எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க.. 5 முக்கிய சேவைகளை போனிலேயே பெறலாம்.. எப்படி தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய காலகட்டத்தில் வங்கி சேவைகளில் பல்வேறு தொழில் நுட்பங்கள் வந்துவிட்டன. வங்கிக்கு சென்று கால்கடுக்க நின்று பணம் எடுத்த/அனுப்பிய காலம் போய் இன்று யுபிஐ மூலமாக நொடிகளில் பணம் அனுப்பிக் கொள்ளலாம்.

 

அதுமட்டும் அல்ல, செக் புக், ஏடிஎம் கார்டு பெறுதல், ஏடிஎம் கார்டினை பிளாக் செய்தல், வங்கி கணக்கில் உள்ள இருப்பு என பல விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

முன்பெல்லாம் இதுபோன்ற சிறிய சேவைகளுக்கும் மணிக்கணக்கில் வங்கியில் காத்திருந்து, எழுதிக் கொடுக்க வேண்டியிருக்கும். இதுவே மிகப்பெரிய வேலையாக இருக்கும்.

இனி 24 மணி நேரமும் வங்கி சேவைகள்.. எஸ்பிஐ புதிய வசதி அறிமுகம்!

 இலவச டோல் ப்ரீ எண்

இலவச டோல் ப்ரீ எண்

ஆனால் இன்று அப்படியில்லை. இதுபோன்ற சிறிய விஷயங்களை உங்கள் போனில் இருந்தே பெற்றுக் கொள்ளலாம். இதற்காக எஸ்பிஐ இலவச டோல் ப்ரீ எண்ணையும் கொடுத்துள்ளது. ஆக வாடிக்கையாளர்கள் இந்த நம்பருக்கு கால் செய்து மேற்கண்ட சேவைகளை எளிதில் பெற்றுக் கொள்ளலாம்.

 விடுமுறை நாட்களிலும் சேவை

விடுமுறை நாட்களிலும் சேவை

குறிப்பாக வங்கி விடுமுறை நாட்களில் கூட இந்த சேவையை பெற முடியும் என்பது தான் கூடுதல் சிறப்பு. குறிப்பாக வங்கி விடுமுறை நாட்களான இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட சேவைகளை பெறலாம்.

 என்ன நம்பர் அது?
 

என்ன நம்பர் அது?

எஸ்பிஐயின் டோல் ப்ரீ எண்-

1800 1234 அல்லது 1800 2100

இது குறித்து எஸ்பிஐ ஜூலை 3 அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

 

 எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்

தங்களது கணக்கில் உள்ள இருப்புகள் மற்றும் கடந்த 5 முறை செய்த பரிவர்த்தனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஏடிஎம் கார்டினை பிளாக் செய்தல் மற்றும் அனுப்பும் நிலை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

பழைய ஏடிஎம் கார்டு பிளாக் செய்யப்பட்ட பிறகு புதிய ஏடிஎம் கார்டுக்கு விண்ணபிக்கவும்.

செக் புக் அனுப்பப்பட்டதன் விவரத்தினையும் தெரிந்து கொள்ளலாம்.

டிடிஎஸ் விவரங்கள் மற்றும் டெபாசிட் வட்டி சான்றிதழை மெயில் மூலம் பெறலாம்.

 

 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

எஸ்பிஐ-யின் இந்த சேவையினை 24 மணி நேரமும் பெற்றுக் கொள்ளலாம். எஸ்பிஐ-யின் 1800 1234 (டோல் ப்ரீ), 1800 11 2211 (டோல் ப்ரீ), 1800 425 3800 (டோல் ப்ரீ), 1800 2100 (டோல் ப்ரீ) அல்லது 080 26599990. இந்த டோல் ப்ரீ நம்பர்களை மொபைல் அல்லது லேண்ட்லைன் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: sbi எஸ்பிஐ
English summary

SBI customers can avail these 5 banking services on phone

SBI customers can avail these 5 banking services on phone/எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க.. 5 முக்கிய சேவைகளை போனிலேயே பெறலாம்.. எப்படி தெரியுமா?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X