SBI ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் தொடங்கி வீட்டுக் கடனுக்கு வசூலிக்கும் வட்டி விகிதங்கள் வரை!

எஸ்பிஐ (SBI) வங்கியில், வாடிக்கையாளர்களுக்கான, ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு என்ன வட்டி கொடுக்கிறார்கள்? மூத்த குடிமக்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு எவ்வளவு வட்டி கொடுக்கிறார்கள்?

வீட்டுக் கடனுக்கு எல்லாம் என்ன வட்டி வசூலிக்கிறார்கள்? எம் சி எல் ஆர் வட்டி விகிதங்கள் என்ன..? என எல்லா விவரங்களையும் இதில் கொடுத்து இருக்கிறோம்.

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை எஸ்பிஐ மாற்றம் செய்து இருக்கிறது. எம் சி எல் ஆர் வட்டி விகிதங்களை மாற்றம் செய்யவில்லை எஸ்பிஐ. அதே போல வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்களையும் கடந்த ஜூலையில் இருந்து இதுவரை மாற்றம் செய்யவில்லை.

SBI MCLR வட்டி விகிதம்

SBI MCLR வட்டி விகிதம்

கடந்த 10 செப்டம்பர் 2020 முதல் கீழ் காணும் எம் சி எல் ஆர் வட்டி விகிதங்கள் அடிப்படையில் கடன் கொடுத்து வருகிறது எஸ்பிஐ. எம் சி எல் ஆர் வட்டி விகிதங்களை, எஸ்பிஐ செப்டம்பர் மாதத்தில் மாற்றவிலை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

  • ஓவர் நைட் - 6.65
  • 1 மாதம் - 6.65
  • 3 மாதம் - 6.65
  • 6 மாதம் - 6.95
  • 1 வருடம் - 7.00
  • 2 வருடம் - 7.20
  • 3 வருடம் - 7.30
SBI FD interest rates - பொது மக்கள்

SBI FD interest rates - பொது மக்கள்

60 வயதுக்கு உட்பட்ட, பொது மக்கள், எஸ்பிஐ வங்கியில் 2 கோடி ரூபாய்க்குள் செய்யும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்களைக் கீழே கொடுத்து இருக்கிறோம். இந்த வட்டி விகிதங்களை 10 செப்டம்பர்2020 முதல் கொடுத்து வருகிறது எஸ்பிஐ. இதற்கு முன் 27 மே 2020 அன்று எஸ்பிஐ தன் வட்டி விகிதங்களைக் குறைத்தது குறிப்பிடத்தக்கது.

  • 7 days to 45 days 2.9%
  • 46 days to 179 days 3.9%
  • 180 days to 210 days 4.4%
  • 211 days to less than 1 year 4.4%
  • 1 year to less than 2 year 4.9%
  • 2 years to less than 3 years 5.1%
  • 3 years to less than 5 years 5.3%
  • 5 years and up to 10 years 5.4%
SBI FD interest rates - மூத்த குடிமக்கள்

SBI FD interest rates - மூத்த குடிமக்கள்

60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், எஸ்பிஐ வங்கியில், 2 கோடி ரூபாய்க்குள் செய்யும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்களைக் கீழே கொடுத்து இருக்கிறோம். 10 செப்டம்பர் 2020 முதல் இந்த வட்டி விகிதங்களைக் கொடுக்கிறார்கள். இதற்கு முன் 27 மே 2020 அன்று எஸ்பிஐ தன் வட்டி விகிதங்களைக் குறைத்தது குறிப்பிடத்தக்கது.

  • 7 days to 45 days 3.4%
  • 46 days to 179 days 4.4%
  • 180 days to 210 days 4.9%
  • 211 days to less than 1 year 4.9%
  • 1 year to less than 2 year 5.4%
  • 2 years to less than 3 years 5.6%
  • 3 years to less than 5 years 5.8%
  • 5 years and up to 10 years 6.2%
SBI Home Loan interest rates - டேர்ம் லோன்

SBI Home Loan interest rates - டேர்ம் லோன்

கீழே கொடுத்து இருப்பது எல்லாமே டேர்ம் லோன் அடிப்படையாகக் கொண்டவைகள்.

  • 30 லட்சம் ரூபாய் வரையான வீட்டுக் கடனுக்கு 7.0 %
  • 30 - 75 லட்சம் ரூபாய் வரையான வீட்டுக் கடனுக்கு 7.25 %
  • 75 லட்சம் ரூபாய்க்கு மேல் 7.35 % வட்டி வசூலிக்கிறது எஸ்பிஐ வங்கி. இந்த வட்டி விகிதங்களை 01 ஜூலை 2020 முதல் கொடுக்கிறார்கள். இது சம்பளதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
SBI Home Loan interest rates - மேக்ஸ் கெயின்

SBI Home Loan interest rates - மேக்ஸ் கெயின்

கீழே கொடுத்து இருப்பது எல்லாமே எஸ்பிஐ மேக்ஸ் கெயின் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டவைகள்.

  • 30 லட்சம் ரூபாய் வரையான வீட்டுக் கடனுக்கு 7.35 %
  • 30 - 75 லட்சம் ரூபாய் வரையான வீட்டுக் கடனுக்கு 7.60 %
  • 75 லட்சம் ரூபாய்க்கு மேல் 7.70 % வட்டி வசூலிக்கிறது எஸ்பிஐ வங்கி. இந்த வட்டி விகிதங்களை 01 ஜூலை 2020 முதல் கொடுக்கிறார்கள். குறிப்பு: இந்த வட்டி விகிதங்கள், சம்பளதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும். கடந்த ஜூலை 2020 மாதத்தில் இருந்து, எந்த மாற்றமும் வட்டி விகிதத்தில் செய்யப்படவில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+