இந்தியாவின் முன்னணி கடன் வழங்குனரும், வணிக வங்கியுமான எஸ்பிஐ, பல்வேறு சேவைகளை வழங்கி வரும் வங்கியாகும். குறிப்பாக வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் கிரெடிட் சேவையையும் வழங்கி வருகின்றது.
தொடர்ந்து வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரித்து வரும் சூழலில், தற்போது கிரெடிட் கார்டுக்கான கட்டணத்தையும் அதிகரித்துள்ளது.
இது எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிரெடிட் கார்டு கட்டணம் அதிகரிப்பு
எஸ்பிஐ-யின் இந்த கட்டண மாற்றங்கள் ஆனது 2023ன் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் அமலுக்கு வந்துள்ளது. இதில் எஸ்பிஐ-யின் கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கான கட்டணமும் உயர்ந்துள்ளது. இதில் சாதாரண கார்டுகளுக்கு சேவை கட்டணமாக 99 ரூபாயில் இருந்து 199 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் உடன் 18% ஜிஎஸ்டி வரியும் சேலுத்த வேண்டியிருக்கும்.
மெயில் & SMS மூலம் அறிவிப்பு
இந்த கட்டண அதிகரிப்புகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலமாகவும் மெயில் மூலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக நீங்கள் உங்களது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் முன்னர் இதனை தெரிந்த கொள்வது அவசியமான ஒன்று.
தற்போதைய அதிகரிப்புகள்
தற்போதைய கட்டணங்களை எஸ்பிஐ இணையதளத்தில் சென்றும் தெரிந்து கொள்ளலாம். எனினும் உங்களது கிரெடிட் கார்டு வரும் வெல்கம் கிட்டிலும் இது குறித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதிலும் உங்களுக்கு கூறப்பட்ட கட்டண விகிதங்களும், இதில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டணங்களும் ஒன்றா என தெரிந்து கொள்ள வேண்டும்.
எவ்வளவு கட்டணங்கள்?
வருடாந்திர கட்டணம் - 9999 ரூபாய் வரையில்
நிதி கட்டணம் - குறைந்தபட்சம் ரூ.25
கேஸ் அட்வான்ஸ் கட்டணம் - குறைந்தபட்சம் ரூ.500 அல்லது தொகையில் 2.5%
புதுபித்தல் கட்டணம் - ரூ.9999 வரையில்
செக் பேமெண்ட் கட்டணம் - ரூ.100
கேஸ் பெமெண்ட் கட்டணம் - ரூ.250
தாமத கட்டணம் - ரூ.1300 வரையில்
அன்னிய கரன்சி பரிவர்த்தனை கட்டணம் - 3.5% வரையில்
ஓவர் லிமிட் - ஓவர் லிமிட் தொகையில் 2.5% கட்டணம்
Payment dishonour fee - குறைந்தபட்சம் ரூ.500 அல்லது தொகையில் 2.5%
இதனை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்
பொதுவாக கிரெடிட் கார்டு பயன்படுத்துவபராக இருந்தாலே முதலில் அதனை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் இன்றைய காலக்கட்டத்திலும் கிரெடிட் கார்டுகளை சரியாக பயன்படுத்துபவர்களை விட, அதனை தவறாக பயன்படுத்துபவர்களே அதிகம். ஆக சரியான முறையில் அனைத்து கட்டணங்களையும் தெரிந்து கொண்டு வாங்குவதே சிறந்த வழி எனலாம்.
இவ்வளவையும் தெரிஞ்சுக்கோங்க
உதாரணத்திற்கு உங்களது கிரெடிட் கார்டின் வருடாந்திர கட்டணம், அதனை சரியான சமயத்தில் செலுத்தாத போது எவ்வளவு வட்டி? பகுதி தொகையை செலுத்தினால் மீதமிருக்கும் தொகைக்கு எவ்வளவு வட்டி? தாமதமாக செலுத்தினால் எவ்வளவு, சர்வதேச பரிவர்த்தனை என பலவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications