ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தினை 40 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளது. இவ்வாறு குறைக்கப்பட்டுள்ள இந்த வட்டி விகிதங்கள் மே 27 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
பொதுத்துறை கடன் வழங்குனரான எஸ்பிஐ இந்த மாதத்திலேயே இரண்டாவது முறையாக வட்டி குறைப்பு செய்துள்ளது.

பொது மக்களுக்கான புதிய வட்டி விகிதம்
7 முதல் 45 நாட்கள் வரையிலான வைப்பு தொகைக்கு- 2.9%
46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான வைப்பு தொகைக்கு- 3.9%
180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையில்- 4.4%
211 நாட்கள் முதல் 1 வருடத்துக்கும் குறைவான வைப்புத் தொகைக்கு- 4.4%
1 வருடம் முதல் 2 வருடத்துக்குள் - 5.1%
2 வருடம் முதல் 3 வருடத்துக்குள்- 5.1%
3 வருடம் முதல் 5 வருடத்துக்குள்- 5.3%
5 வருடம் முதல் 10 வருடம் வரையில்- 5.4%
மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம்
7 முதல் 45 நாட்கள் வரையிலான வைப்பு தொகைக்கு- 3.4%
46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான வைப்பு தொகைக்கு- 4.4%
180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையில்- 4.49%
211 நாட்கள் முதல் 1 வருடத்துக்கும் குறைவான வைப்புத் தொகைக்கு- 4.9%
1 வருடம் முதல் 2 வருடத்துக்குள் - 5.6%
2 வருடம் முதல் 3 வருடத்துக்குள்- 5.6%
3 வருடம் முதல் 5 வருடத்துக்குள்- 5.8%
5 வருடம் முதல் 10 வருடம் வரையில்- 6.2%
முன்னதாக கடந்த மே 12 அன்று வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் 20 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த மே 22 அன்று ரெபோ விகிதத்தினை 40 அடிப்படை புள்ளிகள் குறைத்தது. கொரோனா தொற்று நோயின் காரணமாக ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் சரியான நேரத்தில் தான் வந்துள்ளதாக எஸ்பிஐ தலைவர் ரஜ்னிஷ் குமார் சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். இதனால் கடன்களுக்கான வட்டி குறையும். இது பொருளாதாரத்தினை ஆதரிப்பதற்கான பொருத்தமான நடவடிக்கை தான் என்றும் கூறியிருந்தார்.
எனினும் இதன் மூலம் வைப்பு நிதியாளர்களுக்கான வட்டி விகிதம் குறைந்தாலும், மூத்த குடிமக்களுக்கான வீகேர் டெபாசிட் திட்டம் கைகொடுக்கும். ஏனெனில் எஸ்பிஐ வங்கியின் பொதுவான ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுடன் ஒப்பிடும் போது, எஸ்பிஐ வீ கேர் திட்டத்தில் முதலீடு செய்யும் மூத்த குடி மக்களுக்குக் கூடுதலாக 0.30 சதவீதம் வரை லாபம் கிடைக்கும்.
5 வருடங்கள் அல்லது அதற்கும் அதிகமான டெர்ம் டெபாசிட் திட்டத்தில் முத்த குடிமக்கள் முதலீடு செய்யும் போது கூடுதலாக 0.80 சதவீதம் வரை லாபம் அளிக்கும்.
எஸ்பிஐ வீ கேர் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது 6.50 சதவீதம் வரை முத்த குடிமக்களுக்கு லாபம் கிடைக்கும். எனினும் முதிர்வு காலம் முன்பே முதலீட்டிலிருந்து வெளியேறினால் வட்டி விகிதம் குறைய வாய்ப்பு உண்டு. ஆக இந்த வட்டி குறைப்பானது மூத்த குடிமக்களுக்கு பெரிதாக பாதிப்பினை ஏற்படுத்த வாய்ப்பில்லை.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications