கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்திய மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்கிற நோக்கில் மத்திய அரசு மார்ச் 26 அன்று 1.70 லட்சம் கோடி ரூபாய்க்கு உதவித் திட்டங்களை அறிவித்தார்கள்.
அதனைத் தொடர்ந்து மத்திய ரிசர்வ் வங்கி நேற்று மார்ச் 27, 2020 தன் ரெப்போ ரேட் வட்டி விகிதத்தை 0.75 % மற்றும் ரிவர்ஸ் ரெப்போ ரேட் வடிட் விகிதத்தை 0.90 % குறைத்தது.
இதனால் பல வங்கிகள் தங்களின் கடனுக்கான வட்டி விகிதம் மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதங்களைக் குறைக்க நிறைய வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி இருந்தோம்.
ஃபிக்ஸட் டெபாசிட்
அதிக படிப்பறிவு இல்லாத மக்கள் தொடங்கி, மெத்தப் படித்தவர்கள் வரை பலரும் இந்த வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டை ஒரு நல்ல முதலீடாக நம்பி பணத்தை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அதில் வரும் வட்டி வருமானத்தை வைத்து பல தரப்பினர் தங்கள் அன்றாட வாழ்கையையே ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஃபிக்ஸட் டெபாசிட்டை நம்பி வாழ்க்கை
தன் சேமிப்பை எல்லாம் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் மட்டுமே முதலீடு செய்து அதிலிருந்து வரும் வருமானத்தை நம்பி வாழ்பவர்கள்,
பென்ஷன் பணத்தை ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டு வைத்து வரும் வருமானத்தில் வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருப்பவர்கள்,
எந்த சொந்த பந்தங்களின் ஆதரவு இல்லாமல் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் பணத்தை மட்டுமே வைத்து வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருப்பவர்களைத் தான் இந்த வட்டி விகித குறைப்பு பெரிய அளவில் பாதிக்கும்.
மற்றவர்கள்
மற்ற தரப்பினர்களுக்கு பாதிப்பு என்றால் கூட தங்கள் வாழ்க்கையை, வேறு வழியில் இருந்து வரும் வருமானத்தைக் கொண்டு நடத்திக் கொள்ளலாம். ஆனால் மேலே சொன்னவர்கள் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் இருந்து வரும் வருமானத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் என்பதால் அவர்களுக்குத் தான் பாதிப்பு அதிகம். சரி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகித குறைப்புக்கு வருவோம்.
எஸ்பிஐ
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தன் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை 0.2 சதவிகிதம் முதல் 0.5 சதவிகிதம் வரை குறைத்து இருக்கிறார்கள். தற்போது யாருக்கு, எந்த வகையான டெபாசிட்களுக்கு எவ்வளவு வட்டி கொடுக்கிறார்கள், எவ்வளவு வட்டி விகிதத்தைக் குறைத்து இருக்கிறார்கள் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
பொது மக்களுக்கான FD வட்டி
28-03-2020 முதல், எஸ்பிஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் (60 வயதுக்கு உட்பட்டவர்கள், 2 கோடி ரூபாய் வரைக்குமான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும்).
SBI Fixed Deposit Interest rates
7 days to 45 days-3.50%
46 days to 179 days-4.50%
180 days to 210 days-5.00%
211 days to less than 1 year-5.00%
1 year to less than 2 year-5.70%
2 years to less than 3 years-5.70%
3 years to less than 5 years-5.70%
5 years and up to 10 years-5.70% 28-03-2020 முதல், எஸ்பிஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் (60 வயதுக்கு உட்பட்டவர்கள், 2 கோடி ரூபாய் வரைக்குமான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும்).
SBI Fixed Deposit Interest rates
7 days to 45 days-3.50%
46 days to 179 days-4.50%
180 days to 210 days-5.00%
211 days to less than 1 year-5.00%
1 year to less than 2 year-5.70%
2 years to less than 3 years-5.70%
3 years to less than 5 years-5.70%
5 years and up to 10 years-5.70%
பொது மக்களுக்கான FD வட்டி எவ்வளவு குறைவு
ஒவ்வொரு டெபாசிட்டுக்கும் சுமாராக 0.2 % முதல் 0.5 சதவிகிதம் வரை குறைத்து இருக்கிறார்கள். ஒவ்வொரு டெபாசிட் திட்டத்துக்கும் எவ்வளவு குறைத்து இருக்கிறார்கள் என்கிற விவரங்களைக் கீழே காணலாம்.
7 days to 45 days-0.50%
46 days to 179 days-0.50%
180 days to 210 days-0.50%
211 days to less than 1 year-0.50%
1 year to less than 2 year-0.20%
2 years to less than 3 years-0.20%
3 years to less than 5 years-0.20%
5 years and up to 10 years-0.20%
மூத்த குடிமக்களுக்கான FD வட்டி
28-03-2020 முதல், மூத்த குடிமக்களுக்கான (60 வயதுக்கு மேற்பட்டவர்கள்) எஸ்பிஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் (2 கோடி ரூபாய் வரைக்குமான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும்).
Senior Citizen SBI Fixed Deposit Interest rates
7 days to 45 days-4.00%
46 days to 179 days-5.00%
180 days to 210 days-5.50%
211 days to less than 1 year-5.50%
1 year to less than 2 year-6.20%
2 years to less than 3 years-6.20%
3 years to less than 5 years-6.20%
5 years and up to 10 years-6.20%
மூத்த குடிமக்களுக்கான FD வட்டி
ஒவ்வொரு மூத்த குடிமக்களுக்கான எஸ்பிஐ டெபாசிட்டுக்கும் சுமாராக 0.2 சதவிகிதம் முதல் 0.5 சதவிகிதம் வரை வட்டியைக் குறைத்து இருக்கிறார்கள். ஒவ்வொரு டெபாசிட் திட்டத்துக்கும் எவ்வளவு குறைத்து இருக்கிறார்கள் என்கிற விவரங்களைக் கீழே காணலாம்.
7 days to 45 days-0.50%
46 days to 179 days-0.50%
180 days to 210 days-0.50%
211 days to less than 1 year-0.50%
1 year to less than 2 year-0.20%
2 years to less than 3 years-0.20%
3 years to less than 5 years-0.20%
5 years and up to 10 years-0.20%
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications