எல்லோருக்கும் சேமிக்க வேண்டும் என்ற திட்டம் இருக்கும். ஆனால் எதில் சேமிப்பது? எப்படி சேமிப்பது? எங்கு எவ்வளவு வட்டி? எங்கு அதிக வட்டி கிடைக்கும்? எது சிறந்தது என பலருக்கும் தெரிவதில்லை.
இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு பழக்கம் எவ்வளவு தேவையானது என்பதை பலரும் உணர்ந்திருப்போம். இந்த காலகட்டத்தில் சேமிப்பது கடினம் என்றாலும், மற்ற விஷயங்களை தள்ளி விட்டு இதற்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது.
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது வங்கி வைப்பு நிதி தான். குறிப்பாக எஸ்பிஐ, ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கி, அஞ்சலக டெபாசிட் வட்டி எவ்வளவு? எது சிறந்தது? எங்கு வட்டி அதிகம் என பார்க்கலாம் வாருங்கள்.
சிறந்த முதலீடு
இந்தியாவில் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக வங்கி பிக்ஸட் டெபாசிட் உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்குள் குறிப்பிட்ட வட்டி விகிதத்தினை தருகின்றன. பெரும்பாலும் இந்த கால வரம்பு மாறுவதில்லை. வட்டி விகிதமும் பெரியளவில் மாற்றம் இருப்பதில்லை. ஆனால் சிறு துளி பெருவெள்ளம் என்பது போல சிறிது வட்டி விகிதம் அதிகம் என்றாலும், அது சேமிப்போருக்கு லாபம் தானே. அந்த வகையில் எஸ்பிஐ, ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கி, அஞ்சலக டெபாசிட் உள்ளிட்டவற்றில் எவ்வளவு வட்டி விகிதம் என தெரிந்து கொள்ளலாம்.
எஸ்பிஐ-யில் என்ன விகிதம்?
எஸ்பிஐ-யில் 2 கோடி ரூபாய்க்குள் செய்யப்படும் தொகைக்கு இந்த வட்டி விகிதம் பொருந்தும். இதில் மூத்த குடி மக்களுக்கு 50 அடிப்படை புள்ளிகள் அதிகம்.
- 7 நாட்கள் முதல் - 45 நாட்கள் வரையி;ல் வட்டி விகிதம் - 2.90%
- 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான வைப்பு தொகைக்கு - 3.90%
- 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையில்- 4.40%
- 211 நாட்கள் முதல் 1 வருடத்துக்கும் குறைவான வைப்புத் தொகைக்கு- 4.40%
- 1 வருடம் முதல் 2 வருடத்துக்குள் - 4.90%
- 2 வருடம் முதல் 3 வருடத்துக்குள் - 5.10%
- 3 வருடம் முதல் 5 வருடத்துக்குள் - 5.30%
- 5 வருடம் முதல் 10 வருடம் வரையில் - 5.40%
ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கியில் எவ்வளவு வட்டி?
ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கி-யில் 2 கோடி ரூபாய்க்குள் செய்யப்படும் தொகைக்கு இந்த வட்டி விகிதம் பொருந்தும்.
- 7 - 14 நாட்கள் - 2.75%
- 15 - 29 நாட்கள் - 3.00%
- 30 - 45 நாட்கள் - 3.50%
- 46 - 90 நாட்களுக்கு - 4.00%
- 91 - 180 நாட்களுக்கு - 4.50%
- 181 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் - 5.25%
- 1 வருடம் முதல் - 499 நாட்கள் வரை - 5.75%
- 500 நாட்களுக்கு - 6.00%
- 501 நாட்கள் முதல் - 2 வருடம் வரை - 5.75%
- 2 வருடம் 1 நாள் முதல் 5 வருடம் வரை - 5.75%
- 5 வருடம் 1 நாள் முதல் - 10 வருடம் வரை - 5.75%
அஞ்சலக டெபாசிட்டுக்கு எவ்வளவு வட்டி?
- 7 நாள் முதல் 1 வருடம் வரை - 5.50%
- 1 வருடம் 1 நாள் முதல் 2 வருடம் வரையில் -5.50%
- 2 வருடம் 1 நாள் முதல் 3 வருடம் வரையில் - 5.50%
- 3 வருடம் 1 நாள் முதல் 5 வருடம் வரையில் - 6.70%
மேற்கண்ட இந்த வட்டி விகிதங்களில் அஞ்சலக டைம் டெபாசிட்டுக்கு அதிகபட்சமாக 6.7% வரை வட்டி வழங்கப்படுகிறது. அதோடு இங்கு சேமிப்பும் எளிது. எப்படி இருப்பினும் உங்களுக்கு அருகில் உள்ள, உங்களுக்கு ஏற்ற ஒன்றில் டெபாசிட் செய்வது நல்லது. இறுதி முடிவு என்பது உங்களுடையதாக இருக்கட்டும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications