இன்றைய காலகட்டத்தில் ஆதார் பான் என்பது மிக அவசியமான ஆவணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இப்படி இரு முக்கிய ஆவணங்களையும் இணைக்க அரசு பலமுறை அவகாசம் கொடுத்தது. ஆனால் தற்போது வரையிலும் பலரும் இணைக்காமலேயே உள்ளனர்.
இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வருகின்ற ஜூன் 30ம் தேதிக்குள் பான் - ஆதாரினை லிங்க் செய்ய வேண்டும். அப்படி இணைக்கப்படாவிட்டால் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
எஸ்எம்எஸ் மூலம் இணைக்கலாம்
ஆதார் எண், பான் நமபரை எப்படி எஸ்எம்எஸ் மூலம் இணைப்பது? இதற்காக நீங்கள் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் இணைத்து கொள்ளலாம். உங்கள் மொபைல் எண்ணில் இருந்து UIDPAN 12 இலக்க ஆதார் எண் 10 இலக்க பான் நம்பரை டைப் செய்து மேற்கூறிய எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
இணையம் மூலம் எப்படி?
ஆதார் மற்றும் பான் எண்ணினை இணைக்க http://incometaxindiafiling.gov.in./ என்ற இணைய பக்கத்தில் சென்று இணைக்கலாம். இந்த இணைய பக்கத்திற்கு சென்று, வலைதளத்தின் இடது பக்கத்தில் உள்ள ஆதார் லிங்க் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
அதன் பின்பு உங்களின் பான் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை கேட்கும்.
அதில் உங்கள் பெயரினை பிழையில்லாமல் பதிவிட வேண்டும்.
இதனையடுத்து உங்கள் பிறந்த தேதி உள்ள ஒரு சிறிய டிக் பாக்ஸ் இருக்கும், அதனை க்ளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு அங்குள்ள captcha எண்ணினை பதிவு செய்து க்ளிக் செய்தால், பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிக்கு ஒரு ஓடிபி வரும்.
இதனை பதிவு செய்த பின்னர் கடைசியாக லிங்க் ஆதார் என்பதை க்ளிக் செய்தல் வேண்டும்.
ஆதார் மையம் மூலம் எப்படி?
ஒரு வேளை உங்களுக்கு ஆன்லைனிலோ அல்லது மொபைல் எண் மூலமாக இணைக்க தெரியாவிட்டால், நேரிடையாக ஆதார் மையத்திற்கு சென்று இணைக்கலாம்.
இதற்காக Annexure-I என்ற பார்மில் தேவையான விவரங்களை பதிவு செய்து, தேவையான ஆவணங்களையும் உடன் இணைத்துக் கொடுக்க வேண்டும்.
இதற்காக உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும். இதே ஆன்லைனில் இலவசமாக இணைத்துக் கொள்ளலாம்.
மானியம் பெற கட்டாயம்
சமீபத்தில் அரசு மானியங்களை பெற ஆதார் எண்ணை எஸ்பியை வங்கிக் கணக்குடன் இணைப்பது கட்டாயம் என்றும் அறிவித்தது. அதெல்லாம் சரி எப்படி உங்களது ஆதார் நம்பரை இணைப்பது வாருங்கள் பார்க்கலாம்.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் https://www.onlinesbi.com/ என்ற இணைய தளத்தில் சென்று, லாகின் செய்து கொள்ளுங்கள்.
அங்கு my accounts என்பதன் கீழ் உள்ள link your Aadhaar number என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அங்கு உங்களது ஆதார் எண்ணினை கொடுத்து பதிவிட்டுக் கொள்ளவும். அங்கு உங்களது மொபைல் எண்ணின் கடைசி இரு இலக்கங்கள் தெரியும். அதனை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
ஏடிஎம் மூலம் எப்படி?
எஸ்பிஐ ஏடிஎம்மில் உங்களது ஏடிஎம்மினை ஸ்வைப் செய்து, உங்களது பின் நம்பரை பதிவு செய்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு மெனுவுக்கு சென்று, ஆதார் பதிவு என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
பிறகு உங்களது வங்கி கணக்கு சேமிப்பு கணக்கா அல்லது வேறு ஏதேனும் கணக்கா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
பின்னர் உங்களிடம் ஆதார் எண்ணினை பதிவிட கேட்கும். அதன் பிறகு நீங்கள் பதிவு செய்து கொள்ளவும். திரும்பவும் மறுமுறையும் பதிவு செய்ய கேட்கும். அப்போதும் கொடுத்து பதிவு செய்த பிறகு, உங்களது மொபைல் எண்ணுக்கு மெசேஜ் வரும். அதனை கொடுத்து உறுதி செய்து கொள்ளுங்கள்.
எஸ்பிஐ எனிவேர் ஆப்பில் எப்படி?
எஸ்பிஐ எனிவேர் ஆப்பினை லாகின் செய்து கொள்ளுங்கள். அதில் requests என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
அதில் ஆதார் என்பதை கிளிக் செய்து, அதன்பிறகு ஆதார் லிங்கிங் என்பதை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு உங்களது ஆதார் எண்ணை கொடுத்து பதிவு செய்ய வேண்டும். இங்கும் உங்களது பதிவு மொபைல் எண்ணுக்கு ஒரு மெசேஜ் வரும்.
எஸ்பிஐ கிளையில் எப்படி மாற்றுவது?
உங்களுக்கு அருகில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளைக்கு சென்று, உங்களது ஆதார் கார்டு ஆவணத்தினை அல்லது இ- ஆதாரினை கொடுக்கும். அதோடு letter of requetம் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
இதனைக் கொடுக்கும்போது, ஆதார் ஜெராக்ஸினையும் சேர்த்து கொடுக்க வேண்டும். அவர்கள் அதனை உறுதிபடுத்திக் கொண்டு, பதிவு செய்வர்.
இதனை வங்கி அப்டேட் செய்த பிறகு, பதிவு மொபைல் எண்ணுக்கு ஒரு மெசேஜ் வரும்.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications