வீட்டில் சும்மா இருக்கும் தங்கம் மூலம் இப்படியும் சம்பாதிக்கலாம்.. எஸ்பிஐ கொடுக்கும் செம திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக தங்கம் என்றாலே கவர்ச்சிகரமான பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. இது இன்றும் பல குடும்பங்களிலும் அவசரத்திற்கு உதவும் ஆபத்பாந்தவனாக உள்ளது.

 

இது குறைந்த ஆவணங்கள், கேட்டவுன் சிறிது நேரத்திலேயே கடன் என பல வகையிலும் உதவுகின்றது.

பொதுவாக கையில் பணம் இருக்கும் போது பல நடுத்தர குடும்பங்களில், முதலீடு எனும்போது அதில் முதலில் இருப்பது தங்கம் தான். இது எதிர்காலத்தில் தங்களது பெண் குழந்தைகளுக்கு உதவும். அதோடு அவசர காலத்திற்கும் பிணையமாக வைத்து கடன் பெற உதவும் என்பதால் வேறு ஆப்சனே வேண்டாம் எனலாம். எனினும் பலரும் தங்கத்தினை வாங்கி வீட்டில் வெறுமனே வைத்திருப்பர். ஆனால் வீட்டில் பயன்படுத்தாமல் சும்மா வைத்திருக்கும் தங்கத்தினை வைத்து சம்பாதிக்க முடியும்.

 அள்ளிக் கொடுக்கும் எஸ்பிஐ.. கடன்களுக்கு அதிரடி வட்டி குறைப்பு.. மக்களுக்கு ஜாக்பாட்..! அள்ளிக் கொடுக்கும் எஸ்பிஐ.. கடன்களுக்கு அதிரடி வட்டி குறைப்பு.. மக்களுக்கு ஜாக்பாட்..!

பாதுகாப்பானது

பாதுகாப்பானது

அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது, வீட்டில் இருக்கும் தங்கத்தினை அடகு வைத்து கடன் பெறுவதை விட, அதனை பாதுகாப்பாக டெபாசிட் செய்து அதற்கு வட்டி விகிதத்தினை பெறலாம். இது உங்களது தங்கத்திற்கு பாதுகாப்பாக அமையும். கூடுதல் அம்சமாக வட்டியும் கிடைக்கும். இதே வெறுமனே நீங்கள் தங்கத்தினை லாக்கரில் வைத்தாலும் கூட, அதற்காக நீங்கள் தான் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

எஸ்பிஐயின் தங்க டெபாசிட் திட்டம்

எஸ்பிஐயின் தங்க டெபாசிட் திட்டம்

ஆக இப்படி இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல திட்டம் எனலாம். அது எஸ்பிஐயின் தங்க டெபாசிட் திட்டம் (R-GDS ) தான். இந்த திட்டத்தில் முதலில் பாதுகாப்பு என்பது முதல் அம்சமாக பார்க்கப்படும். இதே இரண்டாவது வீட்டில் சும்மா வைத்திருப்பதற்கு பதிலாக வங்கியில் டெபாசிட் செய்தால், வட்டி விகிதமும் கிடைக்கும்.

யாரெல்லாம் டெபாசிட் செய்யலாம்?
 

யாரெல்லாம் டெபாசிட் செய்யலாம்?

இந்த திட்டத்தினை இந்திய குடிமகனான யார் வேண்டுமானலும் இணைந்து கொள்ளலாம். என்ஆர்ஐ-களுக்கு இந்த ஆப்சன் கிடையாது. எனினும் குடும்பத்தினர் இந்தியாவில் இருந்தால் டெபாசிட் செய்து கொள்ளலாம். இதே தனி நபர்கள், நிறுவனங்கள் மூலமாகவும், கூட்டு நிறுவனங்கள் மூலமாகவும், hufs மூலமாக டெபாசிட் செய்து கொள்ளலாம்.

எவ்வளவு டெபாசிட் செய்யலாம்?

எவ்வளவு டெபாசிட் செய்யலாம்?

இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 10 கிராம் முதல் டெபாசிட் செய்து கொள்ளலாம். அதிகபட்சம் டெபாசிட் என்பது வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. ஆக உங்கள் வீட்டில் உபயோகமில்லாமல் இருக்கும் தங்கத்தினை இப்படி டெபாசிட் செய்வதன் மூலம், உங்களுக்கு வட்டி வருமானம் கிடைக்கும்.
நீங்கள் டெபாசிட் செய்யும் தங்கமானது தங்க பார்களாகவும், நகையாகவும் இருக்கலாம். எனினும் கற்கள் மற்ற விலையுயர்ந்த உலோகங்கள் கலந்திருக்க கூடாது.

டெபாசிட் வகைகள்

டெபாசிட் வகைகள்

இந்த தங்க டெபாசிட்டில் மூன்று திட்டங்கள் உள்ளன.
1. ஷார்ட் டெர்ம் பேங்க் டெபாசிட் (STBD) - 1- 3 வருடங்கள்
2. மீடியம் டெர்ம் அரசு டெபாசிட் (MTGD) - 5- 7 வருடங்கள்
3. லாங் டெர்ம் அரசு டெபாசிட் (LTGD) - 12- 15 வருடங்கள்

ஷார்ட் டெர்ம் பேங்க் டெபாசிட் (STBD)

ஷார்ட் டெர்ம் பேங்க் டெபாசிட் (STBD)

எஸ்பிஐ-யின் இந்த ஷார்ட் டெர்ம் பேங்க் டெபாசிட் திட்டம் மூலமாக நீங்கள் உங்களது தங்கத்தினை டெபாசிட் செய்கிறீர்கள் எனில்,
அங்கு 1 வருடத்திற்கு - 0.50% வட்டி விகிதமும்
2 வருடத்திற்கு - 0.55% வட்டி விகிதமும்
3 வருடத்திற்கு 0.60% வட்டி விகிதமும் கொடுக்கப்படுகிறது.
இது உங்கள் வீட்டில் வெறுமனே தங்கத்தினை வைத்திருப்பதற்கு பதிலாக இதுபோன்ற டெபாசிட் திட்டமாக வைத்துக் கொள்ளலாம். நீங்கள் திரும்ப இந்த தொகையை பெறும்போது தங்கமாகவும் அல்லது தங்கத்திற்கு சரியான மதிப்பில் தொகையையும் பெற்றுக் கொள்ளலாம்.

மீடியம் டெர்ம் அரசு டெபாசிட் (MTGD)

மீடியம் டெர்ம் அரசு டெபாசிட் (MTGD)

எஸ்பிஐ-யின் இந்த மீடியம் டெர்ம் அரசு டெபாசிட் (MTGD) திட்டம் மூலமாக, தங்கத்தினை டெபாசிட் செய்கிறீர்கள் எனில், 5 - 7 வருடங்களுக்கு வட்டி விகிதம் என்பது வருடத்திற்கு 2.25% ஆகும்.
இந்த திட்டத்தில் இடையில் நகையாகவோ அல்லது பணமாகவோ திரும்ப பெற்றுக் கொள்ளலாம். ஆனால் டெபாசிட் செய்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகே செய்து கொள்ள முடியும். அப்படி பெறும்போது தங்கத்தினையோ அல்லது தங்கத்தின் மதிப்பினை பணமாகவும் பெற்றுக் கொள்ளலாம். முதிர்வுக்கு பிறகும் அப்படியே பெற்றுக் கொள்ளலாம்.

கவனிக்க வேண்டிய விஷயம்

கவனிக்க வேண்டிய விஷயம்

இதில் தங்கமாக திரும்ப பெறும்போது 0.20% கட்டணமாக வசூலிக்கப்படும். நீங்கள் தங்க நகையினை இந்த திட்டத்தில் டெபாசிட் செய்தால், அதனை 7 வருடம் கழித்து தங்க கட்டியாக அல்லது காயினாக தான் பெற முடியும். ஆக நகையை இந்த திட்டத்தில் இணையும் போது இதனை கவனித்துக் கொள்ள வேண்டும்.

லாங் டெர்ம் அரசு டெபாசிட் (LTGD)

லாங் டெர்ம் அரசு டெபாசிட் (LTGD)

எஸ்பிஐ-யின் இந்த லாங் டெர்ம் அரசு டெபாசிட் (LTGD) திட்டம் மூலமாக நீங்கள் உங்களது தங்கத்தினை டெபாசிட் செய்கிறீர்கள் எனில், 12 - 15 வருடங்களுக்கு வட்டி விகிதம் என்பது வருடத்திற்கு 2.50% ஆகும். இந்த திட்டத்தில் முன் கூட்டியே முடித்துக் கொள்ள வேண்டுமெனில், 5 வருடங்களுக்கு பிறகே செய்து கொள்ள முடியும். ஆக இந்த திட்டத்தில் டெபாசிட் செய்யும்போது, இதனையும் கவனத்தில் கொள்வது நல்லது. இந்த திட்டத்திலும் முதிர்வுக்கு பிறகு தங்கமாகவும் அல்லது பணமாக பெற்றுக் கொள்ளலாம். இதிலும் தங்கமாக திரும்ப பெறும்போது 0.20% கட்டணமாக வசூலிக்கப்படும்.

மிகுந்த பயனுள்ள திட்டம்

மிகுந்த பயனுள்ள திட்டம்

ஆக வீட்டில் தங்க காயின்கள் அல்லது தங்க கட்டியாக வைத்திருப்பவர்களுக்கும், தங்க நகையாக வைத்திருப்பவர்களுக்கும் நல்ல திட்டம் தான் எனலாம். எனினும் நகையாக வைக்கும்போது திரும்ப பெறும்போது நகையாக கிடைக்காது என்பதால், உங்களுக்கு எதிர்காலத்தில் நகையாக வேண்டாம் என நினைப்பவர்களுக்கு பொருந்தும். ஏனெனில் புதியதாக நீங்கள் எதிர்காலத்தில் தங்கம் வாங்க நினைத்தால், செய்கூலி, சேதாரம் என பல கட்டணங்களும் இருக்கும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI gold deposit scheme details: check latest interest rate and other details

SBI gold deposit scheme details in Tamil. If you want to invest in your gold, then you can deposit with SBI. SBI’s R- GDS works like FDs
Story first published: Thursday, October 7, 2021, 16:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X