இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு முதலீடு என்றாலே நாம் முதலில் நினைப்பது வங்கி டெபாசிட் தான். ஆனால் அதனை காட்டிலும் லாபகரமான சிறந்த பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களும் உள்ளன.
குறிப்பாக பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு என யோசிக்கும்போதும், இன்னும் பாதுகாப்பான கூடுதலான முதலீடுகளை செய்ய வேண்டும்.
ஏனெனில் அவர்களின் உயர்கல்வி மற்றும் திருமணம், மற்றும் பிற செலவுகள் என அதிகம் தேவையிருக்கும். அதிலும் பணவீக்கத்தினை கருத்தில் கொள்ளும்போது, நம் நினைக்கும் தொகையை விட கூடுதலாக சேமிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றோம்.
எது பெஸ்ட்
பொதுவாக பெண் குழந்தைகளுக்கான முதலீடு என்றாலே நினைவுக்கு வருவது சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் தான். ஆனால் இது மட்டும் உங்கள் இலக்கினை அடைய போதுமானதா? என்றால் நிச்சயம் இல்லை. ஆக நீண்டகால நோக்கில் உங்கள் இலக்கினை அடைய ஈக்விட்டி பங்குகள் தான் பெஸ்ட் ஆப்சன் எனலாம்..
பெரியளவிலான கார்பஸ்
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தினை பொறுத்தவரையில், நீண்டகால நோக்கில் சந்தை அபாயம் இல்லாத ஒரு முதலீட்டு திட்டமாக பார்க்கப்படுகிறது. எனினும் இதில் வருமானம் என்பது நீங்கள் எதிர்பார்த்த அளவு கிடைக்குமா? என்பது கஷ்டம் தான். ஆனால் நீண்டகால நோக்கில் பெரியளவிலான கார்பஸினை அடைய ஈக்விட்டி ஃபண்டுகள் சிறந்த தேர்வாக இருக்கும்.
வட்டி விகிதம் எவ்வளவு?
சுகன்யா சம்ரிதி யோஜனா யோஜனா திட்டத்தினை பொறுத்தவரையில் வட்டி விகிதம் தற்போதைய நிலவரப்படி 7.6% ஆகும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் பணவீக்கம் இதனையும் மிஞ்சினாலும் சொல்வதற்கில்லை. ஆக அதற்கு ஏற்ற சாய்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் தான். இன்றைய காலகட்டத்தில் நல்ல வட்டி விகிதம் கிடைக்கிறது என சுகன்யா சம்ரிதியை மட்டும் செய்கின்றனர்.
பிரித்து முதலீடு செய்யுங்கள்
ஆனால் அது உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்கு போதுமானதா என்றால் நிச்சயம் இல்லை. ஆக உங்களது முதலீட்டில் 75% சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்திலும், 25% ஈக்விட்டி ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாம். அப்படி இல்லாவிட்டாலும் சுகன்யா சம்ரிதி அல்லது பொது வருங்கால வைப்பு நிதி, ஈக்விட்டி ஃபண்டுகள் என பிரித்து செய்யலாம்.
இடையில் நிறுத்தாமல் செய்யலாம்
அப்படி இல்லை என்றால் 50: 50 என்ற விகிதத்தில் கூட பிரித்தும் முதலீடு செய்யலாம். அதேபோல நீங்கல் செலுத்தும் தொகையை எஸ் ஐ பியாக தொடர்ந்து செய்யலாம். இது ஈக்விட்டி ஃபண்டுகளானலும் சரி, சுகன்யா திட்டமானலும் சரி. அதனை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.
இலக்கு எவ்வளவு?
உங்கள் முதலீட்டுத் தொகையை எப்படிப் பிரிப்பது என்பதற்கு ஒரு உதாரணம், உங்கள் பெண் குழந்தைக்கு வயது 2 - 3 என வைத்துக் கொள்வோம். அவளின் 17 - 18 வயதில் 75 லட்சம் கார்ப்பஸ் இலக்கு என வைத்துக் கொள்வோம். ஆக இதற்காக நீங்கள் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் வாருங்கள் பார்க்கலாம்.
எவ்வளவு முதலீடு
உங்களது முதலீடு 75: 25 ஈக்விட்டி: கடன் என்ற விகிதத்தில் இருக்க்லலாம். இதில் ஈக்விட்டில் இருந்து 11 - 12% வருமானம் என வைத்துக் கொள்வோம். இதே கடனில் 7-8% வருமானம் என வைத்துக் கொள்வோம். இதற்காக நீங்கள் மாதம் 16,000 - 18000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். ஆரம்பத்தில் அதிகம் ஈக்விட்டிகளில் முதலீடு செய்தாலும், எதிர்காலத்தில் ஈக்விட்டி ஃபண்டுகளை குறைத்துக் கொள்ளலாம். அதற்கு பதிலாக டெப்ட் ஃபண்ட் என மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் உங்களது இலக்கினை அடைய முடியும்.
More From GoodReturns

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!



Click it and Unblock the Notifications