இந்தியாவிலேயே அதிக வாடிக்கையாளர்களை வைத்திருக்கும் வங்கி, அதிக வங்கிக் கிளைகளை வைத்திருக்கும் வங்கி, அதிகம் கடன் கொடுத்து இருக்கும் வங்கி என எப்படிப் பார்த்தாலும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு தான் முதல் இடம்.
அப்படிப்பட்ட எஸ்பிஐ (SBI) வங்கியில், வாடிக்கையாளர்களுக்கான, ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு என்ன வட்டி கொடுக்கிறார்கள்? மூத்த குடிமக்களுக்கான டெபாசிட் திட்டங்களுக்கு எவ்வளவு கொடுக்கிறார்கள்?
அது சரி வீட்டுக் கடனுக்கு எல்லாம் என்ன வட்டி வசூலிக்கிறார்கள்? எம் சி எல் ஆர் வட்டி விகிதங்கள் என்ன? வாருங்கள் பார்ப்போம்.
SBI Savings Bank Deposit வட்டி விகிதங்கள்
எஸ்பிஐ (SBI), வங்கியின் சேமிப்புக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு, ஆண்டுக்கு 2.70 % வட்டி கொடுக்கிறார்கள். எஸ்பிஐ சேமிப்புக் கணக்கில், ஒரு லட்சம் ரூபாய் வரை பேலன்ஸ் வைத்திருப்பவர்கள் மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் பேலன்ஸ் வைத்திருப்பவர்கள் என எல்லோருக்குமே 2.70 % தான் வட்டி என்கிறது எஸ்பிஐ. இந்த வட்டி விகிதங்களை 31 மே 2020 முதல் கொடுத்து வருகிறார்கள்.
SBI MCLR வட்டி விகிதம்
கடந்த 10 ஆகஸ்ட் 2020 முதல் கீழ் காணும் எம் சி எல் ஆர் வட்டி விகிதங்கள் அடிப்படையில் கடன் கொடுத்து வருகிறது எஸ்பிஐ.
Over night - 6.65
One Month - 6.65
Three Month - 6.65
Six Month - 6.95
One Year - 7.00
Two Years - 7.20
Three Years - 7.30
SBI FD interest rates - பொது மக்கள்
60 வயதுக்கு உட்பட்ட, பொது மக்கள், எஸ்பிஐ வங்கியில் 2 கோடி ரூபாய்க்குள் செய்யும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்களைக் கீழே கொடுத்து இருக்கிறோம். இந்த வட்டி விகிதங்களை 27 மே 2020 முதல் கொடுத்து வருகிறது எஸ்பிஐ.
7 days to 45 days 2.9%
46 days to 179 days 3.9%
180 days to 210 days 4.4%
211 days to less than 1 year 4.4%
1 year to less than 2 year 5.1%
2 years to less than 3 years 5.1%
3 years to less than 5 years 5.3%
5 years and up to 10 years 5.4%
SBI FD interest rates - மூத்த குடிமக்கள்
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில், 2 கோடி ரூபாய்க்குள் செய்யும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்களைக் கீழே கொடுத்து இருக்கிறோம். இந்த வட்டி விகிதங்களை 27 மே 2020 முதல் கொடுத்து வருகிறது எஸ்பிஐ.
7 days to 45 days 3.4%
46 days to 179 days 4.4%
180 days to 210 days 4.9%
211 days to less than 1 year 4.9%
1 year to less than 2 year 5.6%
2 years to less than 3 years 5.6%
3 years to less than 5 years 5.8%
5 years and up to 10 years 6.2%
SBI Home Loan interest rates - டேர்ம் லோன்
கீழே கொடுத்து இருப்பது எல்லாமே டேர்ம் லோன் அடிப்படையாகக் கொண்டவைகள்.
30 லட்சம் ரூபாய் வரையான வீட்டுக் கடனுக்கு 7.0 %
30 - 75 லட்சம் ரூபாய் வரையான வீட்டுக் கடனுக்கு 7.25 %
75 லட்சம் ரூபாய்க்கு மேல் 7.35 % வட்டி வசூலிக்கிறது எஸ்பிஐ வங்கி. இந்த வட்டி விகிதங்களை 01 ஜூலை 2020 முதல் கொடுக்கிறார்கள். இது சம்பளதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
SBI Home Loan interest rates - மேக்ஸ் கெயின்
கீழே கொடுத்து இருப்பது எல்லாமே எஸ்பிஐ மேக்ஸ் கெயின் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டவைகள்.
30 லட்சம் ரூபாய் வரையான வீட்டுக் கடனுக்கு 7.35 %
30 - 75 லட்சம் ரூபாய் வரையான வீட்டுக் கடனுக்கு 7.60 %
75 லட்சம் ரூபாய்க்கு மேல் 7.70 % வட்டி வசூலிக்கிறது எஸ்பிஐ வங்கி. இந்த வட்டி விகிதங்களை 01 ஜூலை 2020 முதல் கொடுக்கிறார்கள். குறிப்பு: இந்த வட்டி விகிதங்கள், சம்பளதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications