எஸ்பிஐ இவெல்த் இன்சூரன்ஸ் திட்டம்.. யாருக்கு பொருந்தும்.. சிறப்பம்சங்கள் என்ன?

காப்பீடு மற்றும் முதலீடு என இரண்டு அம்சங்களையும் ஒருங்கே கொண்ட ஒரு இன்சூரன்ஸ் திட்டம் தான், எஸ்பிஐ இவெல்த் இன்சூரன்ஸ். இது ஒரு ஆன்லைன் மூலம் எடுக்கும் பாலிசி.

இந்த பாலிசியில் இரண்டு வகையான பாலிசிகள் உண்டு. இந்த பாலிசி குடும்பத்திற்கு பாதுகாப்பு கொடுப்பதோடு, வருங்காலத்திற்கான சொத்துக்களையும் சேர்க்க உதவுகிறது.

எதிர்பாராத நேரங்களில் இந்த திட்டத்தின் மூலம் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்குகிறது. அதோடு இந்த திட்டம் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இரு திட்டங்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

எஸ்பிஐ இவெல்த் இன்சூரன்ஸ் திட்டம்.. யாருக்கு பொருந்தும்.. சிறப்பம்சங்கள் என்ன?

ஒன்று growth அடிப்படையிலான பாலிசி, இரண்டாவது balanced பாலிசி எல்லாவற்றிற்கும் மேலாக இந்த திட்டத்தினை ஆன்லைனிலேயே எடுத்துக் கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் 18 வயது முதல் இணைந்து கொள்ளலாம். அதிகபட்ச வயது 50 வயதாகும். முதிர்வு வயது 60 வயது. இந்த பாலிசியின் குறைந்தபட்ச காலம் 10 வருடங்கள். அதிகபட்சம் பாலிசி காலம் 20 வருடங்கள்.

இந்த பாலிசியை எடுக்க குறைந்தபட்ச பிரீமியமாக வருடத்திற்கு 10,000 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இதே அதிகபட்சம் 1,00,000 லட்சம் ரூபாய் வரை செலுத்திக் கொள்ளலாம். உங்களின் பிளானிற்கு ஏற்ப பிரீமியம் இருக்கும்.

அதெல்லாம் சரி எவ்வளவு தொகையை கிளைம் செய்ய முடியும்? உங்களது பிரீமிய தொகையில் 10 மடங்கு கிளைம் செய்து கொள்ளலாம். பிரீமியத்தினை நீங்கள் மாத மாதமாகவோ அல்லது வருட வருடத்திற்கு ஒரு முறையோ செலுத்திக் கொள்ளலாம். இந்த பாலிசிக்கு ரைடர் பாலிசி என்பது கிடையாது.

இந்த பாலிசி எடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு பகுதி தொகையினை பெற்றுக் கொள்ள முடியும். அதுவும் ஒரு ஆண்டில் ஒரு முறை மட்டுமே கட்டணமில்லாமல் பணம் எடுத்துக் கொள்ள முடியும். அதற்கு பிறகு எடுத்தால் அதற்கு கட்டணம் உண்டு.

இந்த திட்டத்திற்கு எதிராக கடன் பெற இயலாது. இந்த திட்டத்தில் பிரிவு 80 சி மற்றும் 10டியின் கீழ் வரிச்சலுகை உண்டு.

இந்த யூலிப் பாலிசிகள் சந்தையுடன் இணைந்தவற்றில் முதலீடு செய்யப்படுவதால் சந்தை நிலவரத்தை பொறுத்து நம்ப முடியாத அளவுக்கு லாபம் கிடைக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+