நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய வேண்டும்.. ஆனால் முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் தேர்ந்தெடுப்பது ஃபிக்சட் டெபாசிட்களைத் தான். FD-கள் வங்கிகளிலும் வழங்கப்படுகிறது.. போஸ்ட் ஆபீஸ்களிலும் வழங்கப்படுகிறது.. அப்படியானால் எங்கு வட்டி அதிகமாக இருக்கும்? எங்கு சென்று முதலீடு செய்வது லாபம் தரும்? என்று பலருக்கும் குழப்பம் வரலாம். உங்களுக்காக 5 வருட பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வழங்கும் வட்டி விகிதத்தையும் போஸ்ட் ஆபீஸ் வழங்கும் வட்டி விகிதத்தையும் ஒப்பிட்டு பார்த்து ரூ. 2 லட்சம் முதலீட்டுக்கு எங்கு லாபம் அதிகம் என்பதை இந்தப் பதிவில் பாப்போம்.
தற்போது போஸ்ட் ஆபீஸ்களில் 5 வருட FD திட்டங்களுக்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது. அதே போல ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் 5 வருடம் FD டெபாசிட்களுக்கு 6.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

வங்கியில் லாபம்: 6.5% வட்டி விகிதத்தில் 5 ஆண்டுகளுக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் 2 லட்சம் ரூபாயை முதலீடு செய்தால் வட்டியாக 76,084 ரூபாய் கிடைக்கும். எனவே முதிர்ச்சியின் போது நீங்கள் மொத்தம் 2,76,084 ரூபாயை பெறுவீர்கள்.
இதுவே மூத்த குடிமக்கள் 5 ஆண்டுகளுக்கு ரூ.2 லட்ச ரூபாயை பிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்தால் 7.5 சதவீத வட்டி விகிதத்தில் வட்டி வருமானமாக 89,990 ரூபாயை பெறுவீர்கள். இதன் விளைவாக முதிர்ச்சியின் போது மொத்தம் 2,89,990 கிடைக்கும்.
தபால் அலுவலகத்தில் லாபம்: தபால் அலுவலகத்தில் 5 வருட FD-களுக்கு, வட்டி விகிதம் 7.5%. நீங்கள் ரூ.2 லட்சத்தை முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் ரூ.89,990 வட்டி பெறுவீர்கள். எனவே, முதிர்ச்சியின் போது, நீங்கள் மொத்தம் ரூ.2,89,990 பெறுவீர்கள்.
மூத்த குடிமக்களும் முதிர்ச்சியின் போது இதே வட்டி விகிதத்தையும் மொத்தத் தொகையையும் பெறுகிறார்கள். SBI-யுடன் ஒப்பிடும்போது, அஞ்சல் அலுவலகம் 5 வருட FD-க்கு அதிக வருமானத்தை வழங்குகிறது.
பொது மக்களுக்கு SBI பேங்க் வழங்கும் FD வட்டி விகிதங்கள்:
7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: 3.50%
46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை: 5.50%
180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை: 6.00%
1 ஆண்டுக்கு குறைவான FD-கள்: 6.25%
2 ஆண்டுக்கு குறைவான FD-கள்: 6.80%
2 முதல் 3 ஆண்டுகள்: 7.00%
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுக்கும் குறைவான FD-கள்: 6.75%
5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை: 6.50%
தபால் அலுவலக FD வட்டி விகிதங்கள்:
1 ஆண்டு FD: 6.00%
2 ஆண்டு FD: 7.00%
3 ஆண்டு FD: 7.10%
5 ஆண்டு FD: 7.50%
5 வருட FD-க்கு, அஞ்சல் அலுவலகம் SBI உடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகமான வட்டி விகிதத்தையும் அதிக முதிர்வுத் தொகையையும் வழங்குகிறது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications