சேமிப்பு என்றாலே பலருக்கும் இன்றும் நினைவுக்கு வருவது வங்கி பிக்சட் டெபாசிட்கள் தான். இது வாடிக்கையாளர்களுக்கு நிலையான வருமானம் தரும் பாதுகாப்பான திட்டங்களாக உள்ளன. இவற்றில் சந்தை அபாயம் என்பது இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது முன் கூட்டியே தெரிந்து விடுவதால், முதலீட்டாளர்கள் பலரும் இன்றும் வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்கின்றனர்.
இந்த டெபாசிட் திட்டங்களில் நீங்கள் தேர்வு செய்யும் காலத்தினை பொறுத்து வட்டி விகிதம் என்பது அதிகமாக இருக்கும்.
வட்டி அதிகம்
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் கடந்த ஆண்டில் இருந்து ரிசர்வ் வங்கியானது ரெப்போ விகிதத்தினை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக வங்கிகள் பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டியினை அதிகரித்து வருகின்றன. இதன் மூலம் முதலீட்டாளர்கள் தற்போது கூடுதல் வட்டியினை பெற முடியும்.
வங்கியா? அஞ்சலகமா?
அந்த வகையில் நாட்டின் முன்னணி வங்கியான எஸ்பிஐ, ஹெச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட பலவும் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளன.
இந்திய அஞ்சலகமும் பிக்சட் டெபாசிட் திட்டத்தினை வங்கிகளை போல வழங்கி வருகின்றது. இது மேற்கோண்டு முதலீட்டாளர்களுக்கு நல்ல விஷயமாக பார்க்கப்படுகின்றது.
எது பெஸ்ட்?
இன்றைய காலகட்டத்தில் வங்கிகளில் வட்டி விகிதம் அதிகமா? அஞ்சலகத்தில் வட்டி விகிதம் அதிகமா? எங்கு வட்டி விகிதம் அதிகம்? எது முதலீட்டாளர்களுக்கு அதிக நன்மையை கொடுக்கும் வாருங்கள் பார்க்கலாம்.
அஞ்சலகத்தில் ஜனவரி 1, 2023 முதல் வட்டி விகிதம் 7% ஆக வழங்கப்படுகின்றது. வங்கிகளில் 5 ஆண்டுகால திட்டம் எனும்போது 6.6% ஆக வட்டி கிடைக்கிறது.
அஞ்சலகத்தில் என்ன வட்டி?
அஞ்சலகத்திலும் வங்கிகளில் உள்ளதைபோல டெர்ம் டெபாசிட்கள் இருந்தாலும், காலம் என்பது 1 ஆண்டில் இருந்து தொடங்கி, 5 ஆண்டு திட்டம் வரையில் உள்ளது.
1 ஆண்டு டெபாசிட் - 6.6%
2 ஆண்டு டெபாசிட் - 6.8%
3 ஆண்டு டெபாசிட் - 6.9%
5 ஆண்டு டெபாசிட் - 7%
எஸ்பிஐ-ல் என்ன விகிதம்?
எஸ்பிஐயில் 7 நாள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான திட்டம் என்பது உள்ளது. இதற்கு 3% முதல் 7.1% வரையில் வட்டி வழங்கப்படுகின்றது. இதில் மூத்த குடிமக்கள் 50 அடிப்படை புள்ளிகள் அதிகம் வட்டியினை பெறலாம். இந்த திட்டத்திற்கு கடந்த பிப்ரவரி 15, 2023 அன்று வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டது.
எஸ்பிஐ வட்டி விகிதம்?
7 நாள் முதல் 45 நாட்கள் வரையில் - 3%
46 நாள் முதல் 179 நாட்கள் வரையில் - 4.5%
180 நாள் முதல் 210 நாட்கள் வரையில் - 5.25%
211 நாட்கள் முதல் 1 ஆண்டுக்குள் - 5.75%
1 வருடம் முதல் 2 வருடத்திற்குள் - 6.8%
400 நாள் - 7.10%
2 வருடம் முதல் 3 வருடத்திற்குள் - 7%
3 வருடம் முதல் 5 வருடம் வரையில் - 6.5%
5 வருடம் முதல் 10 வருடம் வரையில் - 6.5%
எது பெஸ்ட்?
வங்கிகள் எனும்போது குறிப்பிட்ட இடங்களில் மட்டும் கிளைகளை கொண்டுள்ளன. அதேசமயம் அஞ்சலகங்கள் கிராமப்புற பகுதிகளில் கூட சேவையை கொடுக்கின்றன. அதோடு வங்கிகளை காட்டிலும் அஞ்சலகத்தில் வட்டி சற்றே அதிகம் எனலாம். அஞ்சலகத்தில் 5 ஆண்டு டெபாசிட் திட்டத்திற்கு 7% வட்டி கிடைக்கிறது. இதே எஸ்பிஐ-யில் 5 - 10 ஆண்டுகளுக்கே 6.5% தான் வட்டி கிடைக்கிறது. ஆக வருமான வகையில் அஞ்சலகத்திலேயே வட்டி அதிகம்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications