உதாரணமாக 60:40 ஆகப் பங்குச்சந்தை கடன் சந்தையில் பிரித்து முதலீடு செய்யும் பட்சத்தில் கட்டாயம் 10 சதவீதம் வருடாந்திர லாபம் கிடைக்கும். இந்த லாபம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் அளவு 80 சதவீதமாக மாறும் பட்சத்தில் லாபம் இன்னும் அதிகரிக்கும்.

10000 ரூபாய்

10000 ரூபாய்

இப்படியிருக்கையில் மாதம் 10000 ரூபாய் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் ஒருவர்30 வருடத்திற்கு 60:40 முதலீட்டு விகிதத்துடன் முதலீடு செய்யும் பட்சத்தில் ஒய்வு அடைந்த பின்பு lumpsum தொகையாக 1,36,75,952 ரூபாயும், தேர்வு செய்யப்பட்ட 40 சதவீதம் annunity தொகையை வைத்து மாதம் 45,587 ரூபாய் பென்ஷன் தொகை பெற முடியும்.

மாதம் 1.5 லட்சம் ரூபாய்

மாதம் 1.5 லட்சம் ரூபாய்

இந்த நிலையில் நீங்கள் lumpsum தொகை வேண்டாம் என முடிவு செய்தால் systematic withdrawal plan (SWP) திட்டத்தைத் தேர்வு செய்து lumpsum தொகையில் இருந்து 25 வருடத்திற்கு ஒவ்வொரு மாதமும் 1.03 லட்சம் ரூபாய் பெற முடியும். இதன் மூலம் annunity தொகை சேர்த்து மாதம் 1.5 லட்சம் ரூபாயை பென்ஷன் தொகையைப் பெற முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+