ஏடிஎம் உபயோகப்பவர்களில் பலருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கலாம்... உங்களுடைய ஏடிஎம் பரிவர்த்தனை தோல்வி அடைந்து விட்டதா? ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணம் வரவில்லையா? ஆனாலும் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்து விட்டதாகக் காட்டப்படுகிறதா?
பலருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும் வாய்ப்புண்டு? ஆனால் அடுத்து என்ன செய்வது?
ஐயோ பணம் போச்சா? என்ற கவலையும் அந்த நேரத்தில் வாட்டி வதைக்கும். அந்த வகையில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் பணம் வங்கிக் கணக்கில் இருந்து டெபிட் ஆகிவிட்டால், எப்படி புகார் அளிப்பது? வாருங்கள் பார்க்கலாம்.
ஆன்லைனில் புகார் பதிவு செய்யலாம்
மேற்கூறியவாறு உங்களது ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது சில நேரங்களில் பணம் வராமல் போகலாம். ஆனால் உமேற்கூறியவாறு உங்களது ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது சில நேரங்களில் பணம் வராமல் போகலாம். ஆனால் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து டெபிட் ஆகி விடும். ஆனால் பணம் வராது. அப்படி பணம் வராத பட்சத்தில், அதனை நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் ஒவ்வொரு வங்கியிலும், இதற்காக ஆன்லைனில் புகார்களைப் பதிவு செய்யும் நடைமுறையைக் கொண்டுள்ளன. ங்கள் வங்கிக் கணக்கில் இருந்து டெபிட் ஆகி விடும். ஆனால் பணம் வராது. அப்படி பணம் வராத பட்சத்தில், அதனை நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் ஒவ்வொரு வங்கியிலும், இதற்காக ஆன்லனில் புகார்களைப் பதிவு செய்யும் நடைமுறையைக் கொண்டுள்ளன.
ஏடிஎம்-கள் பிரச்சனையாக இருக்கலாம்
அந்த வகையில் எஸ்பிஐ ஒரு புகார் போர்ட்டலைக் கொண்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது புகார்களை பதிவு செய்யலாம். சரி ஏன் இந்த பிரச்சனைகள் வருகின்றன. ஏடிஎம்கள் தவறாக செயல்படுவதால் இந்த பிரச்சனை வந்திருக்கலாம். பொதுவாக ஏடிஎம்களில் பிரச்சனைகள் இருக்கும் போது டெபிட் ஆகும் பணத்தினை, வங்கிகள் அதனை குறிப்பிட்ட கால அவகாசத்தில் திரும்ப செலுத்துகின்றன.
ஆன்லைனில் எப்படி புகார் அளிப்பது?
ஆனால் சில நேரங்களில் அப்படி நடப்பதில்லை. அப்பொழுது என்ன செய்ய வேண்டும். நீங்கள் பரிவர்த்தனை செய்த போது கிடைக்கும் பரிவர்த்தனை சீட்டை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். சரி எப்படி இது குறித்து புகார் அளிப்பது. முதலில் எஸ்பிஐ இணையத்திற்குள் https://www.onlinesbi.com/ செல்லுங்கள். அங்கு கஸ்டமர் கம்ப்ளைன்ட் பார்ம் (customer compliant form) என்ற லிங்கினை கிளிக் செய்து, அங்கு உங்களது விவரங்களை பதிவு செய்யலாம் ( நேரடி லிங்க் https://cms.onlinesbi.com/CMS/ ).
விவரங்களை சரியாக கொடுக்க வேண்டும்?
மேற்கண்ட சிஎம்எஸ் போர்ட்டலை க்ளிக் செய்து, உங்களது விவரங்களை சரியாக கொடுக்க வேண்டும். விவரங்களை பதிவு செய்து விட்டு கடைசியாக இமேஜில் உள்ள எழுத்துகளை கொடுக்கப்பட்டுள்ள சிறிய காலத்தில் பதிவு செய்து, சப்மிட் செய்யலாம். இந்த போர்டலில் நீங்கள் எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளரா? அல்லது வேறு வங்கி வாடிக்கையாளரா? என பல விவரங்களை பதிவிட வேண்டியிருக்கும்.
என்னென்ன விவரங்கள் கொடுக்கப்பட வேண்டும்?
இதனையடுத்து உங்களது வங்கிக் கணக்கு எண், புகார் அளிப்பவரின் பெயர், வங்கி கிளையின் எண், மொபைல் எண், ஈமெயில், அதில் நீங்கள் எதற்காக புகார் அளிக்க போகிறீர்கள். ஏடிஎம் தொடர்பாக என்றால், அது எந்த மாதிரியான பிரச்சனை என விவரங்களைக் கொடுக்கவும். இதனையடுத்து உங்களது டெபிட் கார்டு எண்? எவ்வளவு பணம் பரிவர்த்தனை செய்தீர்கள். உங்களது பரிவத்தனை எண், எப்போது இந்த பரிவர்த்தனையை செய்தீர்கள், உங்கள ஏடிஎம் ஐடி, இறுதியாக என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என்பதையும் விரிவாகக் கொடுக்கலாம்.
புகார் எண்
இவ்வாறு பதிவு செய்யப்பட்ட பின்னர் இறுதியில் உங்களது புகார் எண் வரும், அதனை வைத்து நீங்கள் உங்களது புகாரின் நிலவரம் என்ன என்பதனையும் அவ்வப்போது தெரிந்து கொள்ளலாம். இந்த புகார் எண் எஸ்எம்எஸ் மற்றும் இமெயில் மூலமாக வரலாம். சரி ஆன்லைன் மூலமாக மட்டும் தான் புகார் அளிக்க முடியுமா? வேறு வழிகள் இல்லையா? என்றால் நிச்சயம் உள்ளது.
கஸ்டமர் கேர் எண் & வங்கி கிளை
கஸ்டமர் கேருக்கு கால் செய்து உங்களது புகாரினை பதிவு செய்யலாம். அவர்கள் இதனை விசாரணை செய்து, உண்மையில் வங்கித் தரப்பில் பிரச்சனை இருப்பின், உங்களது பணத்தினை உங்கள் கணக்கில் திரும்ப தருவார்கள். அப்படியும் இல்லாவிட்டால், அருகிலுள்ள வங்கிக் கிளையினை நேரடியாக அணுகலாம்.
ஆம்பட்ஸ்மேனை அணுகலாம்
அப்படியும் உங்கள் பிரச்சனை தீர்க்கப்படவில்லை எனில், நீங்கள் வங்கி கணக்கை வைத்திருக்கும் கிளை மேலாளரிடம் சிக்கலை கொண்டு செல்ல வேண்டும். அதன் பின்னரும் உங்களது பிரச்சனை தீர்க்கப்படவில்லை எனில் ஆம்பட்ஸ்மேனை அணுகலாம். உங்களது கைப்பட புகாரை எழுதி கொடுக்கலாம். அல்லது ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications