நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, வங்கிகளில் வைத்திருக்கும் பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு வட்டி குறைப்பு செய்துள்ளது.
இந்த வட்டி குறைப்பானது செப்டம்பர் 10 முதல் அமலுக்கு வரும் என்றும் எஸ்பிஐ அறிவித்துள்ளது.
எனினும் எஸ்பிஐ வீகேர் டெபாசிட் ஸ்கீம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சரி வாருங்கள் திருத்தப்பட்ட வட்டி விகிதங்களை பார்க்கலாம்.
வட்டி குறைப்பு
தொடர்ச்சியான வங்கிகள் வங்கி வைப்பு நிதிக்களுக்கான வட்டி விகிதம் குறைந்தாலும், நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் இது ஒரு கணிசமான வருவாயினைக் கொடுக்கும் பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் எந்தவொரு முதலீடும் பாதுகாப்பில்லாததாகத் தான் கருதப்படுகிறது. சில முதலீடுகள் முதலீட்டிற்கே பங்கு விளைவிக்கும் நிலையில், குறைவான வட்டியானலும், மக்களுக்கு பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது.
மூத்த குடிமக்களுக்கு சலுகை
ஆக இந்த வைப்பு நிதிகள் உங்களின் வருவாயினை உறுதியளிக்கின்றன. அதோடு மற்ற முதலீடுகளைப் போல் சந்தை ஏற்ற இறக்கங்களால் இது பாதிக்கப்படாது. அதோடு இந்த பிக்ஸட் டெபாசிட்டுகளை எளிதில் புதுபிக்கலாம் என்பதால், இது மக்களுக்கு எளிதான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. அதிலும் மூத்த குடி மக்களுக்கு கூடுதலாக 50 அடிப்படை புள்ளிகள் வழங்கப்படுகிறது. இதனால் இது மூத்த குடிமக்களுக்கு ஏதுவான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.
பொது மக்களுக்கான புதிய வட்டி விகிதம்
7 நாட்கள் முதல் - 45 நாட்கள் வரையி;ல் வட்டி விகிதம் - 2.90%
46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான வைப்பு தொகைக்கு - 3.9%
இதே 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையில்- 4.40%
211 நாட்கள் முதல் 1 வருடத்துக்கும் குறைவான வைப்புத் தொகைக்கு- 4.40%
இதே 1 வருடம் முதல் 2 வருடத்துக்குள் - 4.9%
2 வருடம் முதல் 3 வருடத்துக்குள் - 5.1%
3 வருடம் முதல் 5 வருடத்துக்குள் - 5.3%
5 வருடம் முதல் 10 வருடம் வரையில் - 5.4%
மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம்
7 நாட்கள் முதல் - 45 நாட்கள் வரையி;ல் வட்டி விகிதம் - 3.40%
46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான வைப்பு தொகைக்கு - 4.4%
இதே 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையில்- 4.90%
211 நாட்கள் முதல் 1 வருடத்துக்கும் குறைவான வைப்புத் தொகைக்கு- 4.90%
இதே 1 வருடம் முதல் 2 வருடத்துக்குள் - 5.40%
2 வருடம் முதல் 3 வருடத்துக்குள் - 5.6%
3 வருடம் முதல் 5 வருடத்துக்குள் - 5.8%
5 வருடம் முதல் 10 வருடம் வரையில் - 6.2%
எஸ்பிஐ வீகேர்
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். இருப்பினும், இந்தத் திட்டம் என்ஆர்ஐ- மூத்த குடிமக்களுக்குப் பொருந்தாது. இத்திட்டத்தில் இணைய ஆர்வமுள்ளவர்கள் 2020 செப்டம்பர் 30ஆம் தேதிக்கு முன்னர் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அதனை டிசம்பர் வரை நீட்டித்துள்ளது இவ்வங்கி. இந்த திட்டத்தின் மூலம் சாதாரண மக்களுக்கு கிடைக்கும் வட்டியினை விட 80 அடிப்படை புள்ளிகள் வட்டியினை அதிகமாக பெறலாம்.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications