SBI வங்கியில் வீட்டு கடன் வாங்கியவர்கள் அதிர்ச்சி.. வட்டியை உயர்த்தி அறிவிப்பு.. EMI எவ்வளவு உயரும்?

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. இதனால் ஏற்கனவே ஃபுளோட்டிங் முறையில் வீட்டு கடன் வாங்கியுள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் புதிதாக கடன் பெற விண்ணப்பம் செய்திருப்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அண்மையில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது. இதனை தொடர்ந்து எஸ்பிஐ வங்கி பெஞ்ச்மார்க் கடன் விகிதங்களில் 25 அடிப்படை புள்ளிகளை உயர்த்தியுள்ளது. அக்டோபர் 15ஆம் தேதி முதலே இது நடைமுறைக்கு வந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இங்கே வீட்டு கடன் வாங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு கடன் வட்டி 0.25% உயரும்.

SBI வங்கியில் வீட்டு கடன் வாங்கியவர்கள் அதிர்ச்சி.. வட்டியை உயர்த்தி அறிவிப்பு.. EMI எவ்வளவு உயரும்?

பொதுவாக நம் வீட்டு கடன் வட்டி விகிதம் உயரும்போது, கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு வங்கி இரண்டு வாய்ப்புகளை வழங்குகிறது. முதலில் , கடனை திருப்பி செலுத்தும் காலத்தை மாற்றாமல் வைத்துக்கொண்டு, மாதந்தோறும் செலுத்தும் ஈஎம்ஐ தொகையை மட்டும் உயர்த்துவது. அப்படி இல்லை என்றால் மாத ஈஎம்ஐ தொகையை பழையபடியே வைத்துக்கொண்டு, கடனை திருப்பி செலுத்தும் ஆண்டுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது.

Also Read

எஸ்பிஐ வங்கி வீட்டுகடன் வட்டி முன்பு 8%ஆக இருந்தது என வைத்து கொள்வோம், இப்போது அது 8.25% ஆக உயர்ந்திருக்கும். ஒரு நபர் 50 லட்சம் ரூபாய் வீட்டு கடன் வாங்கி இருந்தால் முன்பு இருந்த 8% வட்டியில் மாதம் 41,822 ரூபாய் ஈஎம்ஐ செலுத்தி இருப்பார், ஆனால் 8.25% என திருத்தப்பட்ட வட்டி விகிதத்தில் அவரது ஈஎம்ஐ 781 ரூபாய் உயர்ந்து 42,603 ரூபாயாக அதிகரிக்கும். அதாவது மாதம் தோறும் 781 ரூபாய் கூடுதல் செலவு. இதில் மொத்த வட்டி சுமை 1.87 லட்சம் ரூபாய் அதிகரிக்கும்.

இதுவே ஈஎம்ஐ தொகையை மாற்றாமல் இருந்தால் கடன் காலம் 20 ஆண்டிலிருந்து 21 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும், இதனால் மொத்த வட்டி சுமை 4.96 லட்சம் ரூபாயாக அதிகரிக்கும். எனவே மாத ஈஎம்ஐ தொகையை அதிகரிப்பதன் மூலம் 3.08 லட்சம் ரூபாய் வரை வட்டி செலவை குறைக்கலாம்.

Recommended For You

உங்களுக்கு மாதந்தோறும் கூடுதல் தொகையை செலுத்த வசதி இருந்தால், மாத ஈஎம்ஐ தொகையை அதிகரிப்பதே சிறந்த தேர்வாகும். இது நீண்ட காலத்தில் உங்களின் பல லட்சக்கணக்கான வட்டி பணத்தை மிச்சப்படுத்தும். தற்போதைய மாத வரவு செலவில் கூடுதல் நிதி ஒதுக்க முடியாதவர்கள் கடன் காலத்தை நீட்டிக்கும் வழியை தேர்வு செய்யலாம். இது உடனடியாக நிதி சுமையை குறைத்தாலும், நீண்ட கால அடிப்படையில் மொத்த வட்டி செலவை உயர்த்தும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+