சமீபத்திய மாதங்களாகவே வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்கள் என்பது பெரும் கவனம் பெற்ற திட்டங்களாகவே இருந்து வருகின்றன. குறிப்பாக மூத்த குடிமக்கள் மத்தியில் பெரிதும் ஈர்க்கப்படும் திட்டங்களாக இருந்து வருகின்றன.
குறிப்பாக மூத்த குடிமக்களுக்காக சில வங்கிகள், சிறப்பு டெபாசிட் திட்டங்களையும் அறிமுகம் செய்திருந்தன. இந்த திட்டங்கள் பலவும் மார்ச் 31, 2023 அன்றுடன் முடிவடையவுள்ளன.
வட்டி அதிகரிப்பு
அதில் எஸ்பிஐ, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஐடிபிஐ வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட பலவும் அடங்கும். இந்த வங்கிகளில் உள்ள வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் என்பது உச்சத்தில் உள்ளது. ரிசர்வ் வங்கி தொடர்ந்து பணவீக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றது. இது வங்கிகளின் வட்டி விகிதத்தினை உயர்த்த வழிவகுத்துள்ளது. இதற்கிடையில் தான் பிக்சட் டெபாசிட் திட்டங்கள் என்பது கவர்ச்சிகரமான திட்டங்களாகவும் மாறியுள்ளன.
எஸ்பிஐ-யின் அம்ரித் கலாஷ் வைப்பு நிதி திட்டம்
அந்த காலகட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு இன்னும் உதவும் வகையில் சில சிறப்பான பிக்சட் டெபாசிட் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றில் சில மார்ச் 31 அன்று முடிவடையவுள்ளன. அவற்றில் சில திட்டங்களை பற்றித் தான் பார்க்க இருக்கிறோம்.
எஸ்பிஐ-யின் அம்ரித் கலாஷ் வைப்பு நிதி திட்டம்:எஸ்பிஐ-யின் அம்ரித் கலாஷ் வைப்பு நிதி திட்டத்தின் மூலம், மூத்த குடிமக்கள் 7.60% வரையில் வருமானம் பார்க்க முடியும். இது உள்நாட்டு மற்றும் என்.ஆர்.ஐ வாடிக்கையாளார்கள் அணுக முடியும். இது ஒரு 400 நாள் திட்டமாகும். இந்த திட்டம் பிப்ரவரி 15 அன்று அறிமுகம் செய்த நிலையில், மார்ச் 31 அன்று முடிவடையவுள்ளது.
எஸ்பிஐ வீகேர் டெபாசிட் திட்டம்
எஸ்பிஐ-யில் மூத்த குடிமக்களுக்கான அறிமுகம் செய்யபப்ட்ட திட்டம் தான் வீகேர் டெபாசிட் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் மூத்த குடிமக்களுக்கு 50 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதம் கூடுதலாக கிடைக்கும். இந்த திட்டத்தின் மூலம் 7.50% வரையில் வட்டி விகிதம் கூடுதலாக பெற முடியும். இந்த திட்டமும் மார்ச் 31 உடன் முடிவடைய உள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி - சீனியர் சிட்டிசன் கேர் எஃப்டி
ஹெச்.டி.எஃப்.சி வங்கியில் மூத்த குடிமக்கள் 0.75% கூடுதலாக இந்த சீனியர் சிட்டிசன் கேர் எஃப்டி திட்டத்தின் கீழ் பெறலாம். இது 5 வருடம் மற்றும் 1 நாள் முதல் 10 வருடம் வரையிலான, 5 கோடி ரூபாய்க்குள்ளான டெபாசிட் திட்டத்திற்கு பொருந்தும். இந்த திட்டம் மார்ச் 31 அன்று முடிவடையவுள்ளது.
ஐடிபிஐ வங்கி - நமன் மூத்த குடிமக்கள் திட்டம்
ஐடிபிஐ வங்கியின் நமன் மூத்த குடிமக்கள் திட்டத்திலும் தற்போது வாடிக்கையாளர்கள் கூடுதலாக 75 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை பெறலாம். இதில் 1 வருடம் முதல் 2 வருடம் வரையில் முதிர்வாகும் திட்டங்களுக்கு (444 நாட்கள் மற்றும் 700 நாட்கள் தவிர) வட்டி விகிதம் 7.50% ஆகும். இதே மூன்று ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான திட்டங்களுக்கு 7% வட்டி விகிதமாகும். இதற்கு புதியதாக செய்யப்படும் டெபாசிட்கள் மற்றும் புதுப்பிக்கும் டெபாசிட்கள் என அனைத்தும் பொருந்தும். இந்த திட்டமும் மார்ச் 31 அன்று முடிவடையவுள்ளது.
இந்தியன் வங்கி - இந்த் சக்தி 555 நாட்கள்
இந்தியன் வங்கியின் இந்த் சக்தி 555 நாட்கள் திட்டத்தில் வட்டி விகிதம் 7.50% வரையில் கிடைக்கிறது. இதில் குறைந்தபட்சம் 5000 ரூபாயில் இருந்து டெபாசிட் செய்து கொள்ள முடியும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications