இந்தியாவிலேயே மிகப் பெரிய வங்கி, இந்திய மக்களின் வலுவான நம்பிக்கையைப் பெற்ற வங்கி, உலகின் டாப் வங்கிகளில் ஒரு இந்திய வங்கி என எதைத் தேடினாலும் எஸ்பிஐ ஒரு விடையாக வரும்.
அந்த அளவுக்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வாடிக்கையாளர்கள் இந்தியாவில் அதிகம்.
யார் எங்கு கணக்கைத் தொடங்கினாலும், எஸ்பிஐ-யிலும் ஒரு வங்கிக் கணக்கைத் திறந்து வையுங்கள் என்கிற வார்த்தையை பரவலாகக் கேட்க முடியும். அதிலும் குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அழுத்தமாகச் சொல்வார்கள்.
பெரிய வருத்தம்
இன்று வரை, நம் டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில், வயதானவர்கள் மற்றும் பென்ஷனர்கள் அதிகம் பேர், எஸ்பிஐ-ல் தான் வங்கிக் கணக்கைத் திறந்து வைத்திருப்பார்கள். குறிப்பாக இந்த எஸ்பிஐ வங்கியில் தான், தங்கள் சேமிப்புகளை மொத்தமாக ஃபிக்ஸட் டெபாசிட்டாக முதலீடு செய்து வைத்திருப்பார்கள்.
இது தான் எல்லாம்
இந்த ஃபிக்ஸட் டெபாசிட் தொகைக்கு கிடைக்கும் வட்டியை வைத்து தான், வயதானவர்கள் தங்களுக்கான எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வார்கள். ஆனால் என்ன நேரக் கிரகமோ இப்போது தொடர்ந்து எஸ்பிஐ, ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்துக் கொண்டே வருகிறார்கள்.
சாதாரண மக்களுக்கு
சாதாரண நபர்களின் ஒரு வருட ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 6.25% கொடுத்துக் கொண்டிருந்த எஸ்பிஐ இப்போது 6.1% தான் கொடுக்கப் போகிறார்களாம். எஸ்பிஐ வங்கியில், சாதாரண நபர்களுக்கு கொடுக்கும் அதிகபட்ச வட்டி விகிதமே 6.25 %-மாகத் தான் இருந்தது. ஆனால் இப்போது 6.1 சதவிகிதமாக குறைத்து இருக்கிறார்கள்.
மூத்த குடிமக்களுக்கு
மூத்த குடிமக்களின் ஒரு வருட ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 6.75 % கொடுத்துக் கொண்டிருந்த எஸ்பிஐ இப்போது 6.60 % தான் கொடுக்கப் போகிறார்களாம். எஸ்பிஐ வங்கியில், மூத்த குடிமக்களுக்கு கொடுக்கும் அதிகபட்ச வட்டி விகிதமே 6.75 %-மாகத் தான் இருந்தது. ஆனால் இப்போது மேலும் குறைத்து 6.60 சதவிகிதம் தான் கொடுக்கப் போகிறார்களாம்.
பொது மக்களுக்கான FD வட்டி
எஸ்பிஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் (2 கோடி ரூபாய் வரைக்குமான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும்). இந்த வட்டி விகிதங்கள் 10 ஜனவரி 2019 முதல் அமலுக்கு வருகிறது.
SBI Fixed Deposit Interest rates
7 days to 45 days-4.50%
46 days to 179 days-5.50%
180 days to 210 days-5.80%
211 days to less than 1 year-5.8%
1 year to less than 2 year-6.10%
2 years to less than 3 years-6.10%
3 years to less than 5 years-6.10%
5 years and up to 10 years-6.10%
மூத்த குடிமக்களுக்கான FD வட்டி
மூத்த குடிமக்களுக்கான எஸ்பிஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் (2 கோடி ரூபாய் வரைக்குமான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும்). இந்த வட்டி விகிதங்கள் 10 நவம்பர் 2019 முதல் அமலுக்கு வருகிறது.
Senior Citizen SBI Fixed Deposit Interest rates
7 days to 45 days-5.00%
46 days to 179 days-6.00%
180 days to 210 days-6.30%
211 days to less than 1 year-6.30%
1 year to less than 2 year-6.60%
2 years to less than 3 years-6.60%
3 years to less than 5 years-6.60%
5 years and up to 10 years-6.60%


Click it and Unblock the Notifications