மக்கள் தங்கள் எதிர்காலத்தைப் பாதுகாப்பாக வைக்க எங்கே முதலீடு செய்யலாம் என்று திட்டமிட்டு கொண்டே இருக்கின்றனர். பெரும்பாலான மக்கள் FD-யில் முதலீடு செய்கின்றனர். ஏனெனில் FD-யில் முதலீடு செய்வது உங்கள் பணத்திற்கு பாதுகாப்பை வழங்குவது மட்டுமல்லாமல், நல்ல வருமானத்தையும் வழங்குகிறது. SBI பேங்கில் 1 வருட பிக்சட் டெபாசிட்டில் நீங்கள் முதலீடு செய்தால் உங்களுக்கு ரூ. 29,376 வட்டி கிடைக்கும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? இந்தப் பதிவில் அது குறித்த விவரங்களைப் பார்ப்போம்.
வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களிலும் FD முதலீடு செய்ய முடியும். வெவ்வேறு காலகட்டங்களுக்கு வெவ்வேறு வட்டி விகிதங்கள் விதிக்கப்படுகிறது. அனைத்து முதலீட்டாளர்களின் நோக்கமும் தங்கள் முதலீட்டிற்கு சிறந்த வருமானம் வர வேண்டும் என்பதுதான். அதற்கு ஏதுவாக எஸ்பிஐ வழங்கும் பிக்சட் டெபாசிட்களுக்கு நல்ல வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட்க்கான வட்டி - 3.00 சதவீதம்
180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட்க்கான வட்டி - 5.25 சதவீதம்
211 நாட்களுக்கு மேல் ஆனால் 1 வருடத்திற்கு குறைவான பிக்சட் டெபாசிட்க்கான வட்டி - 5.75 சதவீதம்
1 வருடத்திற்கு மேல் ஆனால் 2 வருடங்களுக்கு குறைவான பிக்சட் டெபாசிட்க்கான வட்டி - 6.80 சதவீதம்
2 வருடங்களுக்கு மேல் ஆனால் 3 வருடங்களுக்கு குறைவான பிக்சட் டெபாசிட்க்கான வட்டி - 7.00 சதவீதம்
3 வருடங்களுக்கு மேல் ஆனால் 5 வருடங்களுக்கு குறைவான பிக்சட் டெபாசிட்க்கான வட்டி - 6.50 சதவீதம்
5 வருடங்களுக்கு மேல் மற்றும் 10 ஆண்டுகள் வரையிலான பிக்சட் டெபாசிட்க்கான வட்டி - 6.50 சதவீதம்
400 நாட்கள் கொண்ட அம்ரித் கலாஷ் பிக்சட் டெபாசிட் திட்டம் - 7.10 சதவீதம்
எஸ்பிஐ பேங்கில் ரூ. 5 லட்சத்தை பிக்சட் டெபாசிட் செய்தால் எவ்வளவு வருமானம்?: ஒரு வருட பிக்சட் டெபாசிட்களுக்கு எஸ்பிஐ பேங்கில் 6.80% வட்டி வழங்கப்படுகிறது. இதற்கு ரூ. 29,376 வட்டி கிடைக்கும். முதிர்வில் ரூ.5,29,376 பெறலாம்.
2 வருட பிக்சட் டெபாசிட்டில் ரூ. 5 லட்சத்தை போட்டால் 6.80 சதவீத வட்டி விகிதத்தில் வட்டி வருமானமாக 72,187 ரூபாய் கிடைக்கும். 2 வருடங்கள் கழித்து ரூ. 5 லட்சமும், வட்டியும் சேர்த்து பெறலாம். 3 வருட பிக்சட் டெபாசிட்களுக்கு எஸ்பிஐ பேங்கில் 7.00 % வட்டி வழங்கப்படுகிறது. இதற்கு ரூ. 1,15,720 வட்டி கிடைக்கும். முதிர்வில் ரூ.6,15,720 பெறலாம்.
5 வருட பிக்சட் டெபாசிட்டில் ரூ. 5 லட்சத்தை போட்டால் 6.50 சதவீத வட்டி விகிதத்தில் வட்டி வருமானமாக 1,90,210 ரூபாய் கிடைக்கும். 5 வருடங்கள் கழித்து ரூ. 5 லட்சமும், வட்டியும் சேர்த்து பெறலாம்.


Click it and Unblock the Notifications