எஸ்பிஐ சிறப்பு நிலையான வைப்புத் திட்டத்தின் காலக்கெடுவை நீட்டித்துள்ளது. அதிக வட்டி விகிதத்தை வழங்கும் இந்தத் திட்டத்தில் மார்ச் 31, 2025 வரை டெபாசிட் செய்யலாம் என வங்கி அறிவித்துள்ளது.
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை அறிவித்துள்ளது. அதில், எஸ்பிஐ அம்ரித் கலாஷ் என்ற அதிக வட்டி விகிதத்தை வழங்கும் சிறப்பு நிலையான வைப்புத் திட்டமானது, காலக்கெடுவை மீண்டும் நீட்டித்துள்ளது.

இந்த திட்டம் செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு மற்றொரு வாய்ப்பு அளிக்கும் நோக்கத்துடன், மார்ச் 31, 2025 வரை காலக்கெடு நீட்டிக்கப்படுகிறது என்று வங்கி அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதிக வட்டி பலன் பெற விரும்புவோர் இந்த திட்டத்தில் சேர்ந்து வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
எஸ்பிஐ அம்ரித் கலாஷ் திட்டத்தின் காலம் 400 நாட்கள் ஆகும். இதன் அதிகபட்ச வட்டி விகிதம் 7.10 சதவீதம் ஆக உள்ளது. எஸ்பிஐயில் குறைந்த கால அவகாசத்துடன் கூடிய அதிக வட்டி விகிதத்துடன் கூடிய திட்டமும் இதுதான். மூத்த குடிமக்கள் 7.60 சதவீதம் வட்டி விகிதம் அதாவது 0.50 சதவீதம் அதிகம் பெறுகின்றனர்.
SBI FD விகிதங்கள்:தற்போது, எஸ்பிஐயில் நிலையான வைப்பு வட்டி விகிதங்கள் பொது வாடிக்கையாளர்களுக்கு 3.50 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை உள்ளது. இதற்கு, மூத்த குடிமக்கள் 7.6 சதவீதம் வரை வட்டி விகிதத்தைப் பெறுவார்கள்.
இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு எஸ்பிஐ அதிகபட்சமாக 7 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதே மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் 7.50 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் பொதுக் குடிமக்களுக்கு 6.75 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு 7.25 சதவீதமும் ஆகும்.
5-10 வருட கால டெபாசிட்டுகள் 6.5 சதவீத வட்டி விகிதத்தைக் கொண்டுள்ளன. மூத்த குடிமக்களுக்கு, 7.50 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
மேலும் 7 நாட்கள் முதல் 75 நாட்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 3.5 சதவீதம் ஆகும். மூத்த குடிமக்களுக்கு இது 4 சதவீதம் ஆக உள்ளது. இது வங்கியின் ஆரம்ப வட்டி விகிதங்கள் ஆகும். அதேபோல், 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான காலத்திற்கு சாதாரண மக்களுக்கு 5.5 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 6 சதவீதமும் வட்டி விகிதத்தை வழங்குகிறது.
அதுவே, ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால் பொது குடிமக்களுக்கு 6.8 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.3 சதவீதமும் வழங்கப்படுகிறது.
More From GoodReturns

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications