இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தங்கள் வங்கியில் வழங்கப்படும் ஃபிக்சட் டெபாசிட் மற்றும் ரெக்கரிங் டெபாசிட் திட்டங்களுக்கு சிறந்த வட்டியை வழங்கி வருகிறது. ரிஸ்க் எடுக்காமல் முதலீடு செய்ய வேண்டும், அதே நேரத்தில் வருமானமும் அதிகமாக இருக்க வேண்டும் என்று எண்ணும் முதலீட்டாளர்கள் இதுபோன்ற திட்டங்களை தேர்வு செய்யலாம்.
ரூ.3 கோடிக்கும் குறைவான ஃபிக்சட் டெபாசிட் செய்யும்போது, பொது வாடிக்கையாளர்களுக்கு 3.05% முதல் 6.45 சதவீதம் வரையிலான வட்டி விகிதங்கள் வழங்கப்படுகிறது. அதுவே மூத்த குடிமக்களாக இருந்தால் இன்னும் கூடுதலாக அதாவது 3.05 சதவீதத்தில் தொடங்கி 6.95 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. 2 முதல் 3 ஆண்டுகள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 6.40 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 6.90 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.
இதற்கு கூடுதலாக அம்ரித் விருஷ்டி என்ற சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தையும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் கால அளவு 444 நாட்கள் இதற்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 6.45 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 6.95% வட்டியும் வழங்கப்படுகிறது.

ஜூன் 2026-ஆம் ஆண்டின் பொது வாடிக்கையாளர்களுக்கான ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள்:
7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை - 3.05%
46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை - 4.90%
180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை - 5.65%
211 நாட்கள் முதல் 1 ஆண்டு வரை - 5.90%
1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரை - 6.25%
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை - 6.40%
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை - 6.30%
5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை - 6.05%
மூத்த வாடிக்கையாளர்களுக்கான ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள்:
7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை - 3.55%
46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை - 5.40%
180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை - 6.15%
211 நாட்கள் முதல் 1 ஆண்டு வரை - 6.40%
1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரை - 6.75%
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை - 6.90%
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை - 6.80%
5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை - 7.05%
ரெக்கரிங் டெபாசிட்: மொத்தமாக முதலீடு செய்ய முடியாதவர்கள், ரெக்கர்ரிங் டெபாசிட் என்று சொல்லப்படுகிற மாத மாத முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்யலாம். தற்போது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 12 மாதங்கள் முதல் 120 மாதங்கள் வரையிலான RD திட்டங்களை வழங்குகிறது. இதில் நீங்கள் குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம்.


Click it and Unblock the Notifications