கொரோனா வைரஸ் காலத்தில், மக்கள் சிரமப்படக் கூடாது என்கிற நோக்கில், மத்திய அரசு, வங்கி தொடர்பாக சில சலுகைகளை அறிவித்தது நினைவிருக்கிறதா?
ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ளலாம். வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை (Minimum Balance) வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எல்லாம் சொல்லி இருந்தார்கள்.
அப்படி அதிக முறை ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுப்பது மற்றும் குறைந்தபட்சம் பேலன்ஸ் வைத்துக் கொள்ளாததற்கு எந்த அபராதம் & கட்டணம் வசூலிக்கப்படாது எனச் சொல்லி இருந்தார்கள்.
அடுத்த மாதம் முதல் அமல்
இப்படி மத்திய அரசு கட்டணங்களை வசூலிக்காது எனச் சொன்னது ஜூன் 30, 2020 வரை தான். மேற்கொண்டு எந்த புதிய அறிவிப்புகளும் வந்ததாகத் தெரியவில்லை. எனவே அடுத்த மாதம் 01 ஜூலை 2021 முதல் மீண்டும் பழைய விதிமுறைகள் எல்லாம் மீண்டும் அமலுக்கு வரப் போகிறது தெரியுமா..?
மினிமம் பேலன்ஸ் ஜாக்கிரதை
ஒவ்வொரு வங்கியும், தங்களுக்கு ஏற்றாற் போல, மினிமம் பேலன்ஸை நிர்ணயித்து இருக்கிறார். ஒரு மாதத்தில் அந்த குறிப்பிட்ட தொகை மினிமம் பேலன்ஸாக கணக்கில் இல்லை என்றால், அபராதம் அல்லது கட்டணத்தை ஜூலை மாதத்துக்கு வசூலிப்பார்கள். எனவே மினிமம் பேலன்ஸை மனதில் வைத்துக் கொண்டு வங்கிக் கணக்கில் பணத்தை வைத்துக் கொள்ளுங்கள்.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்
கடந்த மார்ச் 2020-ல், எஸ்பிஐ வாடிக்கையாளர்களிடம் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்கவில்லை என்றால் எந்த விதமமான கட்டணமோ அல்லது அபராதத் தொகையோ வசூலிக்கப்படாது எனச் சொன்னது நினைவு கூறத்தக்கது. எனவே எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மினிமம் பேலன்ஸ் குறித்து அச்சப்படத் தேவை இல்லை.
ATM கட்டணங்கள்
அதே போல, பொதுவாக, எந்த வங்கியில் இருந்து ஏடிஎம் கார்ட் வாங்கி இருக்கிறோமோ, அந்த வங்கியின் ஏடிஎம்-ல் 5 முறை வரை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். 3 முறை மற்ற வங்கி ஏடிஎம் இயந்திரங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு மேல் பயன்படுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படும்.
எஸ்பிஐ ஏடிஎம் கட்டணம்
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள், எஸ்பிஐ டெபிட் கார்ட் மூலம், எஸ்பிஐ வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் மாதம் 5 முறை பயன்படுத்திக் கொள்ளலாம். மற்ற வங்கி ஏடிஎம்களில் மாதம் 3 முறை பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு மேல், எந்த வங்கி ஏடிஎம் இயந்திரத்தை, அதே மாதத்தில் பயன்படுத்தினாலும், ஒவ்வொரு முறை பயன்படுத்துவதற்கும், 8 - 20 ரூபாய் வரை, நாம் பயன்படுத்திய காரணங்களைப் பொருத்து கட்டணம் வசூலிப்பார்கள்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications