சேமிப்பு என்று வரும்போது பிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்வது குறித்து தான் பலர் யோசிக்கின்றனர். ஏனெனில் நம் நாட்டில் பிறத் திட்டங்களை விட பிக்ஸட் டெபாசிட் திட்டங்களை மிகவும் நம்பகமானதாக மக்கள் கருதுகின்றனர். இந்த திட்டங்களை பல்வேறு வங்கிகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சிறந்த வட்டி விகிதங்களில் அம்ரித் விருஷ்டி எனப்படும் பிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 444 நாட்கள்.
இந்த திட்டத்திற்கு போது வாடிக்கையாளர்கள் 7.25 சதவீத வட்டி விகிதத்தையும், மூத்த குடிமக்கள் 7.75 சதவீத வட்டி விகிதத்தையும் பெறலாம். இந்த திட்டம் 2025-ஆம் ஆண்டின் மார்ச் மாதம் 31-ஆம் தேதி வரை முதலீடு செய்ய கிடைக்கும். அதன் பிறகு காலக்கெடு நீட்டிக்கப்பட்டால் அது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும். இது எஸ்பிஐ வங்கி வழங்கும் சிறப்பு திட்டம் என்பதால் இதற்கு காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவில் அம்ரித் விருஷ்டி பிக்சட் டெபாசிட் திட்டத்தில் ஒருவர் ரூ. 2 லட்சம், ரூ. 3 லட்சம் மற்றும் ரூ.4 லட்சத்தை முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்? என்று பார்ப்போம்.

ஸ்டேட் பேங்க் வழங்கும் இந்த ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் டெபாசிட் திட்டத்தில் குறைந்த முதலீடாக 1,000 ரூபாயில் கணக்கு தொடங்கலாம். இதைத் தாண்டி எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு என்பது இதற்கு இல்லை. இந்த பிக்சட் டெபாசிட் திட்டத்தில் இந்திய குடிமக்கள் மற்றும் NRI-களும் பலன் பெறலாம்.
ரூ.2 லட்சம் முதலீடு: மூத்த குடிமக்கள் அம்ரித் விருஷ்டி திட்டத்தில் ரூ.2 லட்சத்தை முதலீடு செய்தால் 7.75 சதவீத வட்டி விகிதத்தில் 444 நாட்களுக்கு 19,859 ரூபாய் வட்டி கிடைக்கும். இதன் மூலம் மொத்தம் முதிர்வு தொகை 2,19,859 ரூபாயாக இருக்கும். அதுவே பொது வாடிக்கையாளர்களுக்கு 7.25 சதவீத வட்டி விகிதத்தில் ரூ. 2 லட்சம் முதலீட்டுக்கு 18,532 ரூபாய் வட்டி பெறுவார்கள். இதன் மூலம் மொத்த முதிர்வு தொகை ரூ. 2,18,532-ஆக இருக்கும்.
ரூ.3 லட்சம் முதலீடு: மூத்த குடிமக்கள் இந்த திட்டத்தில் ரூ.3 லட்சத்தை முதலீடு செய்தால் 7.75 சதவீத வட்டி விகிதத்தில் 444 நாட்களுக்கு 29,789 ரூபாய் வட்டி கிடைக்கும். இதன் மூலம் மொத்தம் முதிர்வு தொகை 3,29,789 ரூபாயாக இருக்கும். அதுவே பொது வாடிக்கையாளர்களுக்கு 7.25 சதவீத வட்டி விகிதத்தில் ரூ. 3 லட்சம் முதலீட்டுக்கு 27,798 ரூபாய் வட்டி பெறுவார்கள். இதன் மூலம் மொத்த முதிர்வு தொகை ரூ. 3,27,798-ஆக இருக்கும்.
ரூ.4 லட்சம் முதலீடு: மூத்த குடிமக்கள் அம்ரித் விருஷ்டி திட்டத்தில் ரூ.4 லட்சத்தை முதலீடு செய்தால் 7.75 சதவீத வட்டி விகிதத்தில் வருமானமாக 39,718 ரூபாய் வட்டி கிடைக்கும். இதன் மூலம் மொத்தம் முதிர்வு தொகை 4,39,718 ரூபாயாக இருக்கும். அதுவே பொது வாடிக்கையாளர்களுக்கு 7.25 சதவீத வட்டி விகிதத்தில் ரூ. 4 லட்சம் முதலீட்டுக்கு 37,064 ரூபாய் வட்டி பெறுவார்கள். இதன் மூலம் மொத்த முதிர்வு தொகை ரூ. 4,37,064-ஆக இருக்கும்.
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications