SBI வீட்டு கடன் வட்டி திடீர் உயர்வு! ஏப்ரல்-லேயே வீட்டு கடன் வாங்கி இருக்கலாம்!

கடந்த மார்ச் 27, 2020 அன்று தான் ஆர்பிஐ தன் ரெப்போ ரேட் வட்டி விகிதங்களைக் குறைத்தார்கள்.

ஆர்பிஐ தன் வட்டி விகிதத்தைக் குறைத்த உடன், எஸ்பிஐ தன் EBR - Exernal Benchmark linked lending Rate-ஐ 7.05 சதவிகிதமாக குறைத்தார்கள்.

இப்போது இந்த இபிஆர் வட்டி விகிதத்துக்கு மேல் வைக்கும் மார்ஜின் தொகையை அதிகரித்து இருக்கிறார்கள். அதனால் தான் எஸ்பிஐ வீட்டுக் கடன் அதிகரித்து இருக்கிறது.

ஏன் அதிகரிப்பு

ஏன் அதிகரிப்பு

பொதுவாக கூடுதல் ரிஸ்க் எடுத்து கடன் கொடுக்கும் போது, பிரீமியம் அல்லது ஸ்ப்ரெட் (Spread) என்கிற பெயரில் கூடுதலாக வட்டியை வசூலிப்பார்கள். அது தான் இப்போதும் நடந்து கொண்டு இருக்கிறது. கொரோனாவால் அதிக ரிஸ்க் எடுத்து கடன் கொடுக்க வேண்டி இருப்பதால் மார்ஜின் வட்டி விகிதத்தை அதிகரித்துவிட்டது எஸ்பிஐ வங்கி.

திட்டங்கள்

திட்டங்கள்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் பல்வேறு ஹோம் லோன் திட்டங்கள் இருக்கின்றன. அதில் டேர்ம் லோன் ஓரளவுக்கு நல்ல வட்டி விகிதத்துக்கு வீட்டுக் கடன் கொடுக்கிறார்கள். எனவே, நாம் எஸ்பிஐ டேர்ம் லோன் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்களை மட்டுமே ஒப்பிட்டுப் பார்க்க இருக்கிறோம். மற்ற மேக்ஸ் கெயின் வட்டி விகிதங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

ரூ. 30 லட்சத்துக்குள் (மாத சம்பளதாரர்களுக்கு மட்டும்)

ரூ. 30 லட்சத்துக்குள் (மாத சம்பளதாரர்களுக்கு மட்டும்)

எஸ்பிஐ வங்கியின் இ பி ஆர் (EBR - external benchmark based rate) 7.05 சதவிகிதமாக இருக்கிறது. அதோடு 0.35 சதவிகித வட்டியை பிரீமியம் என்கிற பெயரில் வைப்பார்களாம். ஆக மொத்தம் 7.05 + 0.35 = 7.40 சதவிகித வட்டிக்கு, 30 லட்சம் ரூபாய் வரை வீட்டுக் கடன் வாங்கலாம். ஏப்ரல் 01, 2020 அன்று இந்த திட்டத்தின் கீழ், இந்த கடன் தொகைக்கு வட்டி பிரீமியம் 0.15 தான் வசூலித்தார்கள். எனவே வீட்டுக் கடன் 7.20 %-க்கு கிடைத்தது.

ரூ. 30 - 75 லட்சம் (மாத சம்பளதாரர்களுக்கு மட்டும்)

ரூ. 30 - 75 லட்சம் (மாத சம்பளதாரர்களுக்கு மட்டும்)

எஸ்பிஐ வங்கியின் EBR 7.05 சதவிகிதமாக இருக்கிறது. அதோடு 0.60 சதவிகித வட்டியை பிரீமியம் என்கிற பெயரில் வைப்பார்களாம். ஆக மொத்தம் 7.05 + 0.60 = 7.65 சதவிகித வட்டிக்கு, 30 - 75 லட்சம் ரூபாய் வரை வீட்டுக் கடன் வாங்கலாம். ஏப்ரல் 01, 2020 அன்று இந்த திட்டத்தின் கீழ், இந்த கடன் தொகைக்கு வட்டி பிரீமியம் 0.40 தான் வசூலித்தார்கள். எனவே, வீட்டுக் கடன் 7.45 %-க்கு கிடைத்தது.

ரூ. 75 லட்சத்துக்கு மேல் (மாத சம்பளதாரர்களுக்கு மட்டும்)

ரூ. 75 லட்சத்துக்கு மேல் (மாத சம்பளதாரர்களுக்கு மட்டும்)

வங்கியின் இ பி ஆர் 7.05 சதவிகிதத்துடன் 0.70 சதவிகித வட்டியை பிரீமியம் என்கிற பெயரில் வைப்பார்களாம். ஆக மொத்தம் 7.05 + 0.70 = 7.75 சதவிகித வட்டிக்கு, 75 லட்சம் ரூபாய்க்கு மேல் வீட்டுக் கடன் வாங்கலாம். இது மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏப்ரல் 01, 2020 அன்று இந்த திட்டத்தின் கீழ், இந்த கடன் தொகைக்கு வட்டி பிரீமியம் 0.50 தான் வசூலித்தார்கள். எனவே, வீட்டுக் கடன் 7.55 %-க்கு கிடைத்தது.

சம்பளம் வாங்காதவர்கள்

சம்பளம் வாங்காதவர்கள்

சம்பளம் வாங்காதவர்கள், இந்த எஸ்பிஐ வீட்டுக் கடனுக்கு, அவர்கள் வாங்கும் கடன் அளவு பொருத்து மேலே சொன்னது போல வட்டி விகிதங்களைக் கணக்கிடுவார்கள். அதோடு கூடுதலாக ஒரு 0.15 சதவிகிதம் வட்டி பிரீமியமாக வைப்பார்களாம். எனவே சம்பளம் வாங்குபவர்களை விட, சம்பளம் வாங்காதவர்கள் 0.15 % கூடுதலாக வட்டி செலுத்த வேண்டி இருக்கும்.

பெண் வாடிக்கையாளர்கள்

பெண் வாடிக்கையாளர்கள்

பெண்கள் இந்த வீட்டுக் கடன் வாங்கும் திட்டத்தில் கடன் வாங்க வந்தால், மேலே சொன்ன அனைத்து திட்டங்களில் இருந்தும் 0.05 சதவிகிதம் வட்டி குறைத்து கொடுக்கப்படும் எனச் சொல்லி இருக்கிறது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நிர்வாகம். ஆனால் இந்த வசதி ஜாயிண்ட் கணக்குகளுக்கு உண்டா எனத் தெளிவுபடுத்தவில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+