சென்னை: வங்கிக் கணக்கில் பணம் இருந்தும் அதை எடுக்க முடியாத நிலையில் என்றாவது இருந்திருக்கிறீர்களா.. இது பலருக்கும் அடிக்கடி நிகழும் ஒரு சாதாரண விஷயம் ஆகி போய்விட்டது. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவர் திடீரென இறந்து விட்டால் அவரின் இறப்புக்குப் பிறகு அவரின் வங்கி கணக்கில் இருக்கும் பணம் என்ன ஆகும் என்று நாம் யோசித்துப் பார்த்திருக்க மாட்டோம். அப்படி ஒருவர் இறந்தால் அவருடைய வங்கிக் கணக்கை என்ன செய்வது என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.
இறந்தவரின் வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் பற்றிய தகவல்கள் அவருடைய பிள்ளைகளுக்கோ அல்லது பெற்றோருக்கோ தெரியும் பொழுது அந்த பணத்தை எப்படி திரும்ப பெற முடியும்.. என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இந்த மாதிரியான எல்லா குழப்பங்களுக்கும் நிச்சயமாக தீர்வுகள் உள்ளன.

வங்கிகளில் இருக்கும் சேவிங்ஸ் அக்கவுண்ட் அல்லது கரண்ட் அக்கவுண்டில் 10 வருடங்களுக்கு மேல் எந்தப் பணப்பரிமாற்றமும் இல்லாமல் இருந்தால் அல்லது FD (கால வைப்பு) முதிர்ச்சித் தேதி முடிந்து 10 வருடங்கள் சென்ற பிறகும் அந்தத் தொகையை அக்கவுண்ட்டில் இருந்து எடுக்காமல் இருந்தால், அந்தக் கணக்கில் இருக்கும் தொகையானது ரிசர்வ் வங்கியின் DEAF(Depositor Education and Awareness Fund) அக்கவுன்ட்டுக்கு மாற்றப்பட்டுவிடும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இதுவரை ரிசர்வ் வங்கியின் DEAF அக்கவுண்ட்டிற்கு ரூ. 35,012 கோடி ரூபாய் மாற்றப்பட்டுள்ளது. இவற்றுள் SBI, BNB மற்றும் கனரா வங்கியிலிருந்து தலா ரூ.8086, ரூ.5,340, ரூ.4558 கோடி ரூபாய் சென்றுள்ளது.
இந்த சூழ்நிலையை சரிசெய்ய, இந்திய ரிசர்வ் வங்கி சமீப காலமாக 100 Days 100 Pays என்ற திட்டத்தை வகுத்து அதனை நடைமுறைப்படுத்தியது. அதன்படி அனைத்து வங்கிகளும் Top 100 கேட்கப்படாத தொகைகளை அனைத்து மாவட்டங்களிலும் 100 நாட்களுக்குள் பைசல் செய்து கணக்கு முடிக்கவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
இந்த விபரங்களை கணக்கு வைத்திருப்பவர் அல்லது அவர்களின் வாரிசுகளோ, பெற்றோர்களோ, உறவினர்களோ அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து வங்கிகளும் தனது அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் கேட்கப்படாத டெபாசிட்டின் விவரங்களின் சரியான முறையில் பட்டியலிட்டு வெளியிட வேண்டும்.
வங்கிகளால் வெளியிடப்பட்டுள்ள விவரங்களை அக்கவுண்ட் வைத்திருப்பவரோ அல்லது அவர்களது வாரிசுகளோ சரியாக உள்ளதா என்பதை அறிந்து கேட்கப்படாத டெபாசிட் விவரங்களை வங்கியின் வெப்சைட்டில் பார்த்துக் கொள்ளலாம். அதன் பின் இந்த செயல்முறைக்கு என்றே உள்ள அப்ளிகேஷனையோ அல்லது அனெக்சர் B படிவத்தையோ பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் KYC ஆவணத்தையும் சேர்த்து வைத்து சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு சென்று பணத்தை கேட்கலாம்.
வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் இறந்து போயிருக்கும் பட்சத்தில் அவருடைய வாரிசை வங்கி கணக்கில் குறிப்பிட்டு இருந்தால் கேட்கப்படாத தொகையை அவரது வாரிசாக குறிப்பிடப்பட்டுள்ளவர் தேவையான ஆவணங்களுடன் வாரிசின் அடையாள அட்டையையும் அக்கவுண்ட் வைத்திருப்பவரின் இறப்பு சான்றிதழையும் சேர்த்து வங்கியில் ஒப்படைத்து கேட்கப்படாத தொகையினை பெற்றுக்கொள்ளலாம்.
அதற்கு மாற்றாக வங்கியில் வாரிசு பற்றிய தகவல்கள் எதுவும் தரப்படாமல் இருக்கும்பொழுது அல்லது சட்டப்படி உயில் எழுதி வைக்காமல் இருக்கும் பொழுது சம்பந்தப்பட்ட வாரிசானவர் சட்டபூர்வமான வாரிசு சான்றிதழையோ அல்லது
Letters of Administration ஆவணத்தையோ நீதிமன்றத்தில் தகுந்த முறையில் பெற்று வங்கியில் ஒப்படைத்து மேற்படி வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தினை பெற்றுக்கொள்ளலாம்.
கணக்கு வைத்திருப்பவர் சட்டப்படி ஒரு உயிலை எழுதி வைத்திருக்கும் பொழுது அந்த வாரிசுதாரருக்கு உரிய பங்கினை வங்கியிடம் தெரிவித்து நீதிமன்றத்தில் இதற்கான சட்டப்பூர்வ உத்தரவை பெற்றதும் சம்பந்தப்பட்ட வங்கி வாரிசுகளுக்கு சேர வேண்டிய தொகையை வழங்கும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications