எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க.. உங்களது பேலன்ஸினை எப்படி எல்லாம் பார்க்கலாம்..!

நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குனரும், பொதுத்துறை வங்கியுமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வாடிக்கையாளர்களுக்கு தங்களது சேவையினை எளிதாக்கும் வகையில் பல சேவைகளை அளித்து வருகிறது.

தனியார் வங்கிகள் கூட ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன் போட்டி போட முடியாமல் தவித்து வருகின்றன. அந்தளவுக்கு அதிரடியான பல சேவைகளை தனியார் வங்கிகளுக்கு போட்டியாக வழங்கி வருகின்றது எஸ்பிஐ.

அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது எஸ்பிஐ-யில் எப்படி உங்களது பேலன்ஸினை தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக இணையத்தினை பயன்படுத்தாமலே எப்படி தெரிந்து கொள்ளலாம். வாருங்கள் அதனை பற்றித் தான் இன்று பார்க்க இருகிறோம்.

 மிஸ்டு கால் மூலம் பேலன்ஸ்

மிஸ்டு கால் மூலம் பேலன்ஸ்

எஸ்பிஐ சேமிப்பு கணக்கோ அல்லது வேறு எந்த வகையான கணக்கு வைத்திருந்தாலும், ஒரு மிஸ்ட் கால் மூலம் தங்களது வங்கி கணக்கில் உள்ள பேலன்ஸ் தொகையை சரிபார்த்துக் கொள்ளலாம். எஸ்பிஐ-யின் balance inquiry number 09223766666 மூலம் எஸ்பிஐ வங்கி கணக்கு வைத்திருப்பவர் mini statement மற்றும் கணக்கு தொடர்பான இதர விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும்.

ஆப் மூலம் பேலன்ஸினை தெரிந்து கொள்ளலாம்

ஆப் மூலம் பேலன்ஸினை தெரிந்து கொள்ளலாம்

எஸ்பிஐ-யின் SBI Quick app மூலமாக நாம் இணைய வங்கியினை பயன்படுத்தாமலேயே, உங்களது வங்கிக் கணக்கில் இருக்கும் பேலன்ஸ் தொகையினை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். இந்த சேவையினை பயன்படுத்த எஸ்பிஐ-யில் கணக்கு வைத்திருப்பவர்கள், தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரினை மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேசேஜ் மூலம் பேலன்ஸ் தெரிந்து கொள்ளலாம்

மேசேஜ் மூலம் பேலன்ஸ் தெரிந்து கொள்ளலாம்

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் உங்களது பேலன்ஸினை தெரிந்து கொள்ள, BAL என டைப் செய்து, 09223766666 என்ற எண்ணிற்கு மெசேஜ் அனுப்ப வேண்டும். ஆனால் இதற்காக முதலில் நீங்கள் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து வங்கிக் கணக்கினை கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

எப்படி பதிவு செய்வது?

எப்படி பதிவு செய்வது?

இதனை வாடிக்கையாளர்கள் REG Account number 09223488888 என்ற எண்ணிக்கு அனுப்ப வேண்டும். உதாரணத்திற்கு REG என டைப் செய்து, அதனை தொடர்ந்து உங்களது வங்கி கணக்கு எண் 1000 1000 1000 எனில் அதனை டைப் செய்து அனுப்ப வேண்டும். அதாவது REG 100010001000 என்று அனுப்ப வேண்டும். இதன் பிறகு உங்களுக்கு கன்பர்மேஷன் செய்தியொன்று கிடைக்கும். அது successful/unsuccessful என கிடைக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+