ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்து பெறும் வட்டி விகிதங்களை சேமிப்பு கணக்குகளில் இருந்தே பெற முடியுமா..?
பொதுவாகப் பார்த்தால் முடியாது. ஆனால் கொஞ்சம் தேடிப் பார்த்தால் முடியும். எஸ்பிஐ வங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு அதிகபட்சமாக 5.4% தான் வட்டி கொடுக்கிறர்கள்.
ஆனால் நாம் பார்க்கப் போகும் வங்கிகள் சேமிப்புக் கணக்குகளில் வைத்திருக்கும் பணத்துக்கே 6 - 7 % வரை வட்டி கொடுக்கிறார்கள்.
ஏன் சேமிப்புக் கணக்கில் டெபாசிட்
மியூச்சுவல் ஃபண்டுகள், ஃபிக்ஸட் டெபாசிட், தங்கம் என மற்ற பல முதலீடுகள் இருக்கிறது என்றாலும், சேமிப்புக் கணக்கு அளவுக்கு எளிதாக நாம் நினைத்த போது பணத்தை எடுத்துக் கொள்ள முடியாது. எனவே தான் சேமிப்புக் கணக்கு டெபாசிட்களுக்கு கொடுக்கும் வட்டி, முக்கியத்துவம் பெறுகிறது. நாம் இங்கு 6 - 7 % வரை வட்டி கொடுக்கும் 3 வங்கிகளின் சேமிப்புக் கணக்கு வட்டி விவரங்களைப் பார்க்கப் போகிறோம்.
யெஸ் பேங்க் (Yes Bank)
கடந்த சில வருடங்களாக யெஸ் பேங்க் மீது பல புகார்கள் எழுந்து கொண்டே இருந்தன. தற்போது ஆர்பிஐயின் முழு கண்காணிப்பில் இருக்கிறது. இந்த வங்கி, தன் சேமிப்புக் கணக்குகளுக்கே
6 % வரை வட்டி கொடுக்கிறார்களாம்.
யெஸ் பேங்கின் சேமிப்புக் கணக்குகளில் 1 லட்சம் ரூபாய் வரையிலான டெபாசிட்டுக்கு 4 % வட்டி கொடுக்கிறார்கள்.
1 லட்சத்துக்கு மேல் 10 லட்சம் ரூபாய் வரையான சேமிப்புக் கணக்கு டெபாசிட்டுக்கு 5 % வட்டி கொடுக்கிறார்கள்.
சேமிப்புக் கணக்கில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் 300 கோடி ரூபாய்க்குள் டெபாசிட் வைத்திருந்தால் 6 % வட்டி கொடுக்கிறார்களாம்.
இண்டஸ் இண்ட் பேங்க் (IndusInd Bank)
ஹிந்துஜா குழுமத்தின் வங்கி இது. இந்த வங்கியும் சேமிப்புக் கணக்குகளுக்கு அதிகபட்சமாக 6 சதவிகிதம் வரை வட்டி கொடுக்கிறார்கள்.
இந்த வங்கியின் சேமிப்புக் கணக்குகளில் தினசரி பேலன்ஸ் 1 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் 4 % வட்டி கொடுக்கிறார்கள். ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் 10 லட்சம் ரூபாய்க்குள் சேமிப்புக் கணக்கில் வைத்திருந்தால் 5 % வட்டி கொடுக்கிறார்கள்.
தினசரி பேலன்ஸ் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வைத்திருந்தால் 6 % வட்டி கொடுக்கிறார்கள்.
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் (IDFC first Bank)
இந்த ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், தன் சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களுக்கு 7 % வரை வட்டி கொடுக்கிறார்கள்.
இந்த வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கிறீர்கள் என்றால், ஒரு லட்சம் ரூபாய் வரை சேமிப்புக் கணக்கில் வைத்திருப்பவர்களுக்கு 6 % வட்டி கொடுக்கிறார்கள். இதுவே சேமிப்புக் கணக்கில் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் வைத்திருந்தால் 7 % வரை வட்டி கொடுக்கிறார்கள்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications