SBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு! அந்த ஒரு நாள் ஆன்லைன் சேவை தடைபடலாம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவிலேயே மிகப் பெரிய வங்கி என்றால் அது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தான்.

இந்தியாவில் எந்த வங்கிகள் எவ்வளவு வட்டி கொடுக்கிறேன் என்று சொன்னாலும் சரி, எத்தனை புதிய வங்கிகள் வந்தாலும் சரி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா என்கிற பெயரே பலரையும் இன்று வரை சுண்டி இழுத்துக் கொண்டு இருக்கிறது.

அந்த அளவுக்கு இந்திய மக்களுக்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மீதான நம்பிக்கை காலங்காலமாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது. சரி விஷயத்துக்கு வருவோம்.

அறிவிப்பு என்ன

அறிவிப்பு என்ன

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன் வாடிக்கையாளர்களுக்கு என்று ஒரு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டு இருக்கிறது. வரும் 21 ஜூன் 2020, ஞாயிற்றுக்கிழமை அன்று, எஸ்பிஐ வங்கியின் செயலிகளில், சில புதிய டெக்னாலஜி சார்ந்த வசதிகளைச் சேர்க்க இருக்கிறார்களாம்.

தடைபடலாம்

தடைபடலாம்

இப்படி அப்ளிகேஷனில் புதிய வசதிகளைச் சேர்க்கும் போது, ஆன்லைன் பேக்கிங் வசதிகளைப் பயன்படுத்துவதில் கொஞ்சம் சிக்கல் வரலாம் அல்லது ஆன்லைன் சேவை தடைபடலாம் என தன் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்து இருக்கிறது. எனவே எஸ்பிஐ வங்கி சேவைகளை அதற்குத் தகுந்தாற் போல திட்டமிட்டுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தி இருக்கிறது.

பணப் பரிவர்த்தனைகள் வேண்டாம்

பணப் பரிவர்த்தனைகள் வேண்டாம்

எனவே ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்கள், 21 ஜூன் 2020, ஞாயிற்றுக்கிழமை அன்று பணப் பரிமாற்றங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. நாம் பாட்டுக்கு பணப் பரிமாற்றம் செய்யும் போது, இந்த டெக்னாலஜி மாற்றத்தில் சிக்கிக் கொண்டால் பின், பணத்தை திரும்பப் பெற வங்கிக்கு அலைய வேண்டி இருக்கும்.

எஸ்பிஐ வழங்கும் ஆன்லைன் சேவைகள்

எஸ்பிஐ வழங்கும் ஆன்லைன் சேவைகள்

1. பணப் பரிமாற்றம்
2. பில் கட்டணம்
3. டெபாசிட் கணக்குகளைத் தொடங்குதல்
4. வங்கி ஸ்டேட்மெண்ட்களைப் பெறுதல்
5. காசோலை புத்தகத்துக்கு (Cheque Book) ஆர்டர் போடுவது... என பல சேவைகளை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆன்லைனில் வழங்கிக் கொண்டு இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI important announcement to its customers about online banking service

SBI made an important announcement to its customers about online banking service in twitter. 21st June 2020 the sbi will be deploying a new environment for some of its application. so internet banking may not be accessible.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X