மத்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ ரேட் வட்டி விகிதம் 4.0 சதவிகிதமாக இருக்கிறது. ஆர்பிஐயின் ரிவர்ஸ் ரெப்போ ரேட் 3.35 சதவிகிதமாக வைத்திருக்கிறார்கள்.
மார்ஜினல் ஸ்டாண்டிங் ஃபெசிலிட்டி ரேட் 4.25 சதவிகிதமாகவும், வங்கி வட்டி (Bank rate) விகிதம் 4.25 சதவிகிதமாகவும் இருக்கிறது.
ரெப்போ வட்டி விகிதங்கள் குறைவாக இருப்பதால், வீட்டுக் கடன் வட்டி விகிதங்களும் சரமாரியாக குறைந்து இருக்கின்றன. கீழே, எஸ்பிஐ வங்கி, யாருக்கு, எவ்வளவு தொகைக்கு, என்ன வட்டி வசூலிப்பார்கள் என்கிற விவரங்களைக் கொடுத்து இருக்கிறோம். இந்த வட்டி விகிதங்கள் எல்லாமே டேர்ம் லோன் அடிப்படையிலானவை.
30 லட்சம் ரூபாய்க்குள்
டேர்ம் லோன் திட்டத்தின் கீழ், எஸ்பிஐ வங்கியின் இ பி ஆர் (EBR - external benchmark based rate) 6.65 சதவிகிதமாக இருக்கிறது. அதோடு 0.35 சதவிகித வட்டியை பிரீமியம் என்கிற பெயரில் வைக்கிறார்களாம். ஆக மொத்தம் 6.65 + 0.35 = 7.00 சதவிகித வட்டிக்கு, 30 லட்சம் ரூபாய் வரை வீட்டுக் கடன் வாங்கலாம். இது மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
30 லட்சம் முதல் 75 லட்சம் ரூபாய் வரை
அதே டேர்ம் லோன் திட்டத்தின் கீழ் எஸ்பிஐ வங்கியின் இ பி ஆர் உடன் 0.60 சதவிகித வட்டியை பிரீமியம் என்கிற பெயரில் வைப்பார்களாம். ஆக மொத்தம் 6.65 + 0.60 = 7.25 சதவிகித வட்டிக்கு, 30 லட்சம் ரூபாய்க்கு மேல் - 75 லட்சம் ரூபாய்க்குள் வீட்டுக் கடன் வாங்கலாம். இதுவும் மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
75 லட்சம் ரூபாய்க்கு மேல்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா டேர்ம் லோன் திட்டத்தின் கீழ், வங்கியின் EBR - 6.65 சதவிகிதத்துடன் 0.70 சதவிகித வட்டியை பிரீமியமாக வைக்கிறார்கள். ஆக மொத்தம் 6.65 + 0.70 = 7.35 சதவிகித வட்டிக்கு, 75 லட்சம் ரூபாய்க்கு மேல் வீட்டுக் கடன் வாங்கலாம். இது மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
கொஞ்சம் கூடுதல் வட்டி - சம்பளம் வாங்காதவர்களுக்கு
சம்பளம் வாங்காதவர்கள், சுய தொழில் செய்பவர்கள் எல்லாம், இந்த எஸ்பிஐ வீட்டுக் கடனுக்கு, அவர்கள் வாங்கும் கடன் அளவைப் பொருத்து மேலே சொன்னது போல வட்டி விகிதங்களைக் கணக்கிடுகிறார்கள். அதோடு கூடுதலாக ஒரு 0.15 சதவிகிதம் வட்டி வசூலிப்பார்களாம். அதே போல மொத்த வீட்டின் மதிப்பில் 80 சதவிகிதத்துக்கு மேல், 90 சதவிகிதத்துக்குள் கடன் வாங்கினாலும் 0.10 % கூடுதல் வட்டி செலுத்த வேண்டி இருக்கும் என்கிறது எஸ்பிஐ வலைதளம்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications