ஐயய்யோ..! Fixed Deposit-க்கு இவ்வளவு தான் வட்டியா..? வருத்தத்தில் வயதானவர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் வங்கிகளை பட்டியல் போடத் தொடங்கினால், அனைத்து தரப்பினரும் சொல்லும் வங்கி அரசின் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தான்.

யார் எங்கு கணக்கு வைத்திருந்தாலும், எஸ்பிஐ மீதான மக்களின் நம்பிக்கை பெரிய அளவில் மாறவில்லை. அப்படியே தான் இருக்கிறது.

இப்போது எஸ்பிஐ வங்கி மீது அத்தனை நம்பிக்கை வைத்திருப்பவர்கள் வருத்தப்படும் விதத்தில், மேலும் ஒரு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறது.

வட்டி குறைப்பு

வட்டி குறைப்பு

தன் சேமிப்பு கணக்குகளில் டெபாசிட் செய்து வைத்திருக்கும் பணம் மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் டெபாசிட் செய்து வைத்திருக்கும் பணத்துக்கு கொடுக்கும் வட்டி விகிதங்களைக் குறைத்து இருக்கிறது எஸ்பிஐ. இந்த வட்டி குறைப்பினால் வங்கியில் இருந்து பணம் வெளியே வரும். பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறார்கள் துறை சார் வல்லுநர்கள்.

1 லட்சம் ரூபாய்க்குள்

1 லட்சம் ரூபாய்க்குள்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி, தன்னுடைய சேமிப்பு கணக்குகளில் ஒரு லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்து வைத்திருக்கும் தொகைக்கு ஆண்டுக்கு 3.5 சதவிகிதமாக இருந்த வட்டி விகிதத்தை 3.25 சதவிகிதமாக குறைத்து இருக்கிறார்கள். இந்த சேமிப்புக் கணக்கு வட்டி குறைப்பு 01 நவம்பர் 2019 முதல் நடைமுறைக்கு வந்துவிட்டது.

1 லட்சம் ரூபாய்க்கு மேல்

1 லட்சம் ரூபாய்க்கு மேல்

அதே போல எஸ்பிஐ சேமிப்பு கணக்குகளில், 1 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் வைத்திருப்பவர்களுக்கு ஆண்டுக்கு 3 சதவிகிதம் மட்டுமே வட்டி கொடுக்கிறார்கள். இதுவும் 01 நவம்பர் 2019-ல் இருந்து நடைமுறைக்கு வந்து விட்டது. ஆக அவசர தேவைக்கு வங்கி சேமிப்பு கணக்குகளில் காசு வைத்திருந்தவர்கள் இப்போது கொஞ்சம் பயந்து போய் இருக்கிறார்கள்.

எம் சி எல் ஆர் குறைப்பு

எம் சி எல் ஆர் குறைப்பு

இன்று எஸ்பிஐ வங்கி தன் எம் சி எல் ஆர் கடன் வட்டி விகிதங்களையும் 05 அடிப்படைப் புள்ளிகள் (0.05 %) குறைத்து இருக்கிறது. இந்த ஒரு நிதி ஆண்டில் 2019 - 20-ல் பல முறை தன் எம் சி எல் ஆர் வட்டி விகிதங்களைக் குறைத்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொது மக்களுக்கான FD வட்டி

பொது மக்களுக்கான FD வட்டி

எஸ்பிஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் (2 கோடி ரூபாய் வரைக்குமான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும்). இந்த வட்டி விகிதங்கள் 10 நவம்பர் 2019 முதல் அமலுக்கு வருகிறது.
SBI Fixed Deposit Interest rates

7 days to 45 days-4.50%
46 days to 179 days-5.50%
180 days to 210 days-5.80%
211 days to less than 1 year-5.8%
1 year to less than 2 year-6.25%
2 years to less than 3 years-6.25%
3 years to less than 5 years-6.25%
5 years and up to 10 years-6.25%

 

மூத்த குடிமக்களுக்கான FD வட்டி

மூத்த குடிமக்களுக்கான FD வட்டி

மூத்த குடிமக்களுக்கான எஸ்பிஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் (2 கோடி ரூபாய் வரைக்குமான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும்). இந்த வட்டி விகிதங்கள் 10 நவம்பர் 2019 முதல் அமலுக்கு வருகிறது.

Senior Citizen SBI Fixed Deposit Interest rates

7 days to 45 days-5.00%
46 days to 179 days-6.00%
180 days to 210 days-6.30%
211 days to less than 1 year-6.30%
1 year to less than 2 year-6.75%
2 years to less than 3 years-6.75%
3 years to less than 5 years-6.75%
5 years and up to 10 years-6.75%

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

sbi fixed deposit interest rates

The state bank of India has reduced its mclr and fixed deposit interest rates. this new rated are applicable from 10th November 2019.
Story first published: Friday, November 8, 2019, 16:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X