நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிரடியான சலுகையினை வழங்கி வருகின்றது.
அந்த வகையில் தற்போது SBI வங்கி தனது யோனோ ஆப் மூலம், கார், தங்கம் மற்றும் தனி நபர் கடன் வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 100% செயல்பாட்டு கட்டணத்தினை தள்ளுபடி செய்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்ட அறிக்கையின் படி, பண்டிகை கால சலுகையாக வீட்டு கடன் வாங்குபவர்களுக்கு, பல சலுகைகளை அறிவித்துள்ளது.
செயல்பாட்டுக் கட்டணம் தள்ளுபடி
அங்கீகரிக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களில் வீட்டு உரிமையாளர்களுக்கான வீட்டுக் கடன்களுக்கான, செயல்பாட்டு கட்டணத்தினை முழுமையாக தள்ளுபடி இருக்கும் என அறிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்களின் கிரெடிட் ஸ்கோர் மற்றும் கடன் தொகை அடிப்படையில் 10 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி தள்ளுபடி இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
வீட்டுக் கடனுக்கு என்ன சலுகை?
அதோடு வாடிக்கையாளர்கள் யோனோ வழியாக வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்தால், கூடுதலாக 5 அடிப்படை புள்ளிகள் வரையில் வட்டியில் சலுகையை பெற முடியும் எனவும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இதே கோல்டு லோன் வாடிக்கையாளர்கள் பிளக்ஸி முறையில் 36 மாதங்கள் வரையில், 7.5% குறைந்த வட்டியில் செலுத்திக் கொள்ளலாம்.
குறைவான வட்டியில் கடன்
தற்போது நிலவி வரும் நெருக்கடியான நிலையில் வாடிக்கையாளர்களுக்கு கடன் கிடைப்பதையும், அதனை மலிவான வட்டி விகிதத்தில் கிடைப்பதையும் உறுதி செய்வதற்காக, வங்கிகள் 9.6% குறைவான வட்டி விகிதங்களுடன், தனி நபர் கடன் கிடைக்க சலுகையை அளித்துள்ளதாகவும் எஸ் பி ஐ தனது வங்கிக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
கார் லோனுக்கு என்ன சலுகை?
வங்கிகள் கார் லோன் வழங்குவதிலும் சில சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த கார் லோனுக்கு வட்டி விகிதம் 7.5% முதல் தொடங்கி, மிகக் குறைந்த வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது. அதே போல் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களில் 100% ஆன் ரோட் நிதியையும் அவர்கள் பெறுவார்கள் என்று வங்கி அறிவித்துள்ளது.
யோனோ ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம்
அதெல்லாம் சரி எப்படி யோனோ ஆப் மூலம் எப்படி விண்ணப்பிப்பது? உங்களது யோனோ ஆப் மூலம் கார் மற்றும் கோல்டு லோன் வாடிக்கையாளர்கள் யோனோ ஆப் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இது வாடிக்கையாளர் ஒருவர் காகிதமற்ற முன் அங்கீகரிக்கப்பட்ட தனிநபர் கடன்கள் மற்றும் இன்ஸ்டா ஹோம் டாப் அப் கடன்களையும் பெறலாம்.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் உங்களது தகுதியை 567676 என்ற எண்ணுக்கு PAPL என்று அனுப்பலாம்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications